;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள்

தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும்…

யாழ்.- சென்னை இடையேயான விமான சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் (Jaffna) - சென்னை (Chenni) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த இந்திய…

உக்ரைனுக்கு AI ட்ரோன்களை வழங்கிய ஜேர்மனி: தீவிரமடையும் போர் நிலைமைகள்!

உக்ரைனுக்கு புதிய AI ட்ரோன்களை ஜேர்மனி வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனுக்கு புதிய ட்ரோன்கள் உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவுக்கு வராமல் தொடர்ந்து குழப்பான சூழ்நிலையில் நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின்…

தேசியப்பட்டியலால் SJB கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் !

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித்…

திருச்செந்தூர் சம்பவம்: நெல்லையப்பர் கோயில் யானை பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கத் தடை

நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை திங்களன்று, பாகன் உள்பட இருவரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயில் யானை, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் களனி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துள்ளார். பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் இலங்கை பொலிஸின் ஆட்சேர்ப்பு…

பெரும் தொகைக்கு ஏலம் போன கடைசி பிரெஞ்சு ராணியின் வைர நெக்லஸ்! வரலாற்று பின்னணி என்ன?

பிரபல பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட்டின் வைர நெக்லஸ் ஏலத்தில் மிகப்பெரிய விலைக்கு விற்பனைக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் ராணி நெக்லஸ் வரலாற்றில் பிரபலமான ராணி மேரி அன்டோனெட்டின் வைர நெக்லஸ் ஏலத்தில் $4.81 மில்லியன் தொகை என்ற மிகப்பெரிய…

புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்; விபரம் உள்ளே!

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் அமைக்கபப்ட்டுள்ளது. அந்தவகையில் நேற்றியதினம் அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை…

ஜேர்மனி-பின்லாந்து இடையே கடலுக்கு அடியில் இணைய கேபிள் பாதிப்பு: காரணம் மர்மம்

பின்லாந்து மற்றும் ஜேர்மனி இடையே இணைய இணைப்பை வழங்கும் C-Lion1 கேபிளில் மர்மமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கேபிள் பின்லாந்தின் மாநிலத்தினால் கட்டுப்படுத்தப்படும் Cinia நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கேபிளின் முக்கியத்துவம்…

கனடாவில் அவசரமாக திரும்பப்பெறப்படும் ஆர்கானிக் கேரட்கள்., மோசமான தொற்று பரவும் அபாயம்

கனடா மற்றும் அமெரிக்காவில் விற்பனையாகிய ஆர்கானிக் கேரட் அவசரமாக திரும்பப்பெறப்படுகிறது. இந்த ஆர்கானிக் கேரட்டில் E.coli தொற்றுபரவுவதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

நவம்பர் 29-ஐ முன்னிட்டு பிரித்தானிய சைபர் பாதுகாப்பு முகமை விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் 29-ஆம் திகதி Black Friday-வை முன்னிட்டு பிரித்தானிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. Black Friday-க்கு முந்தைய ஓன்லைன் ஷாப்பிங் பருவத்தில் மோசடிகள் அதிகரிக்கலாம் என பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு…

எல்ஐசி தளம் மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றம்!

எல்ஐசி தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதால் மக்கள் எல்ஐசி தளத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முன்னதாக, எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழியாக ஹிந்தி…

ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன்…

பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார்.…

நாடாளுமன்ற செலவுகளை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டம்

நாடாளுமன்றத்தில் ஏற்படும் அதிக செலவைீனங்களை குறைப்பதற்காக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வழிநடத்துவதற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில்…

7.44 காரட் வைரத்தை கண்டுபிடித்து பணக்காரரான விவசாயி.., 3 மாதங்களில் இரண்டாவது முறை

வைர சுரங்கத்தில் இருந்து விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து பணக்காரர் ஆகியுள்ளார். வைரம் கண்டுபிடித்த விவசாயி இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள வைர சுரங்கத்தில் இருந்து திலீப் மிஸ்ட்ரி என்ற விவசாயி ஒருவர் 7.44…

இலங்கையில் தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில்(sri lanka) தேங்காய் விலை நாளாந்தம் உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் சந்தையில் தேங்காயின் விலை நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சிறிய தேங்காய் ரூ.140ல் இருந்து ரூ.180-200 ஆக உயர்ந்துள்ளது. வாழ்க்கைச்…

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்

ஜனாதிபதி அனுர தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்…

மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் பைடன்… ட்ரம்பின் மகன் உட்பட பலர் கடும் விமர்சனம்

உக்ரைனுக்கு ஏவுகணை அனுமதி அளித்து மூன்றாம் உலகப் போரைத் தூண்டுவதாக ஜோ பைடன் மீது ட்ரம்பின் மகன் கடும் விமர்சனம் வைத்துள்ளார். இன்னும் உக்கிரமாக்கும் என அச்சம் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகி, அவர் பொறுப்பேற்க…

மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!

சந்தையில் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்கள்…

ஏழரை கோடி ரூபாவுடன் தலைமறைவான சாரதி; திகைப்பில் தனியார் நிறுவனம்

மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதி ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு…

ரவி கருணாநாயக்கவை தூக்கி எறிந்த UNP!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயரைத் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டக்கியதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.…

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்!

ஸ்பேஸ் எக்ஸ் (Space x) நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2…

மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் நேற்று (18) மாலை மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி, மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார். உயிரிழந்த இளைஞன் நேற்றைய…

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற காருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்.., பரபரப்பான வீடியோ

கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழிவிடாமல் சென்ற கார் இந்திய மாநிலமான கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி திருச்சூர்…

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

லெபனானில் (Lebanon) போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் (Israel) இராணுவ ரீதியாக செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்துள்ளார். இது முக்கியமான விடயம் என்றும் கடதாசியில்…

08 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடியாக கைது!

வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 08 பேர், கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஆதியம்பலம், கோவை பகுதியில் சுற்றுலா விடுதியில் வைத்து திங்கட்கிழமை (18)…

இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டம் – சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம், ஆணையின் பின்னணியில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைக்கத் தயார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர்…

மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர்…

எச்சரிக்கை சைரன் ஒலிக்க இஸ்ரேலுக்குள் புகுந்த ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான…

எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததை தொடர்ந்து, ஹிஸ்புல்லா லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்கு சுமார் 100 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரொக்கெட்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு சிலவற்றை இடைமறித்து…

சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடாத்தப்பட்ட…

உக்ரைன் போரில் நேரடியாக அமெரிக்கா: ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிற்குள் (Russia) உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைன் (Uklraine) நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவது போரில் அமெரிக்காவின் (US) நேரடி பங்கேற்பை உருவாக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறித்த விடயத்தை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. 22 அமைச்சர்கள்…

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்ற…