;
Athirady Tamil News

சர்வஜன வாக்கெடுப்பும் தமிழரும் !! (கட்டுரை)

0

ஜனநாயகத்தின் அடிப்படை விதிமுறைகளில் ஒன்றானது தேர்தலும், வாக்களிப்பும். இவை இரண்டும் ஜனநாயக நாடுகளென கூறப்படும் மேற்கு நாடுகளிலும், வேறு சில ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளிலும் நடை முறைபடுத்தப்படுகின்றன.

தேர்தலில் வாக்களிக்கும் முறைகளும், நாடு நிலைமைகளிற்கு ஏற்ப உலகளவிய ரீதியில் வேறுபடும்.

தேர்தலுக்கும் வாக்களிப்பிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தேர்தல் என்பது பலரின் கருத்தைப் பெறுவதற்கான ஒரு முறை சாரா செயல்முறையாகும்.

வேறுபட்ட விதி முறை

மறுபுறம், வாக்களிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பி ல் மக்களின் கருத்தைத் தேடுவதற்கான ஒரு முறையான செயல்முறையாகும்.

இவ் அடிப்படையில், நாம் முதலில் தேர்தல் என்ற விடயத்தை ஆய்வு செய்வோமானால், தேர்தல்கள், ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாநிலம், மாகாணம், பிராந்தியம் என பல வகையின் அடிப்படையி ல் நாட்டிற்கு நாடு வேறுபட்ட விதி முறைகளை கொண்ட அடிப்படையி ல் நடாத்தப்படுகின்றன.

இதனது இயல்பு என்னவென்றால், வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்கள், மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். மேலும் அவர்கள் பதவியில் நீடிப்பதனால் அவர்கள் மீண்டும் மக்கள் ஆணையைப் பெற வேண்டும்.இவ் சந்தர்பத்தை மேற்கு நாட்டு வாக்களர் நன்றாக பாவிப்பது வழமை.

தேர்தல் வேளைகளில் மக்களிற்கு கொடுத்த ஆணையை மீறும் நிலையில், அவர்கள் மீண்டும் தேர்தலில் வேட்பளராக முன்னிற்கும் வேளையில், அவர்களை மக்கள் நிராகரிப்பதை மேற்கு நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.

பலவீனமான ஆட்சியைக் கொண்ட பல நாடுகளில், அதாவது அசாதாரண ஜனநாயகம் அல்லது சர்வாதிகார வழி முறைகள் மூலம், தன்னிச்சையான முறையில், சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாத தேர்தல்கள் முறையில் தேர்தல்கள் நடைபெறுவதையும் பல நாடுகளில் நாம் காணக்கூடியதாகவுள்ளது.

‘வாக்களிப்பு’ என்பதனை ஆய்வு செய்வோமானால், வாக்களிப்பவர்கள் வி வாதங்கள் அல்லது பொது விவாதங்களின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக செயற்படுத்தும் முறையாகும்.

இது ஒற்றை வாக்களிப்பு, இரட்டை வாக்களிப்பு போன்ற விதி முறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.இவையாவும் இரகசிய முறையிலே வாக்களிக்கப்படும்.

இதேவேளை வாக்கெடுப்பு என்பதனை ஆராயும் வேளையி ல், இதுவும் நாட்டுக்கு நாடு மாறுபட்ட அடிப்படையில், கட்டாய வாக்கெடுப்பு (Mandatory referendum), விருப்ப வாக்கெடுப்பு (Optional referendum) சர்வசன, பொது போன்ற பலவிதப்பட்ட சொற்பிரயோகத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

இவ் வாக்கெடுப்பு என்பது கூடுதலாக ‘ ஆம்’ அல்லது ‘இல்லை ’ என்ற பதிலை கொண்டதாக காணப்படுகிறது.”வாக்கெடுப்பு” என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கியது,

மேலும் நிலைமைகளை பொறுத்து சொ ற்கள் வேறுபட்டவை . ஒரு வாக்கெடுப்பு கட்டுப்பாடாகவோ அல்லது ஆலோசனையாகவோ இருக்கலாம்.

