;
Athirady Tamil News
Yearly Archives

2024

மில்டன் புயலை துரத்திய விமானம்… இதயம் நின்று போன தருணம்: அடுத்து நடந்த பதறவைக்கும்…

புயலை ஆய்வு செய்யும் குழு ஒன்று விமானத்துடன் மில்டன் புயலின் நடுவே சிக்கி, உயிர் தப்பிய பதறவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. விமானத்துடன் மில்டன் புயலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்னும் சில மணி நேரத்தில், மணிக்கு 160…

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் : வெளியான தகவல்

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால (Udayanga Hemapala) குறிப்பிட்டுள்ளார்.…

கவனம் ஈர்த்த ஜிலேபி; பார்சல் அனுப்பிய பாஜக – பின்னணி என்ன?

ஜிலேபி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜிலேபி விவகாரம் ஹரியானா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஹோகானா என்ற இடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ஜிலேபி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றின் உத்தரவு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை…

லேபர் கட்சியின் ஆட்சி… நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லேபர் கட்சியின் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ளனர் இருப்பினும் புகலிடக்கோரிக்கை…

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள்…

ஒரே ஒரு காரணம்… சார்லஸ் மன்னரை நேரில் சந்திப்பதை ரத்து செய்த ரத்தன் டாடா

தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் ரத்தன் டாடா, முன்னர் சார்லஸ் மன்னர் அளிக்கவிருந்த உயரிய விருதை ஏற்க மறுத்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் பெரும் கோடீஸ்வரர் ரத்தன் டாடா…

ஓமந்தையில் காணி பிணக்கு காரணமாக வாள்வெட்டு: ஒருவர் மரணம்- மேலும் ஒருவர் படுகாயம்

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்…

மாவையின் காலில் விழுந்த சிறிதரன்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். தமிழரசு கட்சி, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றைய தினம் வியாழக்கிழமை…

’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் ஜேசன் டுடேஷ் என்பவர் எழுதி, மைக்கேல் போல்ஸ் என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டு, 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஹாரிஸின் 20 வருடக் கால பொதுவாழ்க்கையில் நடந்த விடயங்கள் இந்த…

ஆடையால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள்

அமெரிக்காவில் ஆடை விவகாரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என இளம்பெண்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்…

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் பின் சிறிரெலோ…

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார். சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவலின் இரண்டு வங்கி கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

மருத்துவர் அருச்சுனாவும் தேர்தலில் குதிப்பு; யாழில் கட்டுப்பணம் செலுத்தினார்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட Dr. அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்றது. அதேவேளை சாவகச்சேரி…

இலங்கை கடவுச்சீட்டுக்களில் வரும் மாற்றம்!

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி…

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை! மக்கள் அஞ்சலி

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு இன்று மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அரசு மரியாதை ரத்தன்…

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் – இனி QR கோடு மூலம் புகார் அளிக்கலாம்!

பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க “அச்சம் தவிர்” என்ற தனித்துவமான QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது. பாலியல் துன்புறுத்தல் சமீபகாலமாக 10 மாத குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை பா…

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10.10.2024) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)…

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை…

சிறைச்சாலை பல பாடங்களை கற்று தந்தது – அருச்சுனா இராமநாதன்

சிறைச்சாலை எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் வைத்தியசர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தினை…

வன்னியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்தது!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய…

கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய மாலி

மாலியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்கள், ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்னர் படை கடந்த சூலை மாதம் அல்ஜீரியாவுடனான மாலியின் எல்லைக்கு அருகில் ரஷ்யாவின்…

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! 6 பேர் வரை காயம்

இஸ்ரேலிலுள்ள ஹடிரா நகருக்குள் புகுந்த ஆயுததாரிகள் பொதுமக்கள் மீது நடத்திய கூரிய ஆயுத தாக்குதலில் 6 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்றையதினம் (09.10.2024) இடம்பெற்றுள்ளது.…

ரூட் தல விவகாரத்தால் நேர்ந்த கொடூரம்.. பயங்கர தகராறு – மாணவர் உயிரிழப்பு!

ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரூட் தல.. சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே…

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் -…

இஸ்ரேலுக்கு அமெரிக்கா சொன்ன தகவல்: அவசரமாக திட்டத்தை மாற்றிய நெதன்யாகு

ஈரான் (Iran) அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், இஸ்ரேல் (Israel) தனது தாக்குதல் திட்டத்தை முற்றாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியாதாக வெளியான தகவல்களானது,…

குறும்பட திரையிடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன. போரில் தன் உறவுகளை இழந்து அவர்தம்…

யாழ். தேர்தல் மாவட்ட தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், க. இளங்குமரன்,…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இருந்து நேற்றைய தினம்…

காசா பேரவலம்…42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

கடந்த ஆண்டு ஒக்டொபர் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பில் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

டெங்கு களத்தரிசிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி கிராம…

நெடுந்தீவில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்றைய…

சுன்னாகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி

சுன்னாகம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

அம்பாறை மாவட்டத்தை 'வே....வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.…