;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரதமர் அலுவலகத்திலிருந்த மருத்துவ பிரிவு கலைப்பு

பிரதமர் அலுவலகத்திற்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நேற்று (5) கலைக்கப்பட்டது அலுவலகத்தில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் என்பவற்றை…

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்களிப்பு இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற வாக்கெண்ணும் பணி முடிவடைந்து 267 எலெக்ட்ரோல்…

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு வாகனம் சிக்கியது

வென்னப்புவ, மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ​​பதிவு செய்யப்படாத இலக்கத் தகடுகள் இல்லாத டிஃபென்டர் வாகனம் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…

உலக வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல்: முடிவுகள் எப்போது வெளியாகும்!

உலக வல்லரசான அமெரிக்காவின் (USA) ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இலங்கை நேரப்படி நவம்பர் மாலை 4.30 ற்கு ஆரம்பமாகிய வாக்கு பதிவுகள் இன்று காலை 5.30 மணியளவில் முடிவடையும். இந்நிலையில்…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை: அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்கான சீன அரசால் நன்கொடையாக வழங்கப்படுகின்ற பாடசாலை சீருடைத் துணி, பாடசாலை மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு விநியோகித்தலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச்…

ரந்தம்பூர் பூங்காவில் 25 புலிகளைக் காணவில்லை!

ஜெய்ப்பூர்: ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போனதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார். அதிக அளவிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக…

போர் பதற்றத்தின் மத்தியில் முக்கிய அமைச்சரின் பதவியை நீக்கிய நெதன்யாகு! வெளியான காரணம்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை (Yoav Gallant) பதவி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை…

பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியாகவுள்ள வர்த்தமானி

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளைத் தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.…

தேங்காய்க்கு தட்டுப்பாடு என்றால் மாற்றீடு உள்ளது

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக சந்தையில் கிடைக்கும் தேங்காய் பால் பவுடர் அல்லது திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. தேங்காய்…

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

நாட்டில் முன்னெடுக்கப்படும் அரச சேவைகளில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று(05.11.2024) பிற்பகல்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு, பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் (Kamala Harris), குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள்…

யாழில் நித்திரையில் நடந்த சம்பவம்; இளைஞர் உயிரிழப்பால் பெரும் சோகம்!

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது…

இந்தியாவில் நடக்க உள்ள முக்கிய ஆன்மீக நிகழ்வு – முதல் முறையாக கொள்கையை மாற்றிய…

கும்பமேளா நிகழ்விற்காக கூகிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்ப மேளா கும்பமேளா திருவிழா இந்துக்களால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய நான்கு நகரங்களில்…

60 இலங்கைத் தழிழர்களுக்கு பிரித்தானிய வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

பல ஆண்டுகளாக டியாகோ கார்சியா தீவில் சிக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் டியாகோ கார்சியா தீவில்…

கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கம் கோதுமை மா, நல்லெண்ணெய் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விலை…

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

உக்ரைனுக்கு (Ukraine) இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக ரஷ்ய (Russia) பொறியியலாளர் ஒருவருக்கு தேசத் துரோகத்திற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டனில் முகமெடோவ் (32) என்ற இந்த நபர் ரஷ்யாவின் Urals இல் உள்ள…

ஆற்றுக்குள் விழுந்த கெப் வாகனம் ; இருவர் பலி

அவிசாவளை கொஸ்கம - அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் சுமார் 50…

2026 -ல் குடும்ப ஆட்சியை அகற்றி விஜய் ஆட்சி அமைப்பார்: தமிழக வெற்றி கழகம்

2026-ல் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார் என்று தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக…

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றமல்ல

தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும்…

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசியின் விலையை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு யால மற்றும் மஹா பருவத்தில் அரிசி உபரியாக காணப்படும் பின்னணியில் தற்போது…

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 20 பேர் பரிதாபமாக பலி

வடக்கு காசாவில் (Gaza) பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் (Israel) இராணுவம் மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் இடையே நடந்து வரும்…

யாழ். கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம்…

சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் தனது வீட்டில் இருந்து நேற்றைய  தினம் செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சார பணிகளுக்காக…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்(Chandrika Kumaratunga) பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…

பூசணிக்காயை படகாக்கி பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியை சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய பூசணிக்காய் ஒன்றை படகாக பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டியது என்பது இவருக்கு பல வருட கனவு. இந்நிலையில் அவரது கனவை நனவாக்கி கின்ன்ஸிலும்…

கனடாவில் நாணயக் குற்றிகளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நாணய குற்றிகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரிச்மண்ட் அபர்தீன் நிலையத்தில் இந்த நாணயக் குற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. வரையறுக்கப்பட்ட…

ஒரே நாளில் கொல்லப்பட்ட 1410 ரஷ்ய வீரர்கள்: உக்ரைனுக்குள் புகுந்த வட கொரியா ராணுவம்!

வட கொரிய படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் முதல் முறையாக எதிர்கொண்டு இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளை தாண்டி அடுத்தடுத்த கட்டங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

பாதுகாப்பு செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எழுதியுள்ள கடிதம்

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை…

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களை தீப்பிடிக்கச்செய்ய ரஷ்யா சதித்திட்டம்

அமெரிக்கா நோக்கி பறக்கும் விமானங்களில் தீப்பிடிக்கும் சாதனங்களை அனுப்ப ரஷ்யா சதித்திட்டம் திட்டியதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பறக்கும் சரக்கு அல்லது பயணிகள் விமானங்களில் தீப்பற்ற வைத்தல் மூலம் சேதமடையச் செய்ய ரஷ்யா…

போதகர் ஜெரோமை விரட்டியடித்த மக்கள்!

நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் மனநலம் குன்றிய சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் நிர்மாணப் பகுதிக்கு சென்ற போதகர் ஜெரோமின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதனால் அங்கு பதற்ற…

டிசம்பரில் மக்கள் எதிர்பார்க்காதளவு சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும்!

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் எதிர்பார்க்காதளவு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.. மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார…

பிளஸ்டிக் டப்பாவில் ஆண் குழந்தை சடலம்: வீசிச் சென்றது யார்?

பேராவூரணி: பிறந்த ஆண் குழந்தையை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவசத்திரம் காவல் சரகத்துக்கு உள்பட்ட இடத்தில், பிறந்து ஒருசில நாள்களே ஆன ஆண் குழந்தையை பிளாஸ்டிக்…

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள்: அறிகுறிகள், பரவும் விதம் என்னென்ன?

பிரித்தானியாவில் கூடுதலாக 2 Mpox வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் Mpox வைரஸ் பிரித்தானியாவில் கிளேட் 1பி(Clade 1b) வகை mpox வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள 2 கூடுதல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த…