;
Athirady Tamil News
Daily Archives

31 July 2024

பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ஏற்பட்ட சர்ச்சை…கோபத்தில் டிரம்ப் கூறியது என்ன…

பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக…

தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தாஜ்மஹால் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.…

இஸ்ரேல் போருக்கு தயாராக உள்ளது: இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர்…

தெற்கு பெய்ரூட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது ஹிஸ்புல்லாவின் மூத்த இராணுவத் தளபதியை இலக்காக கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக…

கொல்லப்பட்ட மூன்று சிறுமிகள்… போர்க்களமான Southport: பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

பிரித்தானியாவின் Southport பகுதியில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட குடியிருப்பு வளாகம் அருகே அமைந்துள்ள மசூதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் காணொளி பொலிஸ் வாகனங்கள்…

தெங்கு செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொள்ள தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,1916 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.…

மூன்று வர்த்தகர்களை ஏமாற்றி பெரும்தொகை மோசடி

மூன்று வர்த்தகர்களை ஏமாற்றி மூன்று கோடியே தொண்ணூற்று நான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பதுலுபிட்டியவில் வசிக்கும் வர்த்தகர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினர்…

புலியிடம் மாட்டிக்கொண்ட காட்டெருமை! கடைசியில் தப்பித்தது எப்படி?

காட்டெருமை ஒன்றினை வேட்டையாட முயன்ற புலி இறுதியில் தலைதெறிக்க ஓடிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமானதாகவும், சுவாரசியமானதாகவும் இருந்தது. இவ்வாறான காட்சிகளை எத்தனை தடவை அவதானித்தாலும் திரும்ப…

விசா முறையில் முறைகேடு: உயர்நீதிமன்றம் சென்ற ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா

தனியார் நிறுவனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிகாரிகளால் நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை…

வடகொரிய ஜனாதிபதியாக கிம் ஜாங் உன்னின் மகள்: கசிந்த தகவலால் பரபரப்பு

வடகொரியாவின் (North Korea) அடுத்த அரசியல் வாரிசாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un ) மகள் ஜு ஏ (Ju-ae) வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் (South Korea) உளவு நிறுவனம் ஒன்று…

செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை

நியூசிலாந்தில் (new zealand) பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்குக் காரணம், அவர் தனது செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் கொழுப்பு கூடி இறுதியில்…

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

ஈரானில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியவற்றின் முன்னாள்…

கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் புயலாக மாறும் கமலா ஹாரிஸ்

தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 7ல் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் புயலாக மாறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கமலா ஹாரிஸின் ஆதரவு கரம் ப்ளூம்பெர்க் செய்திகள் முன்னெடுத்த…

வெளிநாடு ஒன்றுக்கான சுவிட்சர்லாந்து விமான சேவைகள் ரத்து: வெளியான காரணம்

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டுக்கான (Beirut) விமான சேவைகளை சுவிட்சர்லாந்து (Switzerland) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட…

லிட்ரோ விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை…

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது : நாமல் தெரிவிப்பு

அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச ( Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இந்த விடயத்தை…

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (31)…

பிளவுபட்டது மொட்டு : கடும் நெருக்கடியில் ராஜபக்சாக்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்காமல் தனி வேட்பாளரை முன்வைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை தீர்மானித்துள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்படி,…

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

புதிய இணைப்பு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார். பிரபல…

பெண் என்பதால் இன்ஜினியரிங் படிக்க மறுப்பு – ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர்…

நான் பெண் என்ற ஒரே காரணத்திற்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க அனுமதிக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானி நிஹார் சாஜி தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள உள்ள ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 16 வது…

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பொதுமக்களுக்கு ரத்தம் கொடுக்க தயார்: சீமான் அறிவிப்பு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். வயநாடு நிலச்சரிவு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த…

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு 11ஆம் திகதிக்கு…

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தமக்கு அவதூறு ஏற்படுத்தினார், கடமைக்கு இடையூறு…

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 43,000க்கும் அதிகமான மாணவர்கள்…

மகிந்த கட்சியில் இருந்து வெளியேறிய 92 நாடளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான பெயர்…

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மொட்டு…

ஈழத்து சினிமா படைப்பாக உருவாகியிருக்கும் ‘அன்புள்ள திரைப்படத்தின் அறிமுக விழா..!

ஈழத்து சினிமா படைப்பாக உருவாகியிருக்கும் 'அன்புள்ள', 'பறவாதி' ஆகிய இரண்டு முழு நீள திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், கருடன் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ‘அன்புள்ள’ திரைப்படத்தின் அறிமுக விழாவும் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த…

வெனிசுவேலாவின் ஜனாதிபாதியாக மீண்டும் நிக்கோலஸ் மடுரோ: வெடித்தது போராட்டம்!

வெனிசுவேலாவின் (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவுக்கு ( Nicolás Maduro) ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடந்து முடிந்த வெனிசுவேலா ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ…

ரைசியின் மறைவு: ஈரானின் 9 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு

ஈரான் (Iran) நாட்டின் 9-வது ஜனாதிபதியாக மசூத் பேஸஷ்கியான் (Masoud Pezeshkian) பதவியேற்றுள்ளார். பேஸஷ்கியானின் பதவியேற்பு விழாவானது, ஈரான் நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட…

சவுக்கு சங்கரிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை

யூடியூபா் சவுக்கு சங்கரை 24 மணி நேர காவலில் எடுத்த போலீஸாா், அவரிடம் அமைச்சா் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடா்பு குறித்து விடியவிடிய விசாரித்தனா் என சவுக்கு சங்கரின் வழக்குரைஞா் பாலநந்தகுமாா் கூறினாா். தமிழக காவல்துறையில் பணிபுரியும்…

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது

பிரித்தானியாவில் Southport பகுதியில் நேற்று முன் தினம் நடந்த கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் பிள்ளைகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பலர் கண்ணீர் அஞ்சலி குறித்த அப்பாவி பெண் பிள்ளைகள்…

கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் பிரேமதாச

இலங்கையில் செப்ரெம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ…

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் (Colombo) இருந்து வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில்…

23 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றால் விடுவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 23 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களின் வழக்கு 15 விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான்…

ஐரோப்பிய நாடொன்றின் விசா திட்டம்… ரஷ்ய உளவாளிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அச்சம்

ரஷ்ய மற்றும் பெலாரஸ் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை ஹங்கேரி தளர்த்துவதால், உளவு பார்க்கப்படும் இக்கட்டான நிலைக்கு ஐரோப்பா தள்ளப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு நடவடிக்கை ஹங்கேரியின் குறித்த திட்டம் தொடர்பில் ஐரோப்பிய…

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைகளில் சித்தமருத்துவ பீடம் – அமைச்சர் டக்ளஸின் இன்னுமொரு…

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெந்த மற்றும் ஜனாதிபதி…

கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை

கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு நடந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், 2 நாட்களில் 57 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார். வயநாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…