சீனாவின் குள்ளநரித்தனம்!! (கட்டுரை)
இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன.
இலங்கையின் மோசமான நிலைமைக்கு பல்வேறான காரணங்கள் கூறப்படுகின்றன. சரிந்து வரும் ரூபாவின் மதிப்பு, குறைந்து வரும் அன்னிய கையிருப்பு உள்ளிட்டவை பிரதான காரணங்களாகுமென கூறப்படுகின்றது.
இலங்கைக்கு ஏற்பட்டிருந்தும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமையின் விளிம்பில், லெபனான், ரஷ்யா, சுரினாம் மற்றும் சாம்பியா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆஜெர்டினா, உக்ரேன், கானா, எஃப்து, துனிஷியா, கென்யா, எத்தியோப்பியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளாக சில நாடுகளை குறிப்பிடலாம்.
பாகிஸ்தானை பொறுத்தவரையில், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நாடும் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டொலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது.
உண்மையில் என்ன தான் காரணம்?
இலங்கையின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையில் என்னதான் காரணம் என்பது தொடர்பில், இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அங்கு ஒரு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது என்றார்.
சீனா தான் காரணம்
அங்கு அடுத்த ஜனாதிபதியாக யார் வரப்போகிறார்கள் அல்லது இராணுவ ஆட்சி அன்மையுமா? அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையும் பதற்றமும் ஒரு புறம். மறுபுறம் இலங்கையின் இந்த தீவிர பிரச்சனைக்கு சீனா ஒரு முக்கிய காரணம் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சீனாவின் கடல் வலையில் சிக்கியதே இலங்கையின் சரிவுக்கு முக்கிய காரணம் என ஒரு தரப்பு கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றது.
சீனாவின் குள்ளதரித்தனம்
இலங்கை மட்டும் அல்ல, பாகிஸ்தானும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் மூலம் சீனாவின் குள்ளதரித்தனத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல தரப்பும் தெரிவித்து வருகின்றன. சீனா தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடனை வாரி வழங்கியுள்ளது. குறிப்பாக தெற்காசியாவில் மட்டும் சீனாவில் இருந்து கடன் தொகை 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சீனா தான் காரணமா?
சீனாவின் இந்த கடன் பிரச்சனைக்கு மத்தியில், இது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாகவும் இலங்கையில் உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரான அசோக் காந்தா, இலங்கையின் கடன் பிரச்சனை அதிகரிக்க சீனாவின் கடன் தந்திரம் மேலும் கடனை அதிகரித்துள்ளது. எனினும் முழுமையாக சீனாவால் உருவாக்கப்படவில்லை. இது 1948ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஆனால் தற்போது இலங்கைக்கு உதவ சீனா முன் வரவில்லை என்றார்.
முக்கிய காரணம் சீனா
இலங்கையின் நெருக்கடிக்கு முழுமையாக சீனா காரணம் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக சாத்திய மற்ற திட்டங்கள் மேற்கொண்டு இலங்கையில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு கடனை தள்ளுபடி செய்வதற்கால்க சீனாவின் மெர்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கையின் ஒரு துறைமுகத்தினை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது சீனாவின் கடன் பொறி திட்டத்திற்கு ஒரு முக்கிய உதாரணம் தான்.
ராஜபக்ஷ தான் முக்கிய காரணம்
இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில் மாலதீவு தப்பி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூருக்கும் தப்பி சென்றார். எனினும் மக்களின் பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில், பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் என மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
முக்கிய காரணங்கள்
தவறான பொருளாதார கொள்கைகள், அரசியல் சார்பற்ற பிரச்சனைகள்,ஊழல், தவறான நிர்வாகம் என பல காரணிகளுக்கும் மத்தியில், கொரோனா பெருந்தொற்று என பல காரணிகளுக்கு மத்தியில் மக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர் என கூறுகின்றார். மொத்தத்தில் அரசின் தவறான கொள்கை, சீனாவின் ராஜதந்திரம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.