;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன் போது, வாக்களிப்பது அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமை,…

அமெரிக்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் : ஐவர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இந்த விபத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்

இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் பிரச்சாரத்திற்கு தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டேன் என கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நியாயம் மற்றும்…

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தவகையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள்…

வெற்றிடங்களாக உள்ள அரச நிர்வாக சேவைகளின் பதவி! வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள பொது நிர்வாக சேவை உட்பட பல்வேறு அரச நிர்வாக சேவைகளில் வெற்றிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 1200க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தந்தை! இளம் பெண்ணின் சர்ச்சைக்குரிய காணொளி

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொர்பிலான இளம் பெண்ணொருவரின் காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து விபத்து ; பலர் காயம்

மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…

வீரர்களுக்கு நன்றி செலுத்தவே ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம்

புது தில்லி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்துவது இந்த நாடு தனது கதாநாயகர்களுக்கு நன்றி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இது தொடர்பாக அவர்…

ஆலயத்தில் வழிபட்ட பெண் மயங்கி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவாலி வடக்கு…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்தக் கோரும் ரணில்

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தெல்கொட பிரதேசத்தில்…

யாழில். ஹெரோயினுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

சீரழிக்கும் சமூக வலைத்தளங்கள் : அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு வருகிறது தடை

சமூக வலைத்தளங்கள் சிறுவர்களை சீரழிப்பதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்டோர், முகநூல்,இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற செயலிகளைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா(australia) மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பில் சட்டம்…

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை நசுக்கியவர்கள் ஜே.வி.பி யினர்

40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? என்பதனை தமிழ் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…

வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு வழங்கிய உணவில் புழு: ஆா்ப்பாட்டத்தில் மோதல்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எஃப்ஐ) நடத்திய ஆா்ப்பாட்டம் மோதலில் முடிந்தது. கேரளத்தின் வடக்கு மாவட்டமான…

அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 12 போட்டியிடுவதாக , சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்…

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே தேவை ; அமைச்சு பதவிகள் அல்ல

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர் பதவிகளை அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்

ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார் யாழ் .…

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: வான்வழி தாக்குதலில் 57 பேர் பலி!

லெபனானில் (Lebanon) இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு…

பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள்…

பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றைய  தினம் (07.11.2024) யாழ்…

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

கனடாவின் (Canada) ரொறன்ரவின் (Toronto) பெரும்பாலான பகுதிகளில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த தகவலை டொரன்டோ பிராந்திய வீட்டு மனை சபை வெளியிட்டுள்ளது. அண்மையில் கனடிய மத்திய வங்கி…

பூமியின் முதல் நிலம் எங்கு உருவானது தெரியுமா? விஞ்ஞானிகள் பகிர்ந்த தகவல்

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில் நிலம் உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் பூமியின் முதல் நிலம் உருவான இடம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் தகவல் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில்…

கனடிய பொருளாதாரத்தை பாதிக்கும் ட்ராம்பின் வெற்றி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வெற்றி, கனடாவின் (Canada)பொருளாதாரத்திற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழக…

வீட்டில் இருந்தே வெளிநாட்டு வேலை – 1மணி நேரத்திற்கு ரூ.5500 சம்பளம் வழங்கும் எலான்…

எலான் மஸ்க்கின் xAI, இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5,500 ஊதியத்தை வழங்குகிறது. வெளிநாட்டு வேலை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.…

ட்ரம்பின் வெற்றி… இளவரசர் ஹரி – மேகன் தம்பதியின் புதிய திட்டம் இதுதான்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், கலிபோர்னியாவில் குடியிருக்கும் ஹரி - மேகன் தம்பதிக்கு சிக்கல் இறுகியுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிபதியாக டொனால்டு ட்ரம்ப்…

ஜனாதிபதியாக இந்த 7 விடயங்களையும் செய்து முடிப்பேன்: டொனால்டு ட்ரம்ப் உறுதி

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், புலம் பெயர்தல், பொருளாதாரம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கொத்தாக நாடுகடத்தப்படுவார்கள் அவரது வெற்றி…

வீடு உடைத்து திருட்டு ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இந்த திருட்டு…

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம்…

அமரன் பட காட்சியால் மாணவர் அனுபவிக்கும் தொல்லை – சாய்பல்லவி என நினைத்து கால்…

அமரன் பட காட்சியால் சென்னை மாணவருக்கு தினமும் 100க்கு மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. அமரன் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த…

தேனுடன் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

மஞ்சள் பொதுவாக கிருமி தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது மசாலா பொருட்களில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேனில் பல வைட்டமின்கள் இருக்கின்றன. மஞ்சள் தீக்காயங்கள் முதல் சிறிய வெட்டுக்கள் வரை பல…

திரிபோஷா தொடர்பில் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

16 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும்… தடை விதிக்க முன்மொழியும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்ய அரசாங்கம் சட்டம் இயற்றும் என பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். தடை செய்ய உரிய நேரம் சமூக ஊடகங்கள் நமது பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன, தடை செய்ய…

முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து ; சீன நாட்டுப் பிரஜை காயம்

நுவரெலியா வெலிமடை - நுவரெலியா வீதியில் முச்சக்கரவண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான 36…

மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்டார்… ஜேர்மானியர் குறித்து ஈரான்…

ஜேர்மானியர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே அவர் இறந்துவிட்டார் என ஈரான் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மானியருக்கு மரண தண்டனை ஜேர்மன்…