மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)
துஷ்யந்தன்.உ
எரிக் சொல்ஹெய்ம் என்ற பெயரினை இலங்கையர்கள் மறக்கமுடியாதவகையில் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முன்னாள் நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தையாளராக செயற்பட்டவராவார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ‘பதினாறு வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு திரும்பியது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்,’ என்று அவர் கூறினார், பசுமையாகச் சென்று 13 மூலம் தீர்வு காண்பது இலங்கை அதன் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீள உதவும் என தெருவிந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார் நான் ஏற்றுக்கொண்டேன். என தெருவித்த சொல்ஹெய்ம் பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள இலங்கையில் இது ஒரு மோசமான நிலைமை. பசுமைக்கு[green energy] செல்வது நெருக்கடியிலிருந்து ஒரு வழி என்று ஜனாதிபதி கூறுகிறார். நிலக்கரியிலிருந்து சூரிய சக்திக்கு மாறினால், நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள், அது அதிக வேலைகளை உருவாக்கும். அவரது சிறந்த நோக்கத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தெருவிந்தமை குறிப்பிடத்தக்கது.
எந்தவித ஒப்பந்தமோ அல்லது பதவிக்கான கொடுப்பணவினையோ பெற்றுக் கொள்ளவில்லை மாறாக, இந்தியா, சீனா இந்த இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிபுணர்களிடம் இருந்து சிறந்த ஆலோசனையைக் கொண்டு வருவதே அவரினால் நடைபெற்றுக் கொண்டுள்ள செயற்பாடுகளாக அமையவுள்ளது.
சொல்ஹெய்ம் மற்ற நாடுகளிலிருந்து சிறந்த யோசனைகள், நிபுணத்துவம் மற்றும் உதாரணங்களைக் கொண்டு வருவதுடன் தேவைப்பட்டால், நான் நிபுணத்துவத்தையும் வழங்க முடியும். பசுமை முதலீடுகளை கொண்டு வர நிறுவனங்களுக்கு என்னால் உதவ முடியும். மேலும் என்னால் செய்யக்கூடியது எனது உதவியையும் ஆதரவையும் வழங்குவதுதான் என தனது முதலாவது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். முக்கியமான விடயம் என்வென்றால் சொல்ஹெய்ம் அவர்களது இலங்கைக்கு அவரது உதவி தேவைப்படும் வரைக்கும் செயற்படவுள்ளதாக தெருவித்துள்ளமையும் விசேடமானது. சொல்ஹெய்ம் Green Hydrogen Organisation மற்றும் International Hydropower Association (IHA) குழுவில் உள்ளார், அதனால் இலங்கைக்கு உதவுவதற்கான அறிவையும் நிபுணத்துவத்தையும் இவரினால் வழங்க முடியும். அதன் ஊடாக இலங்கைக்கு உதவ முதலீட்டாளர்களையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிபுணர்களையும் கொண்டு வர முடியும்.
ஜனாதிபதி ரணில் இந்த நெருக்கடியிலிருந்து தனது நாடு மீண்டு, அதன் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அவர் ஆர்வமாக உள்ளேன் என பல பொது நிகழ்வுகளிலும் சந்திப்புகளிலும் கூறிவருகின்ற நிலையில் அவரது எதிர்பார்பை வென்றெடுக்க வேண்டிய மிக பிரதான பொறுப்பினை சொல்ஹெய்ம் ஏற்றுக் கொண்டிருப்பதானது நாட்டின் தலைவருக்கு சமனான பொறுப்பினை எவ்வித ஒப்பந்தங்களோ கொடுப்பணவுகளோ மேற்கொள்ளமால் பேச்சுவழக்கில் ஒருவர் இராஜதந்திரி செயற்படுவது புதியவிடயமும் அல்ல. வெளிநாட்டு நட்பு நாடுகளிடமிருந்து இலங்கைக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று ரணில் விரும்புகிறார். எரிசக்தி நெருக்கடி மற்றும் அதிக பணவீக்கம் நிறைந்த இந்த நேரத்தில் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். ஜனாதிபதி ரணில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறார், மேலும் அவர் பல நபர்களின் உதவியை நாடியுள்ளமையும் முக்கியமானதுடன் அதற்காக சொல்ஹெய்ம் இனை நியமித்தமை மிகமுக்கியமான செயற்பாடாகதான் பார்க்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மாதிரியாக சீனா இந்தியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் சீனா அதற்கு அடுத்தபடியாக இந்திய உள்ளது எலெக்ட்ரிக் கார்களில் நார்வே மிகவும் வெற்றிகரமான நாடாக இருப்பதாலும், அங்கு விற்கப்படும் 90 சதவீத கார்கள் எலெக்ட்ரிக் கார்களாகும். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரிய வளரும் நாடுகள் என்பதாலும், அன்னிய முதலீட்டிற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும் இந்தியாவில் தினமும் புதிய சூரிய சக்தி திட்டங்களைத் தொடங்குவதற்கு உந்து சக்தியாக பிரதமர் மோடி இருப்பதனால், மேலும் பல நாடுகளும் மாநிலங்களும் இதைப் பின்பற்றுகின்றன. இலங்கை தனது சட்ட மற்றும் அனுமதி நடைமுறைகளை மேம்படுத்தினால், அது இந்திய மற்றும் பிற முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு விருப்பமான இடமாக மாறலாம். மோடி முன்முயற்சி எடுக்கவில்லை என்றால், இது நடக்காது. சூரிய சக்தியில் அதிக முதலீடு செய்யும் நாடு சீனா, அதைத் தொடர்ந்து இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலங்களில் இலங்கை இந்தியாவுக்கிடையிலான தொடர்பு பாதைகளின் உடனடி செயற்படுத்தல்கள் இந்திய நிறுவனங்களின் வருகை மற்றும் மோடியின் மிக பலம் பொருந்திய மத அமைப்புக்களின் பிரசங்கங்கள் என்பனவும் அதற்கான செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் வடக்கிற்கு குறிப்பாக யாழ் மாவட்டத்தின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளுடன் சந்திப்பினை மேற்கொள்ள உத்தேசித்த சொல்ஹெய்ம் இதனை சில தமிழ் அரசியல்கட்சிகள் வரவேண்டாம் என கூறினார்கள் அதற்கான செல்வம் அடைக்கலநாதன் (பா.உ)
அவர்கள் சொல்ஹெய்ம் தனக்கு தரப்பட்ட விடயத்தினை மாத்திரம் செய்தால் சரி சமாதானம் தொடர்பாக எமக்கு கூறவரவேண்டாம் என கண்டனம் தெருவித்திருந்த நிலையில் ஏனைய பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொமும்பில் சந்தித்த சொல்ஹெய்ம் தனது திட்டத்தினை வடக்கிற்கான மிக முக்கிய பிரவேச பாதையான மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளமை ஒர் பாரிய நகர்வாகவே பார்க்கவேண்டியுள்ளது. சொல்ஹெய்ம் அவர்களுக்கு மன்னார் மாவட்டம் என்பது பழகிய அனுபவங்களும் மிக கூடுதலானது என்பதும். தனது பணியினை சரியான விதத்தில் மேற்கொள்ள சரியான நாளினை தெரிவுசெய்து மாவட்டத்திற்கு வருகையிட்டமையும் முக்கியமானதேயாகும்.
வடக்கில் சொல்ஹெய்ம் அவர்கள் தனது நோக்கத்தை அடைய மிக முக்கியமாக உள்ள மாவட்டம் மன்னார் என்பதும். மன்னார் மாவட்டத்தில் காலநிலை மற்றும் சமாதானம் தொர்பாக சொல்ஹெய்ம் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் அவர் தனது நிகழ்சி நிரலினையும்[Mission] மக்களினையும் சமனாக கொண்டு செல்லார் என்பதுடன் மன்னார் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் அந்நியசெலானிவனிகளை ஈட்டுவதற்கு குறிப்பாக கடன் கடன் வட்டியினை செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைவதுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றும் செயற்பாடுகள் ஏற்படலாம்.
மன்னார் மாவட்டத்தில் நிலத்தடி எரிபொருள்மாதிரிகள் தொடர்பாக ஆராச்சியினை மேற்கொண்ட மற்றும் சமாதான உடன்படிக்கை காலத்தில் கூடுதல் பங்களிப்பு நல்கிய நோர்வே சொல்ஹெய்ம் இவ்விடயத்தினை செயற்படுத்தப்போவது முக்கியமானதேயாகும்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றாக வேலை செய்தால், பூமியில் நாம் எதை அடைய முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.” – எரிக் சொல்ஹெய்ம்
இதில் முக்கியமான விடயம் வரும் முதலீட்டினால் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் ஏற்பட்டாலும் அதற்கான தகுதிகளைக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்படவேண்டிய தேவையும் பாராம்பரிய தொழில்கள் மாற்றமடையும் தன்மையும் காலநிலை மாற்றத்தினால் ஏற்றடவுள்ள சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள்களை சமாளித்து இலக்கை அடையகூடியதன்மை உயர்வாகக் காணப்படுகின்றமையும் எனவே நாட்டிற்கான புதிய தேசிய கொள்கை சொல்ஹெய்ம் ஊடாகவே நடைபெறலாம். இதுவே சர்வேதேச மூதலீடுகளுக்கான நம்பிக்கைத்தன்மையினை வெளியிடலாம். விரும்பியோ விரும்பாமலோ இவ் விடயத்தினை நடாத்தியே ஆகவேண்டிய கட்டாயம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மன்னார் மாவட்டம் பெரும் பங்களிப்பினை வழங்கவுள்ளதுடன் ஒர் மாதிரி பரிசோதணைக்கான பிரதேசமாக இவ் மாவட்டத்தை நோக்கியுள்ளமை முக்கியமானதேயாகும்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான மன்னார் மறுமலர்ச்சியின் ஆரம்பம்!! (கட்டுரை)