சில நாடுகளில், இந்த இரண்டு வகையான வாக்கெடுப்புக்கு வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் நிலையில், இவை உலகில் எப்படியாக பார்க்கப்பட்டது பார்க்கப்படுகிறது. என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உலகில் சில அரசியல்வாதிகள் அரசியல் செயற்பாட்டாளர்களிற்கு இவ் விடயங்களில் சரியான புரிந்துணர்வோ அறிவோ அனுபவமோ உள்ளதாக தெரிவாதில்லை .

ஆனால் அரசியல் பேசுவது போன்று இவற்றையும், உண்மை நிலைக்கு மாறாக கூறி மற்றவர்களையும் குழப்புகிறார்கள் என்பது உண்மை .

வடக்கு கிழக்கு வாழ்.மக்கள், கடந்த பதின் நான்கு வருடங்களா கதிக்கு தெரியாத காட்டில் நடை பெறும் சிலருடைய களியாட்டங்களை பார்த்து சலித்து, நம்பி க்கையை இழக்காது, என்று விடிவெள்ளி தோன்றும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் ஆணை

வடக்கு கிழக்கு வாழ்.மக்கள், 1948ம் ஆண்டு முதல் வே றுபட்ட தேர்தல்களி ல் வாக்களித்து களைத்து போயிருந்தாலும், 1977ம் ஆண்டில், யாரும் நினைக்க முடியாத பெரும்பான்மை வாக்குகளால், தமது வெளி வாரியான சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தனர் என்பது சரித்திரம்.

தேர்தலை , எதிர்கொண்டகட்சியான தமிழர்கூட்டணி, மக்கள் ஆணையிலிருந்து விடுபட்டு செல்ல முயற்சித்த வேளையில், முப்பது வருட காலமாக ஓர் ஆயுத போராட்டம் மூலம், மக்கள் கொடுத்த தேர்தல் ஆணையை , தமிழீழ விடுதலை புலிகள் நிறை வேற்றியிருந்தனர்.

இவ் நடை முறை அரசு தமிழர் தாயக பூமியா ன வடக்கு கி ழக்கி ல் இலங்கை அரசிற்கு நிகரா கபல கட்டமைப்புக்களை உள்ளடக்கியிருந்தது என்பதும் சரித்திரம்.

அரைத்த மாவை மீண்டும் அரைக்க விரும்பாத காரணத்தினால், அவ் நடை முறை அரசு முடிவிற்கு வந்துள்ளதை தொடர்ந்து, 2009ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை , நாட்டிலும் புலம் பெயர்ந்தே சத்திலும், நடக்கும் களியாட்டங்கள் பற்றி இங்கு குறிப்பிடுவதை தவிர்கிறேன்.

நாட்டில் புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டு, செயல் வடிவம் அற்ற புதிய புதிய அரசியல் சிந்தனைகள், சித்தாத்தங்கள் பேசப்படுகின்றது. இதேவேளை புலம்பெயர்தேசத்தில் புதிய புதிய அமைப்புக்கள், தேர்தல்கள் வாக்களிப்புக்கள், கையெழுத்து வேட்டைகளும் நடைபெறுகின்றன.

இன்றுவரை நாட்டில் அரசியல்வாதிகளினாலும், புலம்பெயர்தேசத்து அமைப்புக்களினாலும், தமிழ் மக்கள், பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைத்தது ஒன்றுமில்லை .

அன்று நாட்டில், அரசியல் அனுபவம் சாணக்கியம் கொண்ட எமது அரசியல்வாதிகளினா ல் “வட்டுக்கோட்டை தீ ர்மானம்” என்ற அரசியல் சித்தாத்தை உருவாக்கினார்கள்.

அதனை அடுத்து 1977ம் ஆண்டு இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில், வட்டுகோட்டை தீர்மானத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் கூட்டணியினர் மக்கள் முன்வைத்து, தமிழ் மக்களின் வெளிவாரீயான சுயநிர்ணய உரிமைக்கு மக்கள் மிக பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

சில வருங்களிற்கு முன் புலம்பெயர்ந்ததேசத்தில், வட்டுகோட்டை தீர்மானத்திற்கு வாக்கிளிக்குமாறு சிலர் முன்வைத்தனர்.இங்கு யாருக்கும் புரியாத புதிர் என்னவெனில், இவ்வட்டுக்கோ ட்டை தீர்மானத்திற்கு புலம்பெயர்தேசத்தில் வாக்களித்து, என்ன பலன் என்பதை , இதை முன்னின்று நடத்தியவர்கள் விளங்கி கொள்ளவில்லை .

