ஏதேச்சதிகாரியாக மாறிய ஜனநாயகத்தின் சின்னம் – ஷேக் ஹசீனா
bbc
மாணவர்களின் பல வாரப்போராட்டம் உயிரிழப்புகள் மிகுந்த தேசியரீதியிலான அமைதியின்மையாக மாறியதை தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
76 வயது ஷேக் ஹசீனா ஹெலிக்கொப்டரில் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டவேளை இது இடம்பெற்றது.
இது பங்களாதேசின் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த பிரதமரின் ஆட்சியை எதிர்பாராத விதத்தில் முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. பிரதமர் ஹசீனா 2009 முதல் பதவியிலிருந்து வந்துள்ளதுடன் ,20 வருடங்களிற்கு மேல் நாட்டை ஆண்டுள்ளார்.
சமீபவருடங்களில் தென்னாசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமானவர் என்ற பெருமை இவருக்குள்ளது, ஹசீனா ஒரு ஜனநாயக போராளியாக அதற்கான அடையாளமாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
எனினும் கடந்த சில வருடங்களாக இவர் எதேச்சதிகாரியாக மாறிவருகின்றார் தனது ஆட்சிக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் ஒடுக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கம் கொண்ட கைதுகள்,காணாமல்போதல்,சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள்,உட்பட பல துஸ்பிரயோகங்கள் அவரின் ஆட்சியின் அதிகரித்துள்ளன.
ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் முன்னொரு போதும் இல்லாத வகையில் அவர் நான்காவது தடவையாக வெற்றிபெற்றார் ஆட்;சியை கைப்பற்றினார் எதிர்கட்சிகள் இந்த தேர்தலை பகிஸ்கரித்ததுடன் ஏமாற்று நாடகம் என வர்ணித்திருந்தன.
ஷேக் ஹசீனா எப்படி அதிகாரத்திற்கு வந்தார்?
1947 இல் கிழக்கு வங்காளத்தில் முஸ்லீம் குடும்பத்திற்கு பிறந்தவர் இவர் , அரசியல் என்பது இவரின் இரத்தத்தில் ஊறிய விடயம்.
சுதந்திர பங்களாதேசின் தந்தை என அழைக்கப்படும் தேசியவாத தலைவர் ஷேக் முஜிபூர் ரஹ்மான் ஹசீனாவின் தந்தை.முஜிபூர் ரஹ்மான் 1971 இல் இடம்பெற்ற பாக்கிஸ்தானிலிருந்து பிரிவதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.பின்னர் தேசத்தின் முதல் ஜனாதிபதியானார்.
அவ்வேளை டாக்கா பல்கலைகழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ஷேக் ஹசீனா முக்கியமான மாணவ தலைவர் என்ற பெயரை ஏற்கனவே பெற்றிருந்தார்.
1975 இல் இடம்பெற்ற இராணுவசதிப்புரட்சியின் போது ஹசீனாவின் தந்தையும் அவரது குடும்பத்தவர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர்.அவ்வேளை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்ததால் ஹசீனாவும் அவரது இளைய சகோதரியும் உயிர்தப்பினர்.
இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழந்த பின்னர் ஹசீனா 1981 இல் மீண்டும் பங்களாதேஸ் திரும்பினார்.அவரது தந்தையின் அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவரானார்.
ஜெனரல் ஹ_சைன் முகமட் எர்சாட்டின் இராணுவஆட்சியின் போது எதிர்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஹசீனா பொதுமக்கள் எழுச்சி காரணமாகதேசிய தலைவராக குறியீடாக மாறினார்.
1996 இல் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீர் பங்கீடு உடன்படிக்கை,நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட பழங்குடி கிளர்ச்சியாளர்களுடனான உடன்படிக்கை போன்றவற்றிற்காக பெயர் பெற்றார்.
அதேவேளை பல ஊழல்மிகுந்த வர்த்தக ஒப்பந்தங்களிற்காக அவரது அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்தியாவிற்கு அதிகளவு கீழ்ப்படிவாக காணப்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுகளும் காணப்பட்டன.
2001இல் இடம்பெற்ற தேர்தலில் அவரது அரசியல் சகாவும் பின்னர் போட்டியாளருமான பேகம் காலித ஜியாவிடம்தோல்வியடைந்தார்.
