;
Athirady Tamil News

கொத்துக்கொத்தாக கொல்லப்படும் சிறுவர்கள் – மயானபூமியாக மாறியுள்ள காசா

0

காசாவில் விமானக்குண்டுவீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது நான்கு பிள்ளைகளினதும் உடல்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் கடந்த ஒரு வாரகாலமாக யூசுசெவ் சாராவ் முயன்றுவருகின்றார்.

அந்த தாக்குதலில் அவரது மனைவியும் பெற்றோரும் கொல்லப்பட்டனர்.அவரது இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.அது தவிர அவரின் உறவினர்கள் அவர்களின் மனைவிமார்களும் கொல்லப்பட்டுள்ளனர்.அவர்களின் பல பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த குடும்பங்களில் சிறுவர்கள் இருந்தனர் ,அவர்கள் மிக சாதாரணமான வாழ்க்கையை விரும்பினர் என வோசிங்டன் போஸ்டிற்க்கு குறிப்பிட்டுள்ள யூசுசெவ் சாராவ் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 25 ம் திகதி இடம்பெயர்ந்த காசா மக்களிற்கு உணவை வழங்கிக்கொண்டிருந்தவேளை அவரது வீடு அமைந்துள்ள தொடர்மாடி தாக்குதலிற்கு இலக்கான செய்தி அவருக்கு கிடைத்தது.

மிகவும் சக்தி வாய்ந்த அந்த தாக்குதலால் பலமாடி கட்டிடங்களை கொண்ட அந்த கட்டிடம் தரைமட்டமாகியது.

அவரது மூன்று மகள்மாரும் பத்துவயது மகனும் இடிபாடுகளிற்கு இடையில் காணாமல்போயினர்.

எனது துயரத்தினை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது 30 உறவினர்கள் அவருடன் தங்கியிருந்தனர் அவர்கள் அங்கு பாதுகாப்பாகயிருக்கலாம் என கருதினர்.அவரது உறவினர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

16 வருடங்களிற்கு பின்னர் அவரது சகோதரருக்கு பிள்ளை பிறந்திருந்தது அவரும் மனைவியுடன் கொல்லப்பட்டார்.

நான் அவர்களை எனது கரங்களில் ஏந்தி சென்று புதைத்தேன் என அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்த கேள்விகளிற்கு இஸ்ரேல் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

ஒக்டோபர் ஏழாம் திகதி யுத்தம் ஆரம்பித்த பின்னர் 3700க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

குடும்பங்கள் தங்கள் குடும்பங்களை நினைத்து மாத்திரம் வருந்தவில்லை முழு தலைமுறையையும் நினைத்து வருந்துகின்றன.

காசாவில் கொல்லப்படும் ஐந்து பேரில் 2 பேர் சிறுவர்களாக உள்ளனர்,என பாலஸ்தீன பிராந்தியத்திற்கான சேவ் த சில்ரன் அமைப்பின் இயக்குநர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.

இதில் இடுபாடுகளிற்கு இடையில் இன்னமும் சிக்குண்டுள்ளதாக நம்பப்படும் ஆயிரம் சிறுவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.

பத்து நிமிடத்திற்கு ஒரு பிள்ளை உயிரிழக்கும் நிலை காணப்படுகின்றது என்கின்றார் அவர்.

இதுவரை 9000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புடனான இஸ்ரேலின் மிக மோசமான இரத்தக்களறி மிக்க யுத்தத்தில் இது இடம்பெற்றுள்ளது.

யுத்தத்தில் வெற்றிபெற்றவர்கள் எவரும் இல்லை ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு தெரிவித்ததுடன் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஹமாஸ் அமைப்பினரையும் அவர்களது உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காசாவின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள எண்ணிக்கைகளை அது நிராகரிக்கின்றது.

எனினும் கடந்த மூன்று வாரங்களில் காசாவில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2019 க்கு பின்னர் உலகில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாக மாறியுள்ளது.

காசாவின் பல சிறுவர்கள் பல யுத்தங்களை சந்தித்தவர்கள் – உலகில் அதிகளவானவர்கள் நகரப்பகுதிகளில் வாழும் இட என வர்ணிக்கப்படும் காசா பள்ளத்தாக்கில் வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என ஐநாதெரிவித்துள்ளது.

இவர்களில் அனேகமானவர்கள் 2007 க்கு பின்னர் பிறந்தவர்கள் -ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியவேளை.

அந்த வருடம் இஸ்ரேல் விதித்த தடைகள் காரணமாக இவர்கள் காசாவிற்கு வெளியே சென்றதில்லை.பெரும்பாலானவர்கள் வறுமையில் வாழ்ந்துள்ளனர், அனேகமானவர்களிற்கு மருத்துவ கல்வி வசதிகளோ குடிநீர் வசதிகளோ கிடைக்கவில்லை.

சமீபத்தைய யுத்தம் இந்த சிறுவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணமாக அவர்கள் உறவினர்களுடன் தொடமாடிகளிற்குள் அடைபட்டுள்ளனர்.அல்லது ஐநாவின் புகலிடங்கள் பாடசாலைகள் போன்றவற்றில் ஏனைய பலருடன் தஞ்சம்புகுந்துள்ளனர்.

அல்லது கல்விகற்கவேண்டிய பாடசாலை மேசைகளிற்கு கீழ் உறங்குகின்றனர்.

இடம்பெயர்ந்த சிறுவர்களில் சிலர் வீதிகளில் அல்லது தற்காலிக கூடாரங்களின் கீழ் வசிக்கின்றனர்- காசாவில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் உணவு மருந்து போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் இரவு முதல் பகல் வரை இஸ்ரேல் நாளாந்தம் ஆயிரக்கணக்கான விமானக்குண்டுவீச்சில் ஈடுபடுகின்றது வடக்கிலிருந்து தெற்கிலிருந்து – ஹமாசின் சுரங்கங்கள் மறைவிடங்கள் மாத்திரமின்றி பாடசாலைகள் வீடுகள் மதவழிபாட்டுதலங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றிலும் இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனைகளிற்கு அவசரஅவசரமாக கொண்டு செல்லப்படும் போது அவர்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் எதனையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. என தெரிவிக்கின்றார் தென்காசவில் உள்ள கான் யூனிசின் நாசெர் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவின் வைத்தியர் அஹெமட் அல் பரா.

ஏவுகணையின் அழிக்கும் சக்தி மிகவும் வலிமையானது என அவர் இஸ்ரேலின் ஏவுகணை குறித்து குறிப்பிடுகின்றார். பல சிறுவர்கள் கடும் காயங்களுடனேயே மருத்துவமனைக்கு வருகின்றனர்- துண்டிக்கப்பட்ட அவயங்கள் – கைகால்களில் குண்டு சிதறல்கள் -கடும் எரிகாயங்கள் -வெடிப்பினால் உடம்பிற்குள் இரத்தக்சிவு என அவர் தெரிவித்தார்.

அவருக்கு பின்னால் காணப்படும் பிள்ளையொன்று சிறுநீரகத்திலிருந்து குருதிகசிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டிலில் காணப்படும் சிறுவனின் மூளையிலிருந்து; குருதி கசிகின்றது – அவனது உடல் முழுதும் எரிகாயங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.