இதே போல் வட்டுகோட்டை தீர்மானம் இரண்டு என இன்னுமொரு வேலை திட்டம் நிறைவேறி முடிந்தது. இவை பற்றி எழுதுவதனால் பக்கக் கணக்கில் எழுதலாம்.

இதனை அடுத்து ஒரு பகுதி யினர், லட்ச கணக்கான கையெழுத்தை சேகரித்த அவ் கையெழுத்து மனுவை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பினால், ஐ.நா . உடன் தமிழர் விடயத்தில் கவனம் கொள்வார்கள் என்று கூறி , கையெழுத்து வேட்டை நடை பெற்று இன்று ஏறக்குறைய ஐந்து ஆறு ஆண்டுகளை தாண்டியுள்ளது.

ஐ.நா .வி ல் வழமையான மனித உரிமை சபை , குழு கூட்டங்கள் (Treaty bodies and special rapporteurs), தீர்மானம் தவிர்ந்து, தமிழர் விடயத்தில் வேறு ஒன்றும் நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை .

நாட்டிலும் புலம்பெயர்தேசத்திலும் மேற்கொள்ளப்படும் பெரும்பா லான செயற்பாடுகள். ஓர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி போன்றே நடைபெறுகிறது.

இவையாவும் தசாப்தங்களாக அரசியல் உரிமையற்று, இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களிற்கு, இன்று வரை எதை சாதித்துள்ளது? மேலாக, 1948ம் ஆண்டில் கிழக்கு மாகணத்தில் கல்லோயவி ல் ஆரம்பமாகி ய சிங்கள குடியேற்றம், சிங்களமயம், இன்று காங்கேசன்துறை கீரி மலை வரை வியாபித்துள்ளது.

ஐ.நா.மனித உரிமை சபையில் ஆரம்பத்திலிருந்தே , அதவாது 2006ம் ஆண்டு முதல் இதனது நிகழ்ச்சி நிரலில் சுயநிர்ணய உரி மை என்று ஒரு வி டயம் அறவே கிடையாது. இவ் நிலையில், வேறு நிகழ்ச்சி நிரலிற்கு கீழ், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி உரையாற்றுவது பிரயோசனம் அற்ற ஓர் வி டயம்.

இப்படியாக அரசியல்வாதிகள் உரையாற்றிய பின்னர், ஊடகங்களிற்கு கொடுத்து விளம்பரம் செய்வதனால், பெரும்பாலன மக்கள் ஐ.நா.மனித உரிமை சபை மூலம் ஏதோ அரசியல் தீர்வு தமிழ் மக்களிற்கு கிடைக்கவுள்ளதாக எண்ணுகின்றனர்.இது மிக தவறான செயற்பாடு.இது மக்களை ஏமாற்றும் முன்னெடுப்புக்கள்.

இதற்குள் சிலர் பணம் வசூலிப்பதற்காக ஐ.நா .மனித உரிமை சபை மூலம் தமிழீழத்தை பெ ற்று எடுக்கலாமென மக்களை ஏமாற்றும் கபடமான நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர்.

இப்படியான செயற்பாடுகளினால், தமி ழ் மக்களிற்கு ஏதோ அரசியல் தீர்வு ஐ.நா .மனி த உரிமை சபை மூலம் கிடைக்க போவதாக பலர் எதிர்பார்த்துள்ளனர்.

நாம் உண்மையை சொல்லி எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவிடில் மேலும் மேலும் நாம் பல தோல்விகளையே சந்திப்போம். இதனால் மக்கள் வேறுப்பும் சலிப்பும் அடைவார்கள்.இது சிங்கள பௌத்த அரசினால் நன்றாக திட்டமி ட்ட செயல்.
நடை முறை அரசு

ஒரு நாட்டில் ஆட்சியிலிருந்த அரசை அல்லது அரசாங்கத்தை , அவ் நாட்டில் மக்கள் புரட்சியால் அல்லது இராணுவ புரட்சியால் அல்லது வெளி நாட்டு படைகளி னால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்தை விரட்டியடிக்கும் பொழுது, அவ் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் வேறு ஒரு நா ட்டில் தஞ்சம் புகுந்து நடத்துவதை நாடுகடத்தப்பட்ட அரசாங்கம் (சுருக்கமா க Government in Exile – GIE) என பொருள்படும்.

அவர்கள் தம்மை துரத்தியவர்கள் ஆட்சியில் இல்லாத பொழுது, நாடு திரும்பி தமது நாட்டில் தமது அரசை மீண்டும் நிறுவுவார்கள். நாடு கடத்தப்பட்ட அரசாங்கம் என்பது ஒரு அரசியல் குழுவாகும்.

அது ஒரு நாடு அல்லது அரை இறையாண்மை மாநிலத்தின் சட்டபூர்வமான அரசாங்கம். ஆனால் சட்டப்பூர்வ அதிகாரத்தை செயல்படுத்த முடியாது.

அதற்கு பதிலாக ஒரு வெளி நாட்டில், நாடு கடத்தப்பட்ட அரசாங்கங்கள் அமைத்து, தாம் ஒரு நாள் தங்கள் சொந்த நாட்டிற்குத்திரும்பி , முறையான அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுவார்கள்.

இதற்கு பல ஆபிரிக்கா நாடுகள் உதரணமாக காணப்பட்டாலும், இராண்டாம் உலக மாகயுத்தத்தை தொ டர்ந்து பி ரான்ஸில் ஆட்சியிலிருந்தவர்கள், பிரித்தானி ய சென்று, அங்கு தளபதி சாள்ஸ் டி கொல்லின் தலைமையில் ஓர் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை (Free French Forces) எனப்படும் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை உருவாக்கியிருந்தார்கள்.இறுதியில் வெற்றி பெற்று நாடு திரும்பி பிரான்ஸில் தமது ஆட்சியை நிலை நிறுத்தினார்கள்.

இதே போல் ஆகஸ்ட் 1990ல் ஈராக்கி ன் ஜனாதிபதி சதாம் குசேயின் தனது இராணுவத்தை அனுப்பி குவைத் நாட்டை கைப்பற்றிய பொழுது, குவைத்தில் ஆட்சியிலிருந்தவர்கள், சவூதி அரேபியவில் தஞ்சம் புகுந்து, தமது நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை நடத்தினர்கள்.

அவர்கள் மார்ச் 1991ல் அமெரிக்காவின் தலைமையில் கூட்டுபடைகள் ஈராக்கிய படைகளை வெற்றி கொண்டதை அடுத்து, குவைற்றிக்கு திரும்பி தமது அரசை மேற்கொண்டு நடத்துகின்றனர்.

இதேபோல் முன்னாள் ஈரானியா அரசன் ஷா வி ன் புதல்வர், றே சாபாலாவி அமெரிக்காவி ல் வாழ்ந்து வந்தாலும், ஓர் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை , பிரான்ஸில் பதிவு செய்து இன்றும் நடாத்தி வருகின்றனர்.

இவர் மிக அண்மையில் ஈரானி ற்கு பரம எதிரியான இஸ்ரேவிலிற்கு சென்று, அவ் அரசாங்கத்திடம் தமது செயற்பாடுகளிற்கு அவர்களது உதவியை கோரியுள்ளார். மேலே கொடுக்கப்பட்ட நாடு கடத்தப்பட்ட அரசாங்கங்களிற்கு சற்று மாறுபட்ட நிலையி ல் நைஜீரியாவில் பையபோற (Republic of Biafra)விளங்குகின்றது.
பையபோற குடியரசு

நைஜீரியாவில் கிழக்கு பிராந்தியத்தில் வாழும் பெரும்பான்மை ஈக்கோ இனத்தவர்கள், நைஜீரியா நாட்டிலிருந்து பிரிந்து, பையபோற குடியரசை 1967ம் ஆண்டு உருவாக்கினார்கள்.