அரசியல் வம்சங்களின் வாரிசுகளான இரு பெண்களும் மூன்று தசாப்தகாலங்களிற்கும் மேலாக பங்களாதேஸ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இருவரும் போரிடும் பேகங்கள் என அழைக்கப்பட்டனர்- பேகம் என்பது உயர்பதவியில் இருக்கும் ஒரு முஸ்லீம்பெண்ணை குறிக்கின்றது.
இருவருக்கும் இடையிலான கடும் போட்டியால் பேருந்துகளில் குண்டுகள் வெடித்தன,காணமல்போதலும் சட்டத்திற்கு விரோதமான படுகொலைகளும் இடம்பெற்றன என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
2009 இல் இடம்பெற்ற காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தல் ஹசீனா வெற்றிபெற்றார்.
ஒரு உண்மையான அரசியல் உயிர்பிழைப்பாளரான இவர் எதிர்கட்சியில் இருந்தவேளை பல கொலை முயற்சிகளில் இருந்து உயிர்தப்பினார். பல தடவை கைதுசெய்யப்பட்டார்.
2004 இல் இடம்பெற்ற கொலைமுயற்சி இவரது செவிப்புலனை பாதித்தது.
ஹசீனாவை நாடு கடந்த வாழ்க்கைக்கு தள்ளுவதற்காக பல முயற்சிகள் இடம்பெற்றன- ஊழல் தொடர்பில் பல நீதிமன்ற குற்றச்சாட்டுகளை இவர் எதிர்கொண்டார்.
ஷேக் ஹசீனா சாதித்தது என்ன?
ஹசீனாவின் ஆட்சியின் கீழ் பங்களாதேஸ் முரண்பட்ட தோற்றத்தினை வெளிப்படுத்துகின்றது.
ஒரு காலத்தில் உலகின் மிகவும் வறிய நாடாக காணப்பட்ட முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பங்களாதேஷ்,2009 முதல் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
தற்போது பிராந்தியத்தில் அதிக வேகமாக வளரும் நாடாக பங்களாதேஸ் காணப்படுகின்றது,அதன் மிகப்பெரிய அயல்நாடான இந்தியாவை கூட பின்தள்ளியுள்ளது.கடந்த ஒரு தசாப்தத்தில் அதன் தலாவருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 20 வருடங்களில் 25 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டுள்ளனர் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
ஆடைத்தொழில்துறையே இந்த வளர்ச்சிக்கு காரணம்,பங்களாதேசின் ஏற்றுமதி பெருமளவில் ஆடைதொழிற்ர்றை சார்ந்ததாகவே காணப்படுகின்றது,ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு ஆடைகளை பங்களாதேஸ் ஏற்றுமதி செய்கின்றது.
நாட்டின் நிதியையும்,கடன்களையும் அபிவிருத்தி உதவிகளையும் பயன்படுத்தி ஹசீனா அரசாங்கம் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா குறித்த சர்ச்சைகள் என்ன?
பிரதமரான பின்னர் ஹசீனா எதிர்க்கொண்ட பிரச்சினைகளில் சமீபத்தைய ஆர்ப்பாட்டங்களே மிகவும்கடும் சவாலானவையாக காணப்பட்டன.
அவரது கட்சி நான்காவது தடவையாக தெரிவு செய்யப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தலின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அரசாங்க வேலைவாய்ப்பில் காணப்படும் ஒதுக்கீட்டு முறையை நீக்கவேண்டும் என கோரியே ஆர்ப்பாட்டங்கள் முதலில் ஆரம்பமாகின. எனினும் ஹசீனா ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரை பயன்படுத்தியதை தொடர்ந்து,200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை காயமடைந்ததை தொடர்ந்து அந்த ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தி;ற்கு எதிரான பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களாக மாறின.
ஹசீனா பதவி விலகவேண்டும் என வேண்டுகோள்கள் அதிகமாக வெளியாக தொடங்கிய வேளையில் அவர் அதனை ஏற்கப்போவதில்லை என பிடிவாதமாக காணப்பட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என வர்ணித்த அவர் இந்த பயங்கரவாதிகளை தனது ஆதரவாளர்கள் இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நூற்றுக்கணக்கானவர்களை சிறையில் அடைத்த அவர் பெருமளவானவர்களிற்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார்.