;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!

அமெரிக்க (US) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன் ஈரான் (Iran) மீதான பொருளாதாரத் தடைகளை வியத்தகு முறையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

முன்னாள் அமைச்சரின் மனைவி மீது குற்றச்சாட்டு: துண்டிக்கப்பட்ட மின் – நீ்ர் விநியோகம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்(sanath nishantha) மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

மக்கள் நிராகரித்தால் நாடாளுமன்றம் செல்லமாட்டேன்; சுமந்திரன் தெரிவிப்பு

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்…

கனடா – இந்தியா விரிசல்: ட்ரம்ப் வழங்கிய வாக்குறுதி!

கனடா(Canada) மற்றும் இந்தியாவுக்கிடையிலான(India) உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தீர்த்துவைக்க தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) உதவுவார் என்று இந்திய - அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் தெரிவித்துள்ளார்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (Colombo National Hospital) பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு…

அம்பேத்கர் சிலையை பாமக உடைக்கப் போகிறதா? திட்டமிட்ட சதி – ராமதாஸ் எச்சரிக்கை!

அம்பேக்தரை கொள்கைவழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாமக தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாட்டாளி மக்கள்…

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: ஆலய உறுப்பினர்கள் ரிஐடி விசாரணைக்கு

வவுனியா (Vavuniya) வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (Terrorism Investigation Division) விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா வடக்கு,…

வங்கி கணக்கினை ஆரம்பிக்க முடியாத இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கணக்கை ஆரம்பிக்க முடியாத நிலையில் இன்னும் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய இராணுவம் : ட்ரம்பின் புதிய வியூகம்

உக்ரைன் (Ukraine) போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வகுக்கும் வியூகத்தின் ஒருபகுதியாக பிரித்தானிய (British) இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல்…

நாடாளுமன்ற தேர்தல்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,145 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ (DIG Nihal Talduwa) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது.., இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு

பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மகளிர் ஆணையம் பரிந்துரை பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் – 2024

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 3 ஆவது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (08.11.2024) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா்…

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் -17 பேர் உயிரிழப்பு

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் சவாய்தா நகரில் நேற்று முன் தினம் தினம் (07.11.2024) இஸ்ரேல் இராணுவம் மூன்று ஏவகணை தாக்குதல்களை…

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள்…

சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட "ஸ்வாஹிமானி" 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய…

புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும் – சட்டத்தரணி ஈ.எஸ்.பி கமலரூபன்

சலுகை அரசியலாகவும் , இனவாத அரசியலாகவும் உள்ள அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட்டு , புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 02 இல் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ஈ.எஸ்.பி கமலரூபன்…

மலட்டு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது – பொறியியலாளர் எம்.சூரியசேகரம்

தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் புது பாதையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வறட்டு தத்துவத்தை பேசியும், மலட்டு போராட்டங்களையும் நாம் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பொறியியலாளர் எம்.சூரியசேகரம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தை…

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவு பெருகிறது – அதனை முறியடிக்க சதிகள் நடக்கின்றன

தேசிய மக்கள் சக்தியினரின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு , அவர்கள் தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுவார்கள் எனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவு அளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான்…

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெண்

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த பணியை சூசி வைல்ஸ் (Susie Wiles) வெள்ளை மாளிகையின் 32 ஆவது…

ட்ரம்பின் இரண்டாம் வருகை… கொத்தாக வெளியேற்றப்படவிருக்கும் புலம்பெயர் மக்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். தடாலடி நடவடிக்கை ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவே ட்ரம்ப்…

கர்நாடகம்: 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டை நகரில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. ராஜ் குமார் என்பவருக்கு சொந்தமான 3 மாடிக் கட்டடத்தின் தரைத் தளத்தில் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டிருந்தபோது, முக்கியமான பில்லரை இடித்ததால் 3…

ட்ரம்பின் வெற்றியால் சடுதியாக உயரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின்(elon musk) சொத்துமதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. முன்னதாக 260 பில்லியன்…

இலங்கைக்கு இஸ்ரேலில் இருந்து வந்த செய்தி!

இஸ்ரேலியர்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள துரித நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலிய அரசாஙகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara), இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு…

போர் ஒருபக்கம்… மர்ம நோயால் இறக்கின்ற டசின் கணக்கானவர்கள்: சிக்கலில் ஒரு நாடு

சூடான் நாட்டில் உள்ள அல்-ஹிலாலியா நகரில் 73 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டசின் கணக்கான கிராமங்களில் குறித்த பகுதியானது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் முற்றுகையிடப்பட்டதாக சூடான்…

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்கு 'சமூக தொடர்பு செயலிகளை' பயன்படுத்துவது குறித்து கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி ஜயசுந்தர இது…

பாடசாலை மாணவர்களுக்கு புதிய நிவாரணம் வழங்க திட்டம்

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட…

வலுக்கும் மோதல்! எல்லை மீறும் கனடா – இந்தியா கடும் கண்டனம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் (S. Jaishankar) செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஊடகத்தைக் கனடா அரசு தடை செய்துள்ளது. இந்தியா கனடா (Canada) இடையே மிக மோசமான ஒரு உறவே நிலவி வரும் நிலையில், நிலைமை மேலும் மோசமாக்கும் வகையில்…

வற் வரி குறைப்பு: வெளியானது அரசாங்கத்தின் நிலைப்பாடு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் (VAT) வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார். கம்பஹா -…

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

டொனால்ட் ட்ரம்பின் தைரியம் தன்னை ஈர்த்துள்ளது! வெளிப்படையாக புகழ்ந்து வாழ்த்து…

டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு? வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்…

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு! காரணம் என்ன தெரியுமா

சவுதி அரேபிய (Saudi Arabia) பாலைவனத்தில் வரலாற்றில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில்…

சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸின் (Sunita Williams) உடல் நிலை பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் நலமாக இருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா…

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை…

கொழும்பு துறைமுகத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத்

கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு, துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில்…