இவ் புதிய நாட்டை , பல ஆபிரிக்கா நாடுகள் அங்கீகரித்திருந்ததுடன் பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், நோர்வே , இஸ்ரேல், சிம்பா பே (அப்போதைய ரோடிசியா ), தெ ன்னா ஆபிரிக்கா , வத்திக்கான் போன்ற நாடுகள் பையபோற குடியரசை அங்கீகரிக்கா விடிலும், இவ் புதிய நாட்டிற்கு இராணு ராஜதந்திர உதவிகளை வழங்கினார்கள்.

துரதிஸ்டவசமாக அவ்வேளையில் நைஜீரியாவில் ஆட்சியிலிருந்த இராணுவ தளபதி ஜகுபூ கோபோன் (General Yakubu Gowon) தனது இராணுவ பலத்தினால், பையபோற குடியரசை , 1970ம் ஆண்டு இல்லாது அழித்தார்.

இவ் தளபதி ஜகுபூ கோ போனை , 2007ம் ஆண்டு யூன் மாதம், வீயன்னாவில் நடை பெற்ற ஐ.நா.மா நாட்டில், நேரில் சந்தித்து உரையாடியுள்ளேன்.

பையபோறவில் ஆட்சியிலிருந்தவர்கள் தற்பொழுது அமெரிக்கவை தளமாக கொண்டு, ஓர் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் சரித்திரம் சோகம் நிறைந்தது மட்டுமல்லாது, படிப்படியாக சர்வதேசத்தில் இவர்களது விடயங்கள் முக்கியத்துவம் குறைந்து செல்வதை காணுகிறோம்.

பையபோற குடியரசின் தோற்றத்தையும் அழிவை , சில விடயங்களில் இலங்கை தீவில் வடக்கு கிழக்கில் ஏறக்குறைய இராண்டு தசாப்தங்களிற்கு மேலாக திகழ்ந்த எமது தமிழீழ நடை முறை அரசின் சரித்திரத்துடன் ஒப்பிடலாம்.

இவ் நாடு கடத்தப்பட்ட அரசாங்கங்களிற்கு வேறுபட்டதாக, நாடு கடந்த அரசாங்கம் என்ற பெயரில், விடுதலையை வேண்டி நிற்கும் மாறுபட்ட இன மக்கள், தாம் அரசியல் தஞ்சம் புகுந்த நாடுகளில், நாடு கடந்த அரசுகளை உருவாக்கி நடாத்தி வருகின்றனர்.

நாடு கடந்த அரசாங்கம் என்னும் வி டயத்தில் மேலும் உப குழுக்கள் உண்டு. இவர்களது சிந்தாந்தம் என்னவெனில் ஒரு அரசு இல்லாத இனம், தமது விடுதலை போராட்டங்களில் தமது பிரதேசங்களில் தோல்லி கண்டுள்ள நிலையில் தற்காலிகமாக ஒரு நாட்டிற்கு நகர்ந்து அங்கு நாடு கடந்த அரசை நிறுவி , அதன் மூலம் ராஜதந்திர பரப்புரை வேலை திட்டங்களை மேற்கொள்வது.

இவை வெற்றி காணும் நிலையில், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி , அங்கு ஓர் நிஜமான அரசை உருவாக உறுதுணையாக நிற்பார்கள்.

இவற்றில் சில, இனங்களின் நாடு கடந்த அரசாங்கள், சில நாடுகளின் அங்கீகரம் பெற்று அவர்கள் உதவியுடன் நடாத்துகின்றனர்.
நாடு கடந்த அரசு

இதற்கு தீபெத்தின் ஆண்மீ க தலைவர் டலாமா நல்ல உதாரணமாக இந்தியாவி ல் கா ணப்படுகிறார். இவர் உலகளவி ய ரீதியில் தனது பயணங்களை மேற்கொண்டு, வேறுபட்ட நாட்டின் தலைவர்களை சந்தித்து, தமது இனத்திற்கான விடுதலையை நோக்கிய ஆதரவிற்கான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்.

இதே போல் பல நாடு கடந்த அரசாங்கங்கள், பாரிய உயர்மட்ட பரப்புரைகளை மேற்கொண்டு, தமது விடுதலைக்கான நாடுகளின் அக்கீகரத்தையும் பெற்று வருகின்றனர்.

