;
Athirady Tamil News
Yearly Archives

2024

மேகாலயா: ஷில்லாங்கில் பேருந்து நிறுத்தம் அருகே குண்டுவெடிப்பு -ஒருவர் காயம்!

வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குடியிருப்புப் பகுதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஷில்லாங் நகர மௌலாங்காட் பகுதியில், ஹரிஜன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில்…

வெளிநாட்டு காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை.!

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் உஸ்பெகிஸ்தான் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.…

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஸ்வீடன் மற்றும் கனடா பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவன நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளன. நிறுத்தப்பட்ட நிதியுதவி ஸ்வீடன்(Sweden) மற்றும் கனடா(Canada) ஆகிய நாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கு(Palestinian refugees) ஆதரவளிக்கும் ஐக்கிய…

பாக்.: மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் குண்டுவெடிப்பு -இருவர் பலி

பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பேஷாவர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் நேற்று (மார்ச். 10) காலை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமான காலநிலை தொடர்பில் இலங்கையில் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளைய தினத்திற்கான இந்த எச்சரிக்கை அறிவிப்பை இன்றைய தினம் (10.03.2024) வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதிக வெப்பம் அதன்படி…

வெடுக்குநாறிமலையில் கைதான எட்டு பேர் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று(10) அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.…

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள்…

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடூனாவில், ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 பள்ளி குழந்தைகளில் குறைந்தது 28 பேர் தப்பி ஓடி விட்டதாக அந்த மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகள் கடத்தல் கடந்த வியாழக்கிழமை கடூனா…

15ஆம் திகதியுடன் நிறைவடையும் கால அவகாசம்: நிதி அமைச்சின் அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களில் நிறைவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்…

பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு

பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக பாக். மக்கள் கட்சி, பாக். முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சிகளின் ஆதரவு வேட்பாளராக ஜர்தாரியும், சன்னி இத்தேகாட் காவுன்சில் கட்சியின்…

ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

தான்சானியா நாட்டின் பெம்பா தீவில் ஆமை கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது. இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம்,…

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணிளும் விடுவிக்கப்படும் –…

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு…

தவெகவில் 50 லட்சம் உறுப்பினர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். செயலி அறிமுகமானதும் அவரின் ரசிகர்கள் பலர் அக்கட்சியில் இணைந்ததைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.…

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, யாழை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய…

பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள்…

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.03.2024) யாழ் மாவட்ட செயலகத்தில்…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள்,…

கனடாவின் இந்த மாகாணத்தில் கூடுதல் சிறைகள் அமைக்கத் திட்டம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறைச்சாலைகள் உருவாக்க்பபடும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ சிறைச்சாலைகளில் அதிக கைதிகள் தடுது;து வைக்கப்பட்டு;ளதனால் அவற்றில் சனநெரிசல் நிலவுகின்றது.…

யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்ற…

யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் இரத்ததான நிகழ்வு 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்றது. குறித்த இரத்த தான செயற்பாடானது காலை 9 மணிமுதல் இரண்டு மணிவரை சிவா விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது 3 பெண்…

யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண் , யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் ,…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும்…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் அங்கஜன் இராமநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம்…

சிலுவைப்பாதை ஆற்றுகை

ஆண்டவருடைய பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றி சிந்திக்கும் இந்த தவக்காலத்தில் அதனை மேலும் சிறப்பித்து மக்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை பாஷையூர் பங்கு கடற்கரையில் சிலுவைப்பாதை ஆற்றுகை இடம்பெற்றது. பாஷையூர் பங்குத் தந்தை…

யாழ். வாசியை கனடா அனுப்புவதாக மோசடி செய்த பதுளை வாசி கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். பணத்தினை கொடுத்தும் நீண்டகாலமாக தனது பயண ஏற்பாடு தொடர்பில் எந்த…

காசாவில் அமெரிக்க பாரசூட் திறக்காததால் 5 பேர் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசாவில் பெரும் உணவுதட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா காசா மக்களுக்கு விமானத்தில் இருந்து நிவாரண பொருட்கள் பாரசூட் மூலம் வீசி வருகின்றது. இந்நிலையில் நிவாரண…

ஹிட்லர்,முசோலினி வரிசையில் நெதன்யாகு : துருக்கி அதிபர் கடும் சாடல்

துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முசோலினியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். "நெதன்யாகுவும் அவரது நிர்வாகமும், காசாவில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து, ஹிட்லர்,…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு..…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா “தேசியத்தின் வலி செல்லும் தமிழன் ஆசியாவைக் கடந்த ஆணழகன் தாய் நாட்டில் நடந்த…

நெல் கொள்வனவு தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல்…

இலங்கையில் கல்வி திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில்…

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் : காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர்…

காசாவில் நாளாந்தம் கொல்லப்படும் பெண்கள் : அதிர்ச்சியளிக்கும் தகவல்

"சர்வதேச சமூகத்தின் மௌனம் பாலஸ்தீனிய பெண்களின் இனப்படுகொலைக்கு பங்களித்துள்ளது" என்று சர்வதேச மகளிர் தினத்தன்று, காசாவின் சுகாதார அமைச்சகம், குற்றம்சாட்டியுள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், காசா பகுதியில்…

யாழில் நடைபெறும் விமானப்படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். இலங்கை…

மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்.., என்ன நடந்தது?

தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்ட சிறுமி தமிழக மாவட்டமான சிவகங்கை தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் வன்னிமுத்து மற்றும் முத்தம்மாள். இந்த…

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றைய…

ஜாஎலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கி சூடானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம…

இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த தமிழ் பெண்

இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பெண் ஒருவர் செய்தி வாசிப்பு பிரிவில் வேலை செய்கின்றார். இலங்கை வரலாற்றில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக நிரஞ்சனி சண்முகராஜா எனும் இடம்பிடித்துள்ளார்.…