;
Athirady Tamil News
Yearly Archives

2024

அதிகரிக்கும் வாகனங்களின் விலை : இறக்குமதி தொடர்பில் எதிர்நோக்கியுள்ள சவால்

வாகன இறக்குமதி நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சம காலத்தில் பாவித்த வாகனங்களின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 24) திறந்துவைத்தார். தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி…

வவுனியாவில் தீ வைக்கப்பட்ட 300 கிலோ கஞ்சா: நீதிபதி இளஞ்செழியன் நடவடிக்கை

வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (24.01.2024) நீதிபதி இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது. சுகாதார நடைமுறை கடந்த வருடம் (2023)…

மீண்டும் முட்டை விலை அதிகரிப்பு

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு…

கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள்

கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தேசிய கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கணக்காய்வு நடவடிக்கைகளை அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர்…

யாழ் இளைஞனின் உயிருக்கு உலைவைத்த போதை ஊசி

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (27) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று (23) கலட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம்…

மாணவனின் மர்ம உயிரிழப்பு -மத்ரஸா குறித்து ஆராய குழு நியமிப்பு

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பான சம்பவம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள…

யேமனில் அமெரிக்கா, பிரிட்டன் மீண்டும் தாக்குதல்

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்…

‘ராமா் கோயில் பிரச்னை: முடிவுக்கு கொண்டுவந்த பாஜக’- இஸ்லாமியர் தரப்பு மனுதாரர் கருத்து

ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ராமஜென்ம பூமி-பாபா் மசூதி வழக்கில் இஸ்லாமியா்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அயோத்தியில் ஸ்ரீராமா் பிறந்த இடமாகக் கருதப்படும்…

அரசாங்கத்திற்கு எதிராக திரும்பிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மனுதாக்கல் செய்துள்ளார். கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்…

மைத்திரி மகள் வீட்டில் திருடர்கள்!

தனது மூத்த மகள் வீட்டில் தங்கக் குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தனர். அந்த வீட்டிலிருந்து பால்…

5,500 புதிய ஆசிரியர்கள் உள்வாங்க நடவடிக்கை!

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைப்பது வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு…

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச அதிபர் செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற '2024 வரவு செலவுத்திட்டம்' கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி திரும்பிய யாழ்பெண்ணுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த…

கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக…

அமெரிக்கா – பிரித்தானியாவுக்கு ஹவுதி விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ஏமன் நாட்டை விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை கண்டிக்கும் முயற்சியில் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக…

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு; பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் – யாத்திரையில்…

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2ஆவது கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதில்,…

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் (24.1.2024)…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வௌளோட்டம் இன்று( 24) காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. நாளை(25) தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இன்றைய கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு…

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…

கனடா பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல்

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ மற்றும் கியூபெக் மாகாய முதல்வர் பிரான்சுவா லெகால்ட் இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு விசாரணையில் தான் கொலை அச்சுறுத்தல் விடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.…

இந்தியாவுடனான மோதல்: மாலைதீவுக்கு நகர்வெடுக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்! அதிகரிக்கும்…

இந்திய மாலைதீவு விவகாரங்களுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலைதீவுக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பலின் நகர்வுகளை இந்தியா உன்னிபப்பாக…

புங்குடுதீவு அமரர்.வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக உலருணவுப்…

புங்குடுதீவு அமரர்.வி.அ.சின்னப்பிள்ளை அவர்களின் பதினான்காம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் பதினான்காவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி வி.அருணாசலம் சின்னப்பிள்ளை.. புங்குடுதீவில்…

தமிழர் பகுதியில் நிகழ்ந்த துயரம் : 13 நாட்களேயான சிசு பரிதாப மரணம்

பிறந்து 13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தைக்கு மாலை வேளை, தாயார்…

ஏழு மீனவர்களுக்கு மரணதண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15.10.2012 அன்று, இலங்கைக்…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசிடமிருந்து பகுதி நேர வேலைவாய்ப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு…

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்விற்கு முன்மொழிவு

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…

பணவீக்கம் அதிகரிக்கும்! மத்திய வங்கி அறிவிப்பு

இந்த மாதம் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை சீர்கேடு போன்ற காரணிகளினால் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக அவர்…

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31-ஆக உயர்வு

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்றுமுன் தினம்  (ஜன.22) காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 47…

கொழும்பில் தமிழர் பகுதி நகைக்கடையில் பாரிய கொள்ளை!

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெலியத்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வானம் மீட்பு

பெலியத்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனாவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (23) காலை தெற்கு அதிவேக…

இலங்கையில் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ள தொடர் படுகொலைகள்

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன. கடந்த 15ஆம் திகதி…

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

தெற்கு அதிவேக வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை…

அயோத்தி ராமரை தரிசிக்க குவிந்த பக்தகோடிகள் : கூட்ட நெரிசலால் அவதி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை தரிசிக்க குவிந்த பக்தகோடிகளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அவதியுறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்  தினம் (22) அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று  முதல்…