இப்படியாக உலகில் மற்றைய இனங்களின் நாடு கடந்த அரசாங்கம் பயணிக்கும் வேளையில், தமிழர்களது நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்டு இன்று பதின் மூன்று ஆண்டுகளாகியுள்ளது.

உண்மையான ஓர் நாடு கடந்த அரசாங்காத்தால் செய்யப்பட வேண்டிய வேலை திட்டங்களை , இவர்களால் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில், இரண்டு தசாப்பதங்களிற்கு மேலாக ஓர் நடை முறை அரசு (De-Facto) திகழ்ந்த வேளையில், அங்கு பொறுப்பாளர்கள் தவிர்ந்த வேறு எந்த பதவிகளும் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்கள் போன்று யாருக்கும் வழங்கப்பட்டது கிடையாது.

ஆனால் தமிழர்களது நாடு கடந்த அரசிற்கு பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர் போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதனால், தமிழ் மக்கள் இவ் அமைப்பை ஏனோ தானோ என்று எண்ணினார்கள்.

ஆனால் இது, “கதை பல்லக்கு தம்பி கால் நடையாக செல்கிறது”. இன்றுவரை இந்த நாடு கடந்த அரசை எந்த நாடும் அங்கிகரித்தோ அல்லது இவர்களை அழைத்து தமிழர்களது பிரநிதிகளாக உத்தியோகபூர்வமாக உரையாடியதோ கிடையாது.

புதிதாக உருவாகிய தென் சூடான், இவர்களை கௌரவப்படுத்த முன்வந்த நிலையி ல், அங்கு நடந்தேறிய சம்பவம் பற்றி இங்கு எப்படி என்னால் எழுத முடியும்! சில வருடங்களிற்கு ஒரு முறை , அவர்களது அங்கத்தவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து சில மாதங்களிற்கு ஒருமுறை நாடு நாடாக காணொளி (சூம் Zoom) மூலம் கூட்டங்கள் நடைபெறுகிறது.

இவ் அமைப்பு உருவாகி ய காலம் முதல் இன்று வரை , ஒரே நபர் பிரதமராக கடமையாற்றுவதுடன், இவர் வாழும் நாட்டிலிருந்து இவர் வேறு நாட்டிற்கு செல்ல முடியாத காரணத்தினால், சில சந்தர்பங்களில் பாரிய போக்குவரத்து செலவுடன், அவர் வாழும் நாட்டிலேயே கூட்டங்கள் நடை பெறுகிறது.

இவர்களுடன் எனக்கு எந்தவித தனிபட்ட கோபதாபங்கள் ஒரு பொழுதும் கிடையாது. இன்று காலம் கடந்து இவற்றை எழுதுவதன் முக்கி ய காரணம், நாட்டிலும் புலம்பெயர்தேசத்திலும் மக்கள் எதிர்பார்ப்பது போல், தமிழர்களது நாடு கடந்த அரசு எதையும் செய்யவில்லை என்ற ஆதங்கம், விடுதலை வேட்கை கொண்டயா வருக்கும் உள்ளது.

ஏழு தசாப்தங்களிற்கு மேலாக சி ங்கள பௌத்த அரசினால் ஏமாற்றப்பட்ட மக்களிற்கு, இவ் அமைப்பு ஏதோ விமோசனம் பெற்று கொடுப்பார்கள் போன்ற தோற்றத்தை கொடுத்து, இவர்களே அவ் மக்களிற்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஐக்கிய நாடுகள் சபை விடயத்தில் இலட்சகணக்கான கையெழுத்துடன் மனு சமர்பித்தால், ஐ.நா.வை தலையீடவைக்க முடியுமென கையெழுத்து சேகரித்த இவர்கள் எங்களுக்குள் காதோடு காதாக, இது உண்மையில் மக்களை விழிப்பாக வைக்கும் வேலை திட்டமென கூறி , என்னிடமும் கையெழுத்து பெற்றார்கள். இது இன்று பழைய கதையாகியுள்ளது.
பொது வாக்கெடுப்பு

தற்பொழுது பொதுவாக்கெடுப்பு என்று ஒரு படலம் ஆரம்பமாகி யுள்ளது. இவையாவும் மக்களை கற்பனை உலகிற்கு முன்னெடுத்து செல்லும் வேலை திட்டங்களேயே அல்லது, இலங்கை பௌத்த அரசு பீதி கொள்ளும் அளவிற்கோ அல்லது இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமளவிற்கு அங்கு ஒன்றும் விசேடமாக நடை பெறவில்லை .

