;
Athirady Tamil News
Yearly Archives

2024

மொட்டு கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும் : ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டு

ராஜபக்சக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு…

இலங்கை பொருளொன்றுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி: கிடைக்கும் பெருந்தொகை டொலர்

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் மாத்திரம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கின்றது என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். தேங்காய் சிரட்டைகளில்…

பில்லியன்களில் இராபம் ஈட்டும் தனியார் வகுப்புக்கள்

இலங்கையில் தனியார் வகுப்புக்களின் மூலமான வருடாந்த புரள்வு சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனியார்…

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த 8 மாணவர்கள் கைதாகியுள்ளனர்.…

நல்லை ஆதீனத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று(23.06.2024) நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார். நல்லை ஆதீன குரு முதல்வர்…

இஸ்ரேல் இராணுவத்தின் மிருகத்தனமான செயல் : ஆரம்பமானது விசாரணை

பலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரின்போது காயமடைந்த…

கள்ளச்சாராயத்தால் சுடுகாடாக காட்சியளிக்கும் கருணாபுரம்., வேதனையில் மக்கள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 20 மேற்பட்டோர் உயிரிழந்த கிராம் கருணாபுரம். பெரும் சோகத்தில் மூழ்கியுள்ள கருணாபுரம் மக்கள், இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகவும், இன்று வரை தொடர்வதாகவும்…

சுகவீன விடுமுறை போராட்டத்தில் வடமாகாண அதிபர்களையும் பங்கேற்க அழைப்பு!

எதிர்வரும் 26ம் திகதி அனைத்து வடமாகாண அதிபர்களையும் சுகவீன விடுமுறை அறிவித்து போராட்டத்துக்கு வலுச்சேர்த்து அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அதிபர் சேவை சங்க வட மாகாண இணைப்பாளர் ஜெ.வோல்வின் அழைப்பு…

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

2006ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வருகை தந்து…

இன்னும் சிறிது நாட்களில் வெளிவரவுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு வாசி கைது-கல்முனையில் சம்பவம்(video)

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு புற…

கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

கனடாவில், வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்புடன்படிக்க செல்கிறார்கள். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுவதால்…

இன்னும் 4 வருஷம் தான் அப்புறம் ஏலியன்ஸ் – பகீர் கிளப்பும் வாழும் நாஸ்ட்ரடாமஸ்

இன்னும் நான்காண்டுகளில் மனிதர்கள் ஏலியன்கள்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதோஸ் சலோமி. வாழும் நாஸ்ட்ரடாமஸ் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, எலிசபெத்மகாராணி மரணம், ட்விட்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள், உக்ரைன் - ரஷ்யா…

50 ஆண்டுகளாக வற்றாத அதிசய கிணறு; ஃபில்டர் நீரை விட அதிக சுவை – எங்கு தெரியுமா?

50 ஆண்டுகளாக வற்றாத ஊட்டா பாவி என்ற கிணற்றை பற்றிய தகவல். ஊட்டா பாவி தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் 'ஓ சாய்' என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள கிணற்றை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலிருந்த 30 கிராம…

அதிகரிக்கும் பிறப்புறுப்பு புற்றுநோய்… ஒரே நாட்டில் 6500 பேர்களுக்கு உறுப்பு நீக்கம்

மிக அரிதானதாக கருதப்படும் ஆணுறுப்பு புற்றுநோய் தற்போது உலக அளவில் அதிகரித்து வருவதாகவும், ஒரே நாட்டில் சுமார் 6500 பேர்கள் உறுப்பு நீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிறப்புறுப்பு…

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கிய சீனாவின் நகரங்கள்..47 பேர் உயிரிழப்பு

சீனாவில் பெய்த கனமழையால் உண்டான வெள்ளத்தில் 47 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தில் கனமழை பெய்ததால், வரலாறு காணாத வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் Pingyuan கவுண்டியில் உள்ள 8…

வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர்

உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார். இது தொடர்பாக அவர்…

சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. யாழில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் இதனைத்…

பொது ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஒரு பொது ஊழியருக்கு எந்தவொரு ஓய்வூதியம் அல்லது கொடுப்பனவுகளுக்கும் முழுமையான உரிமை இல்லை என்று இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், ஓய்வூதியம் பெற மனுதாரர்கள் நீதித்துறை உத்தரவை கோர முடியாது எனவும்…

மன உளைச்சலில் மாணவர்கள்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்…

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், மனித கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும்…

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்ச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ஜூன் 24ஆம் திகதி…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! விரைவில் வெளியாகவுள்ள ரணிலின் அறிவிப்பு

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe)…

இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக முடங்கியுள்ளது. சாலைகளில் வாகனங்கள் ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய…

துஸ்பிரயோக வழக்கில் தீர்ப்பு: சுவிஸில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பம்

சுவிட்சர்லாந்தில் ஊழியர்களை முறையாக நடத்தப்படாதது மற்றும் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஊழியர்கள் ஜெனீவாவில் அமைந்துள்ள தங்களது…

சிவசி இல்லம். யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம்…

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க…

இந்த பழத்தை இப்படி மட்டும் சாப்பிட்டு பாருங்க – சுகர் சர்ருன்னு குறையும்!

நாவல் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. நாவல் பழம் நாவல் பழத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது. நாவல் பழம் தவிர, நாவல் மரத்தின் பட்டை, இலைகளிலும் மருத்துவ குணம் உள்ளதால் இதையும் கூட…

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: பலர் உயிரிழப்பு

இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) போர் நீடித்து வரும் நிலையில் காசாவின் (Gaza) தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு: மீறினால் இலட்சக்கணக்கில் அபராதம்

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை…

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்

தனது தாயும் , சித்தப்பாவும் , தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான் கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து…

யாழ்.இளைஞனிடம் 80 இலட்சம் மோசடி – லண்டன் பிரஜை கைது

லண்டனில் வேலை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்ச ரூபாயை மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வேளை , லண்டனில்…

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரை மோசடியாக உரிம மாற்றம் செய்ய முற்பட்டவர் கைது

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரினை மோசடியான முறையில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து ,…

நெடுந்தீவு இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை பொலிஸாருடன் இணைந்து தேடும் ஊரவர்கள்

நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊர் இளைஞர்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை…

அறிமுகமாகிறது பிங்க் ஆட்டோ..200 பெண் ஓட்டுநர்கள் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பிங்க் ஆட்டோ.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்துடன் தொடங்கின பேரவை, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான…