Factum Perspective: உக்ரைன் – மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ஹாட்ஹவுஸ்
வினோத் மூனசிங்க
பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனின் “இராணுவமயப்படுத்தலின் நீக்கத்தை” இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது “விசேட இராணுவ நடவடிக்கையை” (Spetsialnaya Voennaya Operatsiya – SVO) ஆரம்பித்தது. ரஷ்யப் படைகள் 2014 இல் கிறிமியாவில் மேற்கொண்டதைப் போலவே தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்தன. உக்ரேனியப் படைகள் எதிர்க்கவில்லை. ரஷ்யர்கள் தாங்கள் எதிர்கொண்ட எதிர்ப்பின் அளவை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
வடக்கில், ரஷ்யர்கள் உக்ரேனிய தலைநகரான கியிவ் அருகே அடையும் வரை நல்ல முன்னேற்றத்தை அடைந்தனர், அங்கு வான்படைத் துருப்புக்கள் அன்டோனோவ் விமான நிலையத்தை கைப்பற்ற முயன்றனர். இங்கே, வலுவான உக்ரேனிய எதிர்ப்பு அவர்களை அவர்களின் வழிகளில் நிறுத்தி, இறுதியில் அவர்களை பின்னோக்கி தள்ளியது.
தெற்கில், ரஷ்யர்கள் ஆழமாக ஊடுருவி, மைக்கோலேவுக்கு வெளியே உள்ள உயர் படைகளால் தடுத்து நிறுத்தப்பட முன்னராக டினீப்பர் ஆற்றைக் கடந்து, கெர்சனைக் கைப்பற்றியதால் மரியுபோல் துறைமுகத்தை ஈரூடகப் படைகள் தாக்கின.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர் தொடர்பான மரபு அறிவை மிகவும் சீர்குலைப்பதாக நிரூபித்த கசப்பான சண்டையை அடுத்த இரண்டு ஆண்டுகள் கண்டன.
ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது “ட்ரோன்கள்”, கவச வாகனங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் அதிகரித்த ஆற்றல் மற்றும் விமான எதிர்ப்பு பாதுகாப்புகளின் அதிகரித்த வினைத்திறன் ஆகிய மூன்று காரணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வெளிப்பட்டுள்ளன. இவை இராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சியையும், தற்போதுள்ள இராணுவ தளவாடங்களைப் பயன்படுத்துவதையும் பாதித்துள்ளன.
ஆழமான நடவடிக்கைகள்
1940-42 இல், ஜெர்மானிய போர் படையணி வெண்ணையை கத்தியால் வெட்டியதை போல தனது எதிரிகளை தாக்கியது. நாஜிக்கள் மற்ற ஆயுதங்களுடன் இணைந்ததாக பெரிய கவச வாகனங்களைப் பயன்படுத்தி, எதிரிகளின் எல்லைகளில் ஊடறுப்புகளை மேற்கொண்டு தளவாடங்களையும் உள உறுதியைத் தாக்கினர். தாக்குதல் விமானம் நீண்ட தூர பீரங்கியாக செயற்பட்டதுடன், முன்னேறும் கவச வாகனங்களுக்கு ஆதரவை வழங்கியது.
சோவியத் யூனியன் இதேபோன்ற “ஆழமான நடவடிக்கைகளுடன்” பதிலளித்ததுடன், முதலில் 1920 மற்றும் 30களில் மார்ஷல் துகாசெவ்ஸ்கி உருவாக்கப்பட்டது. கவச வாகனம் போர்க்களத்தின் ராணியாக மாறியதுடன், அனைத்து படைகளும் சோவியத் T-34 நடுத்தர கவச வாகனத்தை பின்பற்ற முயற்சித்ததுடன், இது நகர்வு, பாதுகாப்பு மற்றும் சுடுதிறன் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை மேம்படுத்தியது.