பொது வாக்கெடுப்பு பற்றி இவர்கள் கூறும் உதரணங்கள், அரசியல் தெரிந்தவர்களிடம் செல்வாக்கு பெற முடியாது. கனடாவில் மொன்றியல் மாநிலம் தனி நாடாக பிரிவதற்கு இரண்டு தடவை கனடிய அரசா ங்கமே வாக்கெடுப்பபை நடத்தியது.

அதை மக்கள் ஏற்காத காரணத்தினால் தோல்வி கண்டது. இதே போல் பிரித்தானியாவிலிருந்து ஸ்கோட்லாந்து தேசம் தனி நாடாக பிரிவதற்கு பிரித்தானிய அரசாங்கமே ஒரு வாக்கெடுப்பை நடத்தியது.

இது பிரித்தானி ய அரசாங்கத்தி ன் பலத்த பிரச்சாரத்தால் தோல்வியானது. ஆனால் ஸ்கோட்லாந்து மக்கள் இன்னுமொரு தடவை இதை நடத்துமாறு வேண்டி நிற்கிறார்கள். ஏரித்தீரியா , கிழக்கு தீமோர், தென் சூடான் ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பபையோ , அல்லது பப்புவா நியூகினியிலிருந்து போகன்வில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கள் ஐ.நா .வழி வகுத்து கொடுத்த பாதைகள். இவற்றை இவர்களா ல் நடத்தப்படும் வாக்களிப்புடன் ஒத்து பார்க்க முடியாது.

கோசவிவின் வாக்கெடுப்பு என்பது பல நா டுகளின் ஆதரவுடன் நடை பெ ற்று, இன்று அவர்கள் ஐ.நா . அங்கத்துவம் பெறவிடிலும், நூற்றுக்கு மேற்பட்ட ஐ.நா.அங்கத்துவ நாடுகள் கோசவாவை அங்கீகரித்துள்ளது.இதேவேளை , ஸ்பெயினில் கத்தலோன், ஈராக்கில் குருடிஸ்தான், இத்தாலியில் லோம்பாடி மற்றும் வேனிற்ரோ மக்களால் நாட்டுக்குள்ளேயே நடத்தப்பட்ட வாக்கெடுப்பை , அந்த நா ட்டு மத்திய அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ , அங்கீகரிக்கவோ ஆதரவு வழங்கவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகையால் தமிழர்களது நாடு கடந்த அரசு விளையாட்டு மைதானங்களிலும், விழாக்களிலும், மக்கள் நிறைவாக காணப்படும்சமயவி ழாக்களிலும் கூட்டங்களிலும் நடதப்படும் வாக்கெடுப்போ ,பொது வாக்கெடுப்பு, ஏழு தசாப்தங்களிற்கு மேலாக அரசி யல் உரிமைக்கு போராடி வரும் மக்களிற்கு, இது உருப்படியான செயற்றிட்டம் அல்ல. “யார் குத்தினாலும் அரசியல்வாதி ஆகுவதை ” மக்கள் நிட்சயம் வரவேற்பார்கள்.

ஆனால் மக்களில் சாவாரி செய்யும் செயற்பாடுகளை இனியும் வாய் மூடி அனுமதிப்பது அழித்து கொண்டிருக்கும் இனத்திற்கு நாம் செய்யும் தூரோகமாகும். தற்பொழுது எம்மிடம் உள்ள ஆயுதங்கள் இரண்டு.

ஒன்று உண்மை , மற்றையது யாதார்த்தம். இவை இரண்டையும் மேலும் நாட்கள் கடத்தது பாவிப்போமானால், தமிழினம் இலங்கை தீவில் அழிந்தே போகும்.

1977ம் ஆண்டு, பெரும்பான்மை தமி ழ் மக்களால் கொடுக்கப்பட்ட வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை , ஏன் இவர்களால் முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளது என்பது பலராலும் கேட்கப்படும் வினாகவும் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.