இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான மன்னார் மறுமலர்ச்சியின் ஆரம்பம்!! (கட்டுரை)
துஷ்யந்தன்.உ
இலங்கையின் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது நாட்டை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை இலங்கை மாறிமாறி வருகின்ற அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொள்வது ஒருவிடத்தினை மட்டுமே கூறிநிற்கின்றது நாங்கள் புதிய புதிய திட்டங்களுடன் வருவோம் நாங்கள் ஊழல் மற்றும் நாட்டினை அடிபாதாளத்துக்கு கொண்டுசெல்வோம் என்பதனையே அவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர்.
தமிழ் பூர்வீக நிலங்களில் தொடரும் ஆக்கிரமிப்புக்களும் இராணுவ மயமாக்கலும் பெரும்பான்மை மதத்தின் வெறுக்கத்தக்க ஆக்கிரமிப்புக்களும் இன்றும் தொடர்ச்சியாக திட்டமிட்டவகையில் நடைபெற்று வருகின்றமை காணக்கூடியதாகவுள்ளது. வீழ்ந்து கிடக்கும் நாட்டினை கட்டயெழுப்புவதற்கான திட்டங்களை தமது பெய்யான திட்டங்களின் ஊடாக மக்களினை கவர்தலும் மக்களினை தொடர்சிசியாக ஒர் பதட்டமான தன்மையில் வைத்திருப்பதற்கும் என மதம்சார் பிரச்சனைகளை அல்லது தேசிய இனப்பிரச்சனையினை தீர்க்காமல் முன்னுக்கு பின் வாதங்கள் மற்றும் வெறுக்கதக்க விடயங்களை அரசியல்வாதிகள் தெருவித்துகொண்டே உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
காலம் காலமாக அரசாங்கம் மாறிமாறி வந்தாலும் அவர்கள் கூறும் அபிவிருத்தி மற்றும் நீண்டகாலதிட்டங்கள் அனைத்தும் வெறும் பேச்சு மாத்திரமே அல்லது புத்தகவடிவில் மாத்திரமே என்பதை இளம் சமூதாயத்தினர் அறிவார்கள் எனவே தான் 2022ஒரு மாபெரும் போராட்டம் அனைத்து கிராமங்களிலும் ஏற்பட்டு தலைநகரான கொழும்பில் சனாதிபதி மாளிகை மற்றும் செயலகம் போராட்டகாரர்களால் சுவீகரிக்கப்பட்டு ஒரு மாற்றம் ஏற்பட்டது. தொடச்சியாகவும் இளைஞர்கள் தமது நாட்டினை பற்றிய அக்கறையில் செயற்படுகின்றனர்.
கடன்களும் உடன்படிக்கைகளும் மக்களுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தாது தன்னிச்சையான தீர்மானங்களின் ஊடாக பாரிய நட்டங்களினையும் பொருளாதார மந்த நிலையினையும் மேற்கொண்டு அனைத்து மக்களினது வாழ்வை நிச்சயதன்மையற்ற நிலையில் கொண்டு சென்ற ஊழல் அரசியல் மற்றும் நிர்வாக மோசடிகளினையும் யாவரும் அறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்தகாலங்களில் பெற்ற அனுபவங்கள் சிலவற்றறை பறைசாற்றுகின்றது. அதாவது போராட்டம் அல்லது மக்கள் எழுச்சியின் ஊடாகவே மறுமலர்ச்சியினை ஏற்படுத்த முடியும் என்கின்ற விடயத்தினை நாங்கள் சிந்திக்க வேண்யுள்ளது.
எமது வளங்களை சுவீகரித்து ஊழல் மற்றும் மோசடிகள் ஊடாக படைபலத்தினை துஸ்பிரயோகம் செய்து நாட்டினை வீழ்த்தியவர்கள் ஒரே இரவில் இதனை மேற்கொண்டார்களா? என்றால் இல்லை பல வருடங்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தன் விளைவினையே நாம் இன்று எதிர்கொள்கின்றோம். இதில் அதிகாரிகள் முதல் பொறுப்புவாந்தவர்கள் ஏன் செயற்படவில்லை? முட்டாள்துவமானது, பலவந்தமான அனைத்து தரப்பினரிடத்திலும் திணிக்கப்பட்டமையும் சிந்திப்பதற்கு அல்லது முடிவெடுக்க தவறியமையே!
