அதை அறிந்துகொள்ள 10 அறிகுறிகள்… !! (கட்டுரை)
ஒருவரது மனதை அறிவது தான் மிகவும் கடினமானது. எந்த ஹேக்கர்கள் நினைத்தலும், காதல் கொண்டிருக்கும் ஓர் மனதினுள் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாது. காதலிப்பவர்களின் மனது கடலில் மிதக்கும் கட்டுமரம் போல, அது எப்போது, எந்த திசையை நோக்கி பயணிக்கும் என கணிக்க முடியாது.
ஒருவேளை உங்களுடன் பழகும் நபர், நண்பர், பணிபுரியும் ஒருவர் உங்களை காதலிக்கிறாரா? என உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், அவர்களிடம் தென்படும் இந்த பத்து அறிகுறிகளை வைத்து அறிந்துக் கொள்ளலாம்…
அறிகுறி # 1
எப்போது பேசும் போதும், செல்ஃபீ எடுக்கும் போதும் உங்கள் அருகிலேயே நிற்க முயல்வார்கள்.
அறிகுறி # 2
பேசும் போதும், எங்கேனும் நிகழ்வில் இருக்கும் போதும், அவர்கள் முகம் மட்டுமின்றி, உடலும் கூட உங்களை நோக்கியே திரும்பி இருக்கும்.
அறிகுறி # 3
நீங்கள் சில நிமிடங்கள், சில நொடிகள், சில மணி நேரம் பேசினாலும், கூட அவர்களது கண்கள் உங்கள் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கும்.
அறிகுறி # 4
நீங்கள் அவர்களை பார்க்காத போதிலும் கூட, அடிக்கடி உங்களை பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
அறிகுறி # 5
வெட்கம்! ஆம், நீங்கள் பேசும் போது, கிண்டலடிக்கும் போது கன்னம் சிவந்து ஓர் வெட்கம் கலந்த புன்னகை வெளிப்படும்.
அறிகுறி # 6
எப்போது அலுவலகம் / எந்த இடத்தில் இருந்து வெளியேறினாலும், உங்களை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு தான் செல்வார்கள்.
அறிகுறி # 7
அவர்கள் உங்களிடம் பேசிய பிறகு, உங்களது முக பாவனை எப்படி இருக்கும், நீங்கள் சிரிப்பீர்களா, முறைப்பீர்களா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
அறிகுறி # 8
தேவையே இல்லாமல், உங்களை தொட்டு, தொட்டு பேசுவார்கள், தோள்களில் அடிப்பார்கள்.
அறிகுறி # 9
பேசும் போது உங்களது கைகளை பற்றிக் கொள்ள விரும்புவார்கள். அதற்காகவே நீங்கள் முக்கியமாக அல்லது உணர்ச்சிபூர்வமாக பேசும் போது உங்கள் கையை பற்றிக் கொள்வார்கள்.
அறிகுறி # 10
காரணமே இல்லாமல், நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்டு, சிரித்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுடன் பேசும் போது சுவற்றில், டேபிள் போன்ற ஏதேனும் மீது சாய்ந்துக் கொண்டே பேசுவார்கள்.