தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? (கட்டுரை)
-துஷ-
பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர் பெறுமா? தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? சிலர் நம்பிக்கை
இழந்துவிட்டார்கள். பலர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள்.
எனக்கு அவன் சூட் ஆகுமா? ஏனடி பிள்ளை அப்படி செல்லுறாய்
எனக்கு அடுத்த வருசம் யுனிவேசிற்றி முடியுது.. இந்த பையனுக்கு அட்வான்ஸ் லெவல் கூட இல்லை.. வும்மா ஒவ்வீஸ் வேலைதானே?
ஆனால் அவன் நல்ல குணமான பிள்ளையல்லோ
நல்லபிள்ளைப்பட்டம் கார் பில்லையும் கறண்ட் பில்லையும் கட்டுமோ அம்மா?
இன்று பதில் சொல்லியாக வேண்டும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’
இல்லை என்றால் இந்த மூன்று மாதப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு மூன்று நிமிடத்தில் முடிவுகட்டி விடலாம். ஆனால் ஆம் என்றால் அடுத்த முப்பது அல்லது ஜம்பது வருட தாம்பத்தியத்துக்கு அவளும் அவனும் தயாராக வேண்டும்.
வந்த இடம் பெரிய இடம். ஊரில் மட்டும் இல்லாது சுவிசிலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற குடும்பம் பையனது.
பெணிணின் தாய் தகப்பனுக்கு எப்படியும் மகள் அனுவை சம்மதிக்க வைத்து இதை முடித்து விட வேண்டும் என்ற ஒற்றைக் காலில் நின்றார்கள்.
ஆனால் அனுவை சம்மதிக்க வைப்பது தாய் தகப்பனுக்கு பெரியபாடாய் இருந்தது.
அவள் செல்லுற உந்த பெமிஸ்றி பிசிக்ஸ் எல்லாம் எங்களுக்கு விளங்காது. நீ ஊரிலை இருந்து கொம்மாவை ஒரு மூன்டு மாதம் கூப்பிடு. கிழவிஏதும் மதையள சொல்லி அவளின்ரை மனதை மாத்தும்… (தெடரும்..)