;
Athirady Tamil News
Daily Archives

18 December 2024

NATO-வுடன் நேரடி போர் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளில் NATO-வுடன் நேரடி போர் எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் (Andrei Belousov), அடுத்த பத்தாண்டுகளில் ரஷ்யா மற்றும் NATO இடையே நேரடி மோதல் நிகழ வாய்ப்பு இருப்பதாக…

கனடாவின் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக குறைவு

கனடாவின் வருடாந்திர பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 1.9 சதவீதமாக குறைந்தது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள், குறைந்த அடமான வட்டி செலவுகள் மற்றும் மலிவான சுற்றுலா பயண கட்டணங்களின் சலுகைகள் என Statistics Canada தெரிவித்துள்ளது.…

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

வெளிநாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்… கைதான சுவிஸ் வம்சாவளி…

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் முன்னெடுத்த சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பில் ஈரானிய வம்சாவளி அமெரிக்கரும் சுவிஸ் வம்சாவளி அமெரிக்கரும் கைதாகியுள்ளனர். அமெரிக்கப் படைகள் மீது குறித்த இருவர் மீதும் ஈரானுக்கு முக்கியமான…

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச்…

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (17.12.2024)…

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் சஹாரா அல்ல.., Google கூறிய மற்றொரு இடம்

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா இல்லை என்று கூகுள் அளித்த பதிலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சஹாரா அல்ல உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் என்பது அனைவருக்கும் அறிந்ததே.…

தனியார் கல்வி நிலையங்களின் செயல்பாடுகள்

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற தரம் 9 மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமைகளில் மாலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இடைநிறுத்துவது தொடர்பான முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்க…

பக்கத்து நாட்டுக்கு திகிலை ஏற்படுத்த புடின் இறக்கியுள்ள ராட்சத பலூன் வகை விமானங்கள்

அணுகுண்டு வீசுவதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது பக்கத்து நாடு ஒன்றையும், எதிரணியிலுள்ள மேற்கத்திய நாடுகளையும் பயமுறுத்துவதற்காக புதிய விடயம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார். புடின் இறக்கியுள்ள…

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அழைத்து வர வேண்டும்: வேதநாயகன் கோரிக்கை

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப்…

டொலர் பணத்தாளில் இனி இந்த கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கள்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது. கனேடிய…

மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்… மீண்டும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

ஜனவரி 20ம் திகதிக்கு முன்னர் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்கவில்லை என்றால், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். மோசமான விளைவுகளை காஸா போர் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர்…

யாழ் . நோக்கி வந்த பேருந்து விபத்துக்குள்ளானது – இருவர் படுகாயம் ; ஒரு மணி நேர…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , ,மிருசுவில் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை…

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்தது

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே அதிகாரிகளின் அசமந்தத்தால் இடம்பெற்ற மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்து பலரது உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழின் பிரதான சந்திகளில் ஒன்றானதும்…

எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர்

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…

பரவிவரும் புதிய அம்மை நோய்: ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல்

சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய் ஜேர்மனிக்குள்ளும் நுழைந்துள்ளது. ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல் ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு mpox அல்லது monkeypox என…

சாவகச்சேரி நகர சபையை மூடி போராடிய வர்த்தகர்கள்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகளின் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் , வழங்க வேண்டும் என கோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சாவகச்சேரி நகர…

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

கொழும்பு பல்கலை சட்டப்பீட மாணவர்களால் சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

யாழ் மண்ணில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான தமது விழிப்புணர்வு பயணத்தை The last leaf என்கின்ற கருப்பொருளில் சட்டப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் இலங்கையில் முதன்முதலாக ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…

பருத்தித்துறையில் 2ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றைய…

இணைய வழியில் ‘நீட் தோ்வு? விரைவில் முடிவெடுப்பதாக தா்மேந்திர பிரதான் தகவல்

நீட் தோ்வை எழுத்துத் தோ்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தற்போது ஓஎம்ஆா் விடைத்தாள் வழங்கப்பட்டு…

விளாடிமிர் புடினால் எற்படவிருக்கும் அச்சுறுத்தல்… பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பிரித்தானியாவுக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முதல் முறையாக தகவல் பகிர்ந்துகொண்டுள்ளார். கடற்படை தலைமையகத்தில் நோர்வே மற்றும் பிரித்தானியாவும் புதிய பாதுகாப்பு…

கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இடைநிறுத்தவுள்ள இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை…

இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்று 75 வயது!

இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தந்தை செல்வா நினைவிடத்தில் இன்றைய தினம் (18) காலை 08 மணிக்கு மாலை அணிவித்து அஞ்சலி…

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு…

வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நிலையில் இரு முச்சககர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (16.12) தெரிவித்துள்ளனர்.…

ரஷ்யாவை திணறவைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு

ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக…

இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் 75 சாரதிகளுக்கும் 36 நடாத்துனர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்லங்க தெரிவித்தார். வெற்றிடங்கள் அவை நிரப்பப்படாத காரணத்தால் பல…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் அனைத்து கல்வித் தகுதிகளும் இன்று பாராளுமன்றத்திற்கு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகைமைகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார். “அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பட்டச் சான்றிதழை…

ஜனாதிபதி இலங்கை திரும்பினார்.. ஏர்போர்ட்டில் செல்ஃபி எடுக்கிறார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி அங்குள்ள பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.…

யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு…

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…

குப்பைகளை லொறியில் ஏற்றி கேரளாவில் கொட்டுவோம்.., அண்ணாமலை ஆவேசம்

குப்பைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொண்டு கொட்டுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை பதிவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; பின்தங்கிய குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (17)…

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி

ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின் (என்பிசி) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor…