இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் !! (கட்டுரை)
இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன.
இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் அதன் எரிசக்தி வளங்கள் இந்த அதிகாரப் போராட்டத்துக்குள் சிக்கிவிடும் நிலை உள்ளது…
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷமான அணுகுமுறை இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்திருப்பதன் காரணமாக, இலங்கை நீண்டகாலமாக ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சீனாவால் பார்க்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, பெய்ஜிங் பல ஆண்டுகளாக இலங்கையில் அதன் இருப்பையும் செல்வாக்கையும் தீவிரமாக உயர்த்தியுள்ளது, குறிப்பாக எரிசக்தி துறையில், ஆக்ரோஷமான தாக்கத்தை செலுத்திவருகின்றது.
இலங்கையில் அண்மைய வருடங்களில் எரிசக்தி துறை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதன் ஆற்றல் கலவையை பல்வகைப்படுத்தவும், இறக்குமதி செய்யப்பட்ட படிவ எரிபொருட்கள் மீதான நம்பிக்கையை குறைக்கவும், மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகரவும், நாடு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் பயன்படுத்தப்படும் ஆற்றலில் 70 சதவீதமானது நாட்டின் முதன்மையான ஆற்றல் ஆதாரமாக விளங்கும் நீர் மின்சாரத்திலிருந்து பெறப்படுகிறது. தண்ணீர் சேமிப்பை விரிவுபடுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு இந்தத் தொழிலில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. கூடுதலாக, காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் வளர்ச்சியை அரசாங்கம் ஆதரித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணமானது இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆர்வத்தை தெளிவாக்கியது. இலங்கை அரசாங்கம் இந்த ஆழ்கடல் துறைமுகத் திட்டத்தை ஆரம்பித்தது, ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக, 2017 இல் 99 வருட காலத்திற்கு சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நடவடிக்கை, நலிந்து வரும் துறைமுகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்பாகப் பாராட்டப்பட்டாலும், வல்லுநர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர், குத்தகையானது இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் என்று வாதிட்டனர்.
துறைமுகத்திற்கு மேலதிகமாக இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்பில் சீனா கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இது நீர் மின் திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் நுரைச்சோலையில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது ஆகியவை அடங்கும் .
“கடன் பொறி இராஜதந்திரம்” என்றும் அழைக்கப்படும் சீனாவின் ஆக்ரோஷமான கடன் வழங்கும் நடைமுறைகள் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு அளிக்கவில்லை என்பதுடன், இலங்கைக்கான கடனில் சீனா முக்கிய ஆதாரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆற்றல் உட்கட்டமைப்பு போன்ற மூலோபாய முக்கிய சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் சாத்தியக்கூறு காரணமாக, இந்த கடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவை இலங்கையில் சீன முதலீடுகளை மழுங்கடித்துள்ளன.
“கடன் பொறி இராஜதந்திரம்” என்றும் அழைக்கப்படும் சீனாவின் ஆக்ரோஷமான கடன் வழங்கும் நடைமுறைகள் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு அளிக்கவில்லை என்பதுடன், இலங்கைக்கான கடனில் சீனா முக்கிய ஆதாரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீன முதலீடுகள் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இலாபகரமானதாகவும் அனுகூலமானதாகவும் தோன்றலாம், ஆனால் அவை இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்து விடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய சக்தி இடைமாற்றத்திற்குச் சமாந்தரமாக இலங்கையின் சக்தித் துறையின் திடமான விரிவாக்கத்தின் சான்றுடன் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெறும் சக்திப் புரட்சியினை நாம் உந்திச் செலுத்துகின்றோம்.
நிலைபெறுதகு சக்தித் தொழிற்துறை பல பொருளதாாரச் செயற்பாடுகளை வசதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வருகின்ற வருடங்களில் இது தொடர்ந்தும் துரிதமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தூய சக்தித் தொழில்நுட்பங்களைப் புத்தாக்கம் செய்து விருத்தி செய்கின்ற நாடுகளுக்கு அபரிமிதமான பொருளாதார வாய்ப்புக்கள் உள்ளன என்பதுடன் இத்தூய சக்தியினைப் பயன்படுத்தும் நாடுகளுக்குப் பாரிய பொருளதார நன்மைகளும் உள்ளன.
இலங்கையில் உயிரியப் பொருண்மை, சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்தி உள்ளிட்ட பலவகையான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் வளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. கிடைக்கக்கூடிய சக்தி மூலங்களில் இருந்து சக்தியினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையின் தேசிய சக்திக் கொள்கை மற்றும் உபாயமார்க்கங்களுக்கு அமைவாக 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை கரிம நடுநிலை நாடாக மாறுவதற்கு அபிலாசை கொண்டுள்ளது.
இந்த எதிர்காலத்திற்குத் தயாராகுவதில், சக்தி வினைத்திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் பரந்த தழுவலை நாம் மேம்படுத்துவதுடன் நீடுறுதியான அபிவிருத்தி முயற்சிகள், சக்தி அணுகல், சக்திப் பாதுகாப்பு மற்றும் குறைவான கரிமம் கொண்ட பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டுப் பெறுமதி உருவாக்கம் மற்றும் மறுமலர்ச்சியேற்படுத்தல் ஆகியவற்றில் சகல வடிவிலுமான மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் அதிகரித்த பயன்பாட்டினையும் நாம் மேம்படுத்துகின்றோம்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், உலகில் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலகளவில் எண்ணெய் நுகர்வில், முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. எண்ணெய் தேவை அதிகரிப்பால், 2027ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளின் எண்ணெய் தேவை மற்றும் நுகர்வு குறித்த ஆய்வை, இவ்வமைப்பு அண்மையில் மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இதையடுத்து, நடப்பாண்டில் அந்நாட்டின் தேவை, ஒரு நாளைக்கு, 24 இலட்சம் பீப்பாய்களாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் உலகளாவிய எண்ணெய் தேவையின் வளர்ச்சியில், 60 சதவீதத்தை சீனா கொண்டிருக்கும். பின்னர், தொழில் வளர்ச்சி குறைவு மற்றும் உள்நாட்டு நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால், சீனாவின் தேவை சரிய வாய்ப்புள்ளது.
மறுபுறம், இந்தியாவின் தேவை சீராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 – 23ல், இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு, 22.23 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும், 10.20 சதவீதம் அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதம் வரை உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி, நாள் ஒன்றுக்கு, 8.23 கோடி பீப்பாய்களாக இருந்ததாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆசிய நாடுகள் உற்பத்தியில் சாதனை படைத்ததால் இது சாத்தியமானது.