இந்த வகையான விரைவான, ஒருங்கிணைந்த நடவடிக்கைப் போர் 1973 அரபு-இஸ்ரேல் போர் வரை தொடர்ந்தது. இஸ்ரேலியர்கள் தங்களது கவச வாகன தாக்குதல்கள் கவச வாகன எதிர்ப்பு வழிப்படுத்தப்பட்ட ஆயுதங்களால் எதிர்க்கப்படுவதைக் கண்டதுடன், அவர்களின் வான்வழித் தாக்குதல்கள் விரைவான விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் மேற்பரப்பில் இருந்தான வான் ஏவுகணைகளால் வரையறுக்கப்பட்டன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இராணுவம் “வான்வழிப் போர்” என்ற எண்ணக்கருவை உருவாக்கியதுடன், நேரடி மோதல், சுடுதிறன் மற்றும் ஆயுத தளவாடத்தின் மேம்பட்ட திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிரியை வெல்ல வேகம், நுணுக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைறை ஒருங்கிணைத்து எதிரியின் போரிடும் திறனை சீர்குலைத்தது.
இந்த எண்ணக்கருவை சோதிக்க அமெரிக்காவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் அனைத்துப் போர்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் தளவாட ரீதியாகவும் தாழ்ந்த எதிரிகளான சிறிய கிரெனடா, பனாமா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிற்கு எதிராக இருந்தன.
உதாரணமாக, ஈராக்கியர்கள், பொருளாதாரத் தடைகள் காரணமாக, பயிற்சி பெறவில்லை மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள், மதிவெடிகள் அல்லது வினைத்திறனான விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைகள் எதுவுமில்லை.
எனவே, அமெரிக்க கவச வாகன பிரிவுகள் பாக்தாத் வழியாக “இடி போன்ற நகர்வுகளை” (கவச மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட படைகளைப் பயன்படுத்திய தாக்குதல்கள்) ஆரம்பித்தபோது, அவர்கள் சிறியளவான எதிர்ப்பையே சந்தித்தனர்.
புதிய தொழில்நுட்பங்கள்
இருப்பினும், இந்த விடயம் 1973 முதல் எழுத்திலேயே இருந்தது. 1995 ஆம் ஆண்டு செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னியில் (கவச எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருந்த எதிரிக்கு எதிராக) ரஷ்ய “இடி ஓட்டம்” அதன் 80 சதவீத கவச வாகனங்களை இழக்க வழிவகுத்தது. ஹெஸ்பொல்லா போராளிகள் 2006 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பை முறியடித்ததுடன், கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களை, குறிப்பாக கவச எதிர்ப்பு ஏவுகணைகளை நன்கு பயன்படுத்தினர்.
அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” போக்கில், கணிசமான வினைத்திறனுடன் தொலைதூரத்தில் இயக்கப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தியது. 14,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், இவற்றில் 21,000 பேர் வரை உயிரிழந்ததுடன், இதில் ஐந்தில் ஒரு பங்கு பொதுமக்களாவர்.
குறிப்பிடத்தக்க வகையில், 2010களில், இஸ்லாமிய அரசு (ISIS) என அறியப்படும் டேஷ், சிரிய மற்றும் ஈராக் இலக்குகளுக்கு எதிராக பேரழிவு விளைவைக் கொண்ட மலிவான குவாட்காப்டர் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றைய சிரிய குழுக்கள் 2018 இல் ரஷ்ய தளங்களுக்கு எதிராக ட்ரோன்களின் குவியல்களை ஏவியது. யேமனில் உள்ள அன்சரல்லா படைகளும் அமெரிக்க ஆதரவு கூட்டணிக்கு எதிரான போராட்டத்தில் அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தன.
2020 ஆம் ஆண்டில், சிரிய இராணுவத்தைத் தாக்க துருக்கி ட்ரோன்களின் குவியல்களை பயன்படுத்தியது. துருக்கி முன்பு விலையுயர்ந்த இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ட்ரோன்களை நம்பியிருந்தது, ஆனால் பொருளாதாரத் தடைகள் அதன் சொந்த, மிகவும் மலிவான பதிப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தியது.
பின்னர் 2020 இல் அஜர்பைஜான் ஆர்மீனியாவிற்கு எதிராக ட்ரோன்களை உளவு பார்த்தல், தரை பீரங்கிகளைக் கண்காணித்தல், எதிரி நிலைகள் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் தரைப்படைகளுக்கு பாதுகாப்பு வழங்குதலுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. விமானத்தை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஆர்மேனிய வான் பாதுகாப்பு, ட்ரோன்களுக்கு எதிராக வினைத்திறனற்றதாக நிரூபிக்கப்பட்டது.
