;
Athirady Tamil News
Yearly Archives

2024

மற்றுமொரு வரி அதிகரிப்பு: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை நிதி அமைச்சு வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரி அதிகரிப்பு விபரம்…

சவூதிக்கு வேலைக்காக சென்ற பெண்; எஜமான் தாக்கியதில் அங்கவீனத்துடன் திரும்பினார்!

இலங்கையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியாவில் எஜமானாரால் தாக்கப்பட்ட நிலையில், அங்கவீனத்துடன் இன்று திங்கட்கிழமை (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய…

பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து, பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிசுவின் தாய் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை…

திருச்சியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 4 பேர் பலி

திருச்சியில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அரியமங்கலத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. இவரது வீட்டின் சிமெண்ட் கூரை நள்ளிரவு…

வவுனியா – நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்திய நபர் கைது

வவுனியா - நெடுங்கேணி, 17 ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் இடையில் முரண்பாடு…

காசா மீதான போர் பல மாதங்கள் நீடிக்கும் : இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு

காசாவில் ஹமாசுக்கு எதிராக நடக்கின்ற போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும், என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள…

மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்ற சென்னை மக்கள்!

2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை சென்னை மக்கள் கோலாகலமாக வரவேற்றுள்ளனர். புத்தாண்டு நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்தவகையில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து மீண்டுவந்த சென்னை மக்களும்…

புத்தாண்டு அரச சேவை உறுதியுரை ஏற்கும் நிகழ்வு யாழ் நீதிமன்றத்தில் இடம் பெற்றது!

புத்தாண்டின் முதல் நாள் அரச அலுவலர்கள் கடமையை ஆரம்பிக்கும் முகமாக மேற்கொள்ளும் அரசசேவை உறுதியுரை நாடுபூராவும் அரச அலுவலகங்களில் இன்று இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் புதிய ஆண்டில் அரச அலுவலர்கள் கடமை…

யாழில். சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

அதிக உளவு செயற்கைக்கோள்கள், அணு ஆயுதங்கள்:2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா

2024-ஆம் ஆண்டில் அதிகமான ராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்தவும், அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தயாரிக்கவும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இலக்கு நிா்ணயித்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.…

யாழ்.நாகர்கோவில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளது. திங்கட்கிழமை(01) காலை கரையொதுங்கிய நிலையில் அதனை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பொருள் வேறு பகுதிகளில் இருந்து…

பாரவூர்தி மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு..!

பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஊருபொக்க – ருக்மல்பிட்டிய பகுதியில் வீதியை விட்டு…

பேருந்து கட்டண திருத்தத்தில் திடீர் மாற்றம்

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த ஆணைக்குழு இன்று(01) அறிவித்துள்ளது.…

திடீரென மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் – எவ்வளவு…

வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய்…

அச்சுவேலி பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு..!!புகையூட்டும் செயற்பாடு…

அச்சுவேலி பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று(31) மாலை ஞாயிற்றுக்கிழமை புகையூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பொது சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனைக்குட்பட்ட அச்சுவேலி பகுதியில் அண்மைக்காலமாக டெங்கின்…

2024 ஆங்கில புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை…

2024 ஆங்கில புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (01) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. இதன்போது பக்தர்கள் பலரும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள்

யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2024 திங்கட்கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்பாக வாள் வெட்டு!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. துன்னாலை வடக்கை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில்…

வடக்கில் 90 வீதமான குற்ற செயலை கட்டுப்படுத்திவிட்டோம் ; 06 மாதங்களுக்குள் போதை பொருளையும்…

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன…

சீனாவுக்கு விழுந்துள்ள பேரிடி

2023-ஆம் ஆண்டு சீனா பங்குச் சந்தையில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டு பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் ரியல்…

எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் –…

எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் என பாடகி அசானி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வருகை தந்த அசானி , யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே , ஊடகங்களுக்கும் தனக்கு…

ஆங்கிலப் புத்தாண்டு 2024 – முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தமிழக அரசியல் கட்சித் தலைவர் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். புத்தாண்டு உலக நாடுகள் அனைத்தும் ஆங்கில புத்தாண்டை (2024) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதலே மக்கள் புத்தாண்டை கோலாகலமாக…

முல்லைத்தீவில் கத்திக்குத்துக்கிலக்கான குடும்பப்பெண்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்ற குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் கடும்ப பெண் படுகயாமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான…

புது வருடப் பிறப்பில் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டது!

வற் வரி திருத்ததிற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபானங்களின் விலையில் இன்று (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம்…

நெடுங்கேணியில் வீட்டைக் கொழுத்தியவர் கைது

நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த…

தெஹிவளை கடற்பரப்பில் மிகப்பெரிய ஹோட்டல் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

டுபாயில் தலைமறைவாகியுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக், தெஹிவளையில் பாரிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை கடற்கரையோரத்தில் பிரபல ஆசிரியர் ஒருவரின் பெயரில் இந்த ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக…

2024 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் பதிவு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று(01) ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான…

சர்வதேச ரீதியில் பிறந்தது புத்தாண்டு : முதலில் வரவேற்றது எந்த நாடு தெரியுமா

புத்தாண்டை (2024) வரவேற்ற உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்து விளங்குகின்றது. அந்தவகையிலே, நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையொட்டி அந்நாட்டில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதியில்…

வவுனியாவில் பெரும் சோகம் : காய்ச்சலால் இளைஞன் திடீர் மரணம்

வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களா காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக…

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இதுவரை மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ருஹுணு குமாரி ரயில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு பெலியஅத்த…

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்: பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்…

ஐ ஓ சி, சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று (2024.01.01.)அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால்…

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

அரசாங்கம் VAT வரியை அதிகரித்த போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் நாளை முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள…

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.…