இவ்வாறான நிலையில், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டுவரும் கனியவள அகழ்வு என்ற விடயம் மிக முக்கியமானதாக பார்க்கவேண்டும். ஏனெனில் நாட்டின் பொருளாதார வளம் மற்றும் பிரதேச மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளமையும் பாரிய அழிவின் விளிம்புகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி மற்றும் மேட்டு நில பயிற்செய்கையினையும் தீவினையும் அழிவிற்கு கொண்டு செல்லக்கூடியதாக காணப்படுகின்றது. இவ் கனியவள அகழ்வு ஒர் ஊழலின் ஊடாக மோசடியினை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடகவே பார்க்க வேண்டியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பொருட்படுத்தாது மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்காது நாட்டினைப்பற்றிய உயரிய கொள்கையினை பின்பற்றாது மேற்கொள்ளும் இவ் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் எழுந்துள்ளார்கள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இதில் ஊழல் மோசடி மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவற்றை மீறியுள்ளமையும் குறிப்பிட்த்தக்கது.
இவ்விடயங்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் விழிப்புணர்வுகள் கலந்துரையாடல்கள் போன்றவை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் எதிர்பினை தெருவித்துவரும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தகவிடயம் எனினும் மக்கள் இது தொடர்பாக குழுவாக செயற்பட்டு தமது முழு எதிர்பினையும் காட்டியவண்ணமுள்ளனமையும் முக்கியமானது.
தற்பொழுது ஆரம்பித்துள்ள புதிய ஒரு விடயத்தினையும் இனைத்துக்கொண்டு செல்ல வேண்டிய காலத்தில் மன்னார் மாவட்ட மக்கள் காணப்படுகின்றனர். வடக்க கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் மீன்பிடி விடயங்கள் இவையும் தேசிய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதற்கான உரிமைகளை மீறும் செய்பாடாக காணப்படுகின்றது. ஏன் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பாக கடற்படையினர் அசமந்த போக்கில் காணப்படுகின்றனர்? இது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக எமது குரலினை கொடுக்கவேண்டியவர்களாகவும் எமது நாடு என்றவகையில் ஒருமித்தவர்களாக நாட்டின் மறுமலர்சிக்கு மன்னாரின் பங்கு என்பது மிக முக்கியமானது. மன்னாரின் மறுமலர்ச்சியின் ஊடாகவே மக்கள் எழுச்சியின் ஊடாக மன்னாரின் கனியவளச்சுரண்டல்கள் இந்திய மீனவர்கனின் அத்துமீறல்கள் மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தும் காற்றாலைகளின் அமைபிடங்களை மாற்றுதல் என்பன ஏற்படுத்த முடியும்.
உள்ளூராட்சிக்குட்பட்ட ஒரு சிறு கிராமத்தை,
சனசமூக நிலையம் (சிவில் சமூக நிறுவனம்) ஒன்று பொறுப்பு எடுத்து அக்கிராமத்தை இலங்கையின் மிகச்சிறந்த மகிழ்ச்சிமிக்க மாதிரி கிராமமாக மாற்ற இலங்கையில் என்ன தடை உள்ளது. தேவையான அதிகாரங்களும், தேவைக்கு மேலதீகமான வளங்களும் இருந்தும் அதனை வினைத்திறனான முறையில் பயன்படுத்தி பலனை அடைவதற்கு, கிராமிய மக்களினதும், கிராமத்து கல்வியாளர்களினதும் சிந்தனை வறுமையும், சுய சமூகப் பொறுப்பின்மையும், செயற்திறன் இன்மைக்கு வீண் நேரவிரைய சாக்குப்போக்குகளுமே அவர்களின் கிராமிய சமூக பொருளாதார சூழல் சார் அபிவிருத்திக்கு தடை . உள்ளூராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு மக்களும்தான் இதற்கு வெட்கப்பட வேண்டும்… கிராமங்கள் மேம்பட நாடு தானாக மேம்படும்.
நாட்டினை மீட்பதற்கு உரியவகையிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும் அழிவின் விழும்பில் உள்ள மீன்பிடித்தொழில் இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றமையும் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும் தன்மையினை பார்க்கமுடிகின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியாக அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் கிடைக்கப்பெற மக்கள் எழுச்சி என்பது முக்கியமானது.