தந்திரோபாய மாற்றங்கள்
ரஷ்யர்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போதும் சோவியத்தினுடைய ஆழ்ந்த ஊடுருவல் கோட்பாட்டைக் கடைப்பிடித்தனர். ஒருங்கிணைந்த கவச மற்றும் காலாட்படை வரிசைகள் தரை வழியான படையெடுப்பை முன்னெடுத்தன. உக்ரைனின் ஆயுதப் படைகள் (AFU), கவச வாகனங்கள், பீரங்கி, விமானம் மற்றும் கப்பல்களில் பலவீனமாக இருந்தபோதும், படையெடுப்பு தரைப்படையை விட மூன்றுக்கு ஒன்றாக காணப்பட்டது.
அவர்கள் ஈட்டி “உயர் தாக்குதல்” கவச எதிர்ப்பு ஏவுகணைகள், கொடிய புதிய பைரக்டர் TB-2 ட்ரோன்கள் மற்றும் ஓர் “ரகசிய ஆயுதமான” Mass of First-person view (FPV) குவாட்காப்டர் ட்ரோன்கள் ஆகியவற்றையும் வைத்திருந்தனர். இந்த ஆயுதங்கள் ரஷ்ய தரை தாக்குதலை நிறுத்திய அதே நேரத்தில் வலுவான வான் பாதுகாப்பு ரஷ்ய விமானங்களை நடுநிலைப்படுத்தியது. இதற்கிடையில், உக்ரேனிய கடல் ட்ரோன்கள் ரஷ்ய கடற்படையின் ஆதிக்கத்தை ஈடுகட்டுகின்றன.
ட்ரோன்கள் எங்கும் பரவியிருப்பதால், செயற்கைக்கோள் கண்காணிப்பு, பெரிய அளவிலான துருப்புக்கள் அல்லது கவசங்கள் உடனடி இலக்குகளாக மாறுகின்றன. தாக்குதல் மற்றும் தற்காப்பு இரண்டிலும், சண்டையின் தாக்கம் அணிகள் அல்லது படைப்பிரிவு அளவிலான அலகுகள் தாங்கப்பட்டுள்ளன.
ஐந்து அல்லது ஆறு கவச வாகனங்களை விட பெரிய எண்ணிக்கையிலான கவசத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலையில், அதிக பயிற்சி பெற்ற பிரிவுகளின் சிறிய குழுக்கள் மிகவும் வினைத்திறனானதாக இருந்தன. ஆயுதமேந்திய காலாட்படை யுத்த வாகனங்களான மேம்படுத்தப்பட்ட லொறிகள் செலவழிக்கக்கூடிய துருப்பு போக்குவரத்துகளாக மாறியுள்ள அதே நேரத்தில் கவச வாகனங்கள் காலாட்படை ஆதரவுக்கான நடமாடும் பீரங்கிகளாக செயற்படுகின்றன.
போரானது மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக, இரு தரப்பிலும் உள்ள சிறிய பிரிவுகளின் கடுமையான போட்டித் தாக்குதல்களின் தொடராக மாற்றமடைந்தது. AFU குறைந்த எண்ணிக்கையில் இருந்த ரஷ்யப் படைகளை கிய்வ், கார்கிவ் மற்றும் கெர்சனில் இருந்து பின்னோக்கி தள்ள முடிந்ததுடன், ரஷ்யர்கள் டான்பாஸில் சில வெற்றிகளைப் பெற்றதுடன் குறிப்பாக செவெரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க் மற்றும் பாக்முட் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நேட்டோ ஆயுதங்களால் பெரிதும் வலுப்படுத்தப்பட்ட, நேட்டோ பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட அல்லது மீள் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவப் பிரிவுகளுடன், AFU அதன் கோடைகால எதிர் தாக்குதலை ஆரம்பித்தது.
அஸோவ் கடலை அடையும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, முழுவதுமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு மீட்டர் பிரதேசத்திற்கும் மெதுவாக, இரத்தக்களரியாக ஆக்கப்பட்டது. விலையுயர்ந்த, மிகவும் புகழ் பெற்ற மேற்கத்திய ஆயுத அமைப்புகள் அவற்றின் மிகவும் மலிவான ரஷ்ய எதிரமைப்புக்களைப் போலவே பாதிக்கப்படக்கூடியவை என்பதை நிரூபித்தன.
