இடி, மின்னலின் போது என்ன செய்யக் கூடாது? (கட்டுரை)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு அருகே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிகக் கனமழை மற்றும் இடி மின்னலின் போது, வெளியில் செல்ல நேரிட்டால், அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், இடி அல்லது மின்னல் தாக்கும் போது, வெளியில் நிற்கு நேரிட்டால், குதி கால்களை ஒன்று சேர்த்து தலை குணிந்ந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் தரையை ஒட்டி அமர்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கும்போது, மின்னலின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தரையில் சமமாக படுக்கக் கூடாது என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
மமேலும், இடி, மின்னலின் போது பலரும் ஒன்றாக வெளியில் நிற்க நேரிடும். அப்போது, ஒருவரோடு ஒருவர் சேர்ந்து நிற்கவே கூடாது. அவ்வாறு ஒன்றாக நிற்காமல், குறைந்தபட்சம் 100 அடி இடைவெளி விட்டு தரையில் மேற்சொன்ன நிலையில் அமர்ந்து கொள்ளலாம்.
குடையைப் பயன்படுத்தக் கூடாது. மின்னல் தாக்கும்போது, திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.