;
Athirady Tamil News

பெரும்பான்மையினரின் இந்தியா தொடர்பான அச்சமும் மாண்புமிகு மலையகமும்.!! (கட்டுரை)

0

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியர்களாகும், அவர்கள் கிமு 3 ஆம்இ கிமு 5 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த முதல் குடியேறியவர்கள்.
‘மேல்நாட்டு’ தமிழ் சமூகம் ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலிருந்து வந்ததாகும். அவர்கள் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் தீவுக்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள். சுதந்திரத்தின் விடியலில், 1948-9 குடியுரிமைச் சட்டங்கள் மூலம் அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகளைப் பறித்தனர்.

2022 ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிர்கும் சந்தர்பத்தில் இந்தியாவிடம் கடன் பெறுறுவது மற்றும் கடன்களை செலுத்துவதற்கான காலத்தினை பின்போடுதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முன்னாள் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது சகோதரர்களை இந்தியாவிற்கு தூது அனுப்பி சில அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சித்தமையினை சிங்கள பெரும்பான்மை புத்திஜீவிகள் எதிர்த்தர்கள்.

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman and the Union Minister for External Affairs, Dr. Subrahmanyam Jaishankar meeting the Finance Minister of Sri Lanka, Mr. Basil Rajapaksa, in New Delhi on March 17, 2022.


இந்தியா உடனான கடன் நாட்டினை இந்தியாவிற்கு கைமாற்றப்படுவதாகவும் இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள கூடாது எனவும், கிழக்கு துறைமுக பகுதியினை வழங்குவதற்கு பலமான எதிர்பினை வெளிக்காட்டியதுடன், அப்போது சனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட விவசாயத்தில் இயற்கை உரத்தினை உபயோகித்தல் மற்றும் இரசாயண உரத்திற்கான தடையினால் பாதிப்புற்றிருந்த விவசாயத்துறையினரையும் எரிபொருள் மற்றும் எரிவாயு முதலியவற்றால் பாதிற்புற்ற மக்கள் நடாத்திய போராட்டமானது இவ் எதிர்ப்பு குழு, சில மேற்கத்தேய நாடுகளின் தூதரகங்கள் ஊடாக தமது செயற்பாட்டினையும் மேற்கத்தேயத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினையும் மேற்கொள்ள சிறந்த இடமாக கோத்தா கோ கம என்ன இடத்தினையும் விடயத்தினையும் அனுகினார்கள். சிறுபான்மையினருக்கு இந்தியாவின் ஊடாக கிடைக்கப்பெற்ற முயலும் விடயங்களை தடுக்கும் தீவிர போக்கு பெரும்பான்மையினரினால் தடுக்கப்பட்டது.

காமினி விஜேசிங்க போன்ற ஒய்வு பெற்ற நிபுனர்களை அடங்கிய தேசிய மக்கள் இயக்கம் இந்தியாவின் உடனான கடன்களை எதிர்த்தமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறு இருக்க வலுப்பெற்ற மக்கள் கிளர்ச்சி கட்டுபாடற்ற நிலையினை அடைந்தமையும் புதிய சனாதியதியாக ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் ஏற்றப்பட்டார். 2023 சனாதியதியாக ரணில் விக்கிரமசிங்கே அவர்களால் அரசியலமைப்பிலுள்ள 13 ம் திருத்தச்சட்டம் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்த கோரி கூடுதல் விவாதங்கள் நடைபெற்ற தருணத்தில்

2022 ஒகஸ்ட் 31 திகதி கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் அவர்களால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கை விடப்பட்டது. அதில் மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை விடுத்து மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கிய குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி மக்கள் பேரவையால் இலங்கை மனித ஆணைக்குழுவில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.

இதன்போது வருகை தந்திருந்த ஓமல்பே சோபித்த தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போராட்டங்களை செய்தனர். வாழ்வதற்கான உரிமையை வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி போராட்டத்தில் பங்குபற்றிய அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள்.

போராட்டகாரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது. இது பாரதூரமான குற்றமாகும்.


2023 பெப்ரவரி மாதம் இவ் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் மற்றும் பாரிய அளவிலான தேரவாத சிங்கள பிக்குக்களினால் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக தீயிட்டு கொழுத்தப்பட்டது.

2023 யூலை மாதம் இலங்கை அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பில் துறை சார் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட வேளையில் இந்திய பிரதமர் மோடி தமிழர்கள் விடயத்தினையும் சுட்டிக்காட்டியிருந்தமை அதற்கு பின் சர்வ கட்சி கூட்டத்தினை சனாதிபதி ரணில் நடைமுறைப்படுத்தினார்.

இவ் காலகப்பகுதியில் தமிழர் பகுதியில் தனது பலத்தினை பெருக்க முதலிகே போன்றவர்கள் மற்றும் சிங்கள இடதுசாரியினர் பாரிய முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை காணக்கூடியதாகவுள்ளது. நாட்டின் வளர்சிக்கு பொருளாதார மீட்சிக்கு தங்கள் கருத்துகளினை பகிரங்கமாக பொதுமக்களிடமும் அரசிற்கும் வழங்க முடியாதவர்கள் தங்கள் கருத்துக்களை வடக்கு கிழக்கு மலையகம் என்று தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காக போராடுகின்றோம் என கூறுவதாக மக்கள் தெருவிக்கின்றனர்.

மாண்புமிகு மலையகம் என்ற வரலாற்று நிகழ்வினை தமக்கு சாதகமாக பயன்படுத்த சில மேற்கத்தேய நாடுகள் முன்நிற்கின்றமையும் தமிழ்பேசும் மக்களினை அரசியல் ரீதியான தீர்வுளினை குழப்பும் முறைகளும் நடைபெறுகின்றமை காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இம்முறையாவது இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற ஆவல் பலர் மத்தியிலும் காணப்படுகின்றது. மலையகத் தமிழர் என்ற விடயத்தில் இந்திய அரசானது தனது முழு கவனத்தினையும் செலுத்ததவறியமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய அரசும், துதரகங்களும் அவர்களுக்காக வாழ்வாதார அடிப்படை உரிமைகளுக்கு நிலைபேறாக செயற்படாததும் இராஜதந்திரரீதியில் இரண்டாம் தர மக்களாக பார்க்கும் தன்னமையினையே குறிக்கின்றதுடன் எதிர்காலத்தில் மாற்றங்கள் நடைபெற மலையக மக்கள் தாங்கள் குரல் எமுப்புதல் முக்கியமானதாகும்.

காலம் கடந்த மாண்புமிகு மலையகம்! யார் யாருக்கு நீதி வழங்குவது? கேள்வியோடு…!! (கட்டுரை)

மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான மன்னார் மறுமலர்ச்சியின் ஆரம்பம்!! (கட்டுரை)

You might also like

Leave A Reply

Your email address will not be published.