ரஷ்யர்கள் தங்களது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியதுடன், உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்து பாரியளவான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். எவ்வாறாயினும், ரஷ்ய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளில் போருக்கு முன் திட்டமிடப்பட்ட விரைவான, ஆழமான ஊடுருவல் சூழ்ச்சி நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் மற்றும் நகர்ப்புற மாவட்டங்கள், காடுகள் மற்றும் மர எல்லைகளினூடாக போர்கள் நடந்துள்ளன. தற்காலிக கோட்டைகளை உருவாக்குவதற்காக வலுவாக கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களை ஒன்றிணைத்து குழுவாக்கும் சோவியத் நடைமுறை இந்த செயன்முறைக்கு உதவியது.
ட்ரோன்கள், ஆமை கவச வாகனம், கண்ணிவெடிகள் மற்றும் குண்டுகள்
பிரமிக்கதக்க காணொளி அமைப்புக்களுடனான உக்ரேனிய ஆளில்லா விமானங்கள், அதிகமான ஊடகங்களைத் தூண்டின. இருப்பினும், ரஷ்யர்கள் ஈரானிய வடிவமைப்பிலான “காமிகேஸ்” ட்ரோன்கள் மற்றும் FPV ட்ரோன்கள் மற்றும் பெரிய வழக்கமான ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தனர், இருப்பினும் அவர்களின் அதிர்ச்சியூட்டும் காணொளிப் பதிவுகள் குறைந்த ஊடக கவனத்தையே பெற்றன.
ஆயினும்கூட, ட்ரோன் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வினைத்திறனானதாக நிரூபிக்கப்பட்டாலும், வெற்றிகரமான தாக்குதல்களின் ஒளிபரப்பு காட்சிகள் அவற்றின் தாக்கத்தை மிகைப்படுத்தின.
கவச வாகனத்தை முடக்க அல்லது அழிக்க சராசரியாக பத்து FPV ட்ரோன் தாக்குதல்கள் தேவைப்படலாம். திறந்தவெளியில் உள்ள காலாட்படைக்கு எதிராக ட்ரோன்கள் மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
கவச வாகனங்கள் வான் தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக கவச வாகனங்களின் மேலே பொருத்தப்பட்ட “தணிக்கும் கூண்டுகள்”, மேம்படுத்தப்பட்ட உலோகக் கூண்டு போன்ற கட்டமைப்புகள் போன்ற எதிர் நடவடிக்கைகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன.
ரஷ்யர்கள் உலோக உறைகள் கொண்ட தொட்டிகளை மாற்றியமைப்பதன் மூலம் இதை ஒரு படி மேலே கொண்டு சென்றதுடன், அவர்களின் ஆமைக் குடும்ப தோற்ற அமைப்பால் அவை “ஆமை கவச வாகனங்கள்” என்ற புனைப்பெயரைப் பெற்றன. ட்ரோன்களுக்கு எதிரான இலத்திரனியல் எதிர் நடவடிக்கைகள் இலத்திரனியல் போர் தந்திரோபாய அளவில் அதிக தீவிரத்தை எட்டியுள்ளதால் மாறுபட்ட வெற்றியைப் பெற்றுள்ளன.
கண்ணிவெடிகள் ஓர் பெரிய போரில் குறிப்பாக கவச வாகனங்களுக்கு எதிராக வெற்றி பெற்ற ஆயுதமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை நிலைநிறுத்துவதற்கான புதிய மற்றும் விரைவான முறைமைகள் கண்ணிவெடிகள் மூலமாக அழிக்கப்பட்ட பாதைகள் நீண்ட காலத்திற்கு அகற்றப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதற்கிடையில், கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள், விலை உயர்வானதாக இருப்பதால், ட்ரோன்கள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் தாக்குதலுக்கான பிரதான இலக்குகளாக மாறியது.
வான் பாதுகாப்பின் வலிமையானது தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை போர்க்களத்தில் இருந்து தொலைவில் இருக்க கட்டாயப்படுத்தியதுடன், fire-and-forget ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் குண்டுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.
