;
Athirady Tamil News
Daily Archives

21 July 2024

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்!

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன்…

100 வயதைக் கடந்து வாழும் மக்கள்… கவனம் ஈர்க்கும் ‘ஆரோக்கிய கிராமம்’… சீக்ரெட்…

முற்காலத்தில் மக்கள் நூறு ஆண்டுகள் கூட நோயின்றி நல்ல வாழ்வை வாழ்ந்தனர். ஆனால், இன்று சராசரி வாழ்வு அறுபதை நெருங்கிவிட்டது. மக்கள் தங்கள் வாழ்நாளில் பலமுறை மருத்துவரை சந்திக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது. காலநிலையில் சிறிய மாற்றம்…

பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: சர்வதேச நீதிமன்றம்

இஸ்ரேல் (Israel), பலஸ்தீன (Palestine) பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதும், அங்கு குடியேற்றம் செய்வதும் சட்டவிரோதமானது என்பதால் அதனை விரைவில் திரும்பப் பெற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை, சர்வதேச நீதிமன்றம்…

நேரடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்: ஹவுதிகளுக்கு விழுந்த முதல் பேரிடி

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் மீதான ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாரிய பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது, ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான Hodeidah மீது நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தாக்குதலை இஸ்ரேல்…

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில், வாக்காளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பரப்பும் வகையில் பல செயற்பாடுகள் சமூக ஊடகங்களில்…

மின்சார கம்பியில் சிக்கி பற்றியெரிந்த பாரவூர்தி

தென்னை நார் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மின்சார கம்பியில் சிக்கி தீப்பிடித்ததில் பாரவூர்தியும் தென்னை நார் கையிருப்பும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக உடப்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டிற்கு தென்னை நார் ஏற்றுமதி…

எரிபொருள் விலை மேலும் குறையும்! ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு

சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில் இன்னும் பல்வேறு…

தனி நாடாகும் கேரளா? வெளியுறவுத் துறை செயலாளர் நியமனம் – பாஜக எதிர்ப்பு!

கேரள அரசின் வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். செயலாளர் நியமனம் கேரளா அரசின் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி, வெளியுறவுத் துறை விவகாரங்களையும் கூடுதலாக கவனிப்பார் என அம்மாநில அரசு…

முகக்கவசம் அணியுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி…

விஷேச குணங்கள் கொண்ட அபயன் கடுக்காய்! தமிழர் மருத்துவத்தில் மறந்துப்போன மூலிகை!

கடுக்காய் என்பது பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட தாவரமாகும். இது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு காலத்தில் கிடைத்து வந்தந்து. ஆனால் சில காலங்களுக்கு பிறகு மக்கள் இதை பயன்படுத்துவதை விட்டதால் இந்த தாவரம் அவ்வளவாக இப்போது காணப்படுவதில்லை.…

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் எதுக்கெல்லாம் சிறந்தது தெரியுமா?

ஆலிவ் எண்ணெய்யில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆலிவ் எண்ணெய்…

ட்ரம்பை சுட்ட நபரிடம் இளவரசி கேட்டின் புகைப்படங்கள்: அதிரவைத்த தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்…

நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெட்ரோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் இலாபமானது இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 13.6 பில்லியன் ரூபாவாக 68.7 வீதத்தால் வெகுவாகக் குறைந்துள்ளதாக நிதி, பொருளாதார…

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவருக்கு கிடைத்த அதிர்ச்சி

முன்பின் தெரியாத பெண்ணுடன் டேட்டிங் சென்ற சுவிஸ் நாட்டவர் ஒருவர் திடீரென தாக்குதலுக்குள்ளானதால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். டேட்டிங் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ச்சி சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Winterthur நகரில்…

யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை… மனதை நெகிழ வைக்கும் காட்சி

டயருக்குள் காலை விட்டு மாட்டிக்கொண்ட யானை குட்டியை பதறியடுத்து காப்பாற்றிய தாய் யானை தொடர்பான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வுலகில் தாய் பாசத்துக்கு இணையாக எதுவும் கிடையாது. எந்தவித சுயநலமும் கலப்படமும் இல்லாமல் கிடைக்க…

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சினை: திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிக்கப்பட்டுள்ள விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள்…

கனடாவில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்: மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

கனடாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான கொலையாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கனடாவின் செயின்ட் ஜான்ஸில்(St. John's) 33 வயதான பெண் ஒருவர் கொலை…

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாடு

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில்…

மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனார்-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்(photoes/videoes)

video link- https://wetransfer.com/downloads/7cc5ff24e672ce73ba14ee2f576936a420240721030836/b311d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மருமகனின் தாக்குதலினால் மரணமடைந்த மாமனாரின் சடலம்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும்…

யாழில். ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல்

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட உள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

8 கி.மீ ஓடி மற்றோரு கொலையை தடுத்த மோப்ப நாய் – உயிர் தப்பிய பெண்!

வேறொரு இடத்தில் நடைபெற இருந்த கொலையை காவல் மோப்ப நாய் தடுத்து நிறுத்திய நிகழ்வு நடந்தேறியுள்ளது. மோப்ப நாய் கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் சாலையோரத்தில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

ஒப்படை சமர்ப்பிக்காத மாணவனை தாக்கிய ஆசிரியர்

ஒப்படை சமர்ப்பிக்க தவறியதால் தனக்கு ஆசிரியர் மூர்க்க தனமாக தாக்கினார் என மாணவன் ஒருவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளான் கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனே முறைப்பாடு செய்துள்ளான். பாடம்…

கேரளத்தில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா தொற்று

கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: தனியாா் மருத்துவமனையில்…

சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்வு இல்லை – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழரசுக் கட்சியில் இருக்கிற என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ உணர்ச்சியினாலோ பார்க்க கூடியவர் அல்ல என தமிழ் மக்கள்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அபிவிருத்தி குழு தெரிவு

சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் மேற்கொள்வதாகவும் , அதற்காக 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…

யாழில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி…

யாழ். இளைஞனை கொழும்பில் காணவில்லை

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனை காணவில்லை என யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழுப்பில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைகளின் போது…

கூரையில் அமர்ந்திருந்த சந்தேக நபர்: பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னர்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்ய ஒருவர் முயன்ற விடயம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்தது.…

சீனாவில் நிகழ்ந்த அனர்த்தம் : 11 பேர் பலி பலர் மாயம்

வடமேற்கு சீனாவின்(china) ஷான்சி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில்…

எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி…

யாழில் வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் வரையில் நடைபெற…

முடிவுக்கு வரும் ரஷ்ய- உக்ரைன் போர்: ட்ரம்ப் அளித்த உறுதிமொழி

பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய ரஸ்ய உக்ரைன்(Russia-Ukraine) போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்து உள்ளார். உக்ரைன் ஜனாதிபதி…