முன்னரங்கில் வான்வழியின் மேன்மையை நிலைநிறுத்திய ரஷ்யர்கள் முன்னரங்கிற்கு பின்னால் மிகத் தொலைவிலிருந்து தங்கள் இலக்குகளை நோக்கிச் சென்று தாக்கத்தில் பேரழிவை ஏற்படுத்தும் திறன் கொண்ட FAB 500, 1500 மற்றும் 3000 ஸ்மார்ட் குண்டுகளை மேலும் மேலும் சார்ந்து இருந்தனர்.
தொழிற்துறைப் பலம்
இருப்பினும், போரின் போக்கு பெரும்பாலும் பீரங்கிகளால் தீர்மானிக்கப்பட்டது. துப்பாக்கிகள் மற்றும் பல்குழல் ஏவுகணை செலுத்தி (MBRL) அமைப்புகள் இரண்டும் அதிகரித்த துல்லியம் மற்றும் எல்லையுடன் அதிநவீனமாக வளர்ச்சியடைந்துள்ளன.
ஏறக்குறைய நிலையான, முற்றுகை போன்ற போர்கள், தற்காப்புப் படையின் எழுச்சியின் விளைவாக, வீரர்கள் அல்லது கவச வாகனங்களின் எண்ணிக்கையை விட டன் கணக்கில் குண்டுகள் முக்கியமானவை என்று வெளிப்படுத்துகினறன. உதாரணமாக, அதிக எண்ணிக்கையிலான ரஷ்யப் படை வடக்கு கார்கிவ் பகுதியில் கசப்பான AFU தாக்குதல்களை முதன்மையாக பீரங்கிகளைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது.
ரஷ்யப் படைகளின் அண்ணளவான 10,000 குண்டுகளுடன் ஒப்பிடும்போது AFU தினமும் சுமார் 2,000 குண்டுகளை வீசுகிறது. இந்த எண்கள் பெரும்பாலான நாடுகள் திட்டமிட்டதை விட அதிகமாக உள்ளதுடன், அதனால் இருப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன.
நேட்டோ இந்த ஆண்டு 1.2 மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே தென் கொரியாவிலிருந்து 300,000 கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 800,000 குண்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் உக்ரைனுக்கான சோவியத் பாணியிலமைந்த வெடிமருந்துகளை குறிப்பிடப்படாத அளவு தயாரித்து வருகிறது.
மறுபுறம், ரஷ்யா கடந்த ஆண்டு மூன்று மில்லியன் குண்டுகளை உற்பத்தி செய்ததுடன், இந்த ஆண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இருப்பினும் அதன் இலக்கு தெரியவில்லை. மேலதிகமாக, ரஷ்யா ஈரான் மற்றும் வட கொரியாவில் இருந்து வெளிப்படுத்தப்படாத ஏழு இலக்க குண்டுகளை ஒதுக்கியுள்ளதுடன், மேலும் இந்தியா, பெலாரஸ் மற்றும் சீனாவிலிருந்து இன்னும் அதிகமாக வாங்கலாம்.
இறுதிப் பகுப்பாய்வில், இந்தப் போர் தொழிற்துறை வலிமையின் மீது தங்கியிருக்கிறது. ரஷ்ய (முக்கியமாக அரசுக்கு சொந்தமான) இராணுவ-தொழிற்துறை வளாகமானது ஷெல்கள், குண்டுகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் முழு மேற்கையும் விஞ்சியிருக்கிறது. இது தரப்படுத்தல், மையப்படுத்தப்பட்ட திசைப்படுத்தல் மற்றும் தேவைக்கு ஏற்ற உற்பத்தி ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளது.
மாறாக, மேற்கத்திய இராணுவ-தொழிற்துறை வளாகம், இலாப உந்துதல் காரணமாக, தேவையான கூடுதல் உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்ய மறுத்தது. இது போரிலிருந்து வெளிப்படும் மிகப்பெரிய மூலோபாய பாடமாக இருக்கலாம்.
இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், இந்த மோதல் எதிர்காலத்தில் போர்கள் நடத்தப்படும் விதத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமச்சீரற்ற தன்மையை சமன் செய்துள்ள அதே நேரத்தில் பீரங்கிகளைப் பயன்படுத்துவது வேறுபாட்டை விரிவுபடுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த இரத்தக்களரி மோதலில் இருந்தான மிகவும் நம்பிக்கையூட்டும் விடயம் என்னவென்றால், இப்போது வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகக் கருதப்படுகின்ற போர்கள் மனித உயிர்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்தவையாகும்.
வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.