புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் – அனுரகுமார
புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணியமாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்
இந்தியாவின் வீக்கிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
நமது கடல் நிலம் மற்றும் வான்வெளி ஆகியவை இந்தியாவையோ அல்லது பிராந்திய ஸ்திரத்தன்மையையோ அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்என அவர் தெரிவித்துள்ளார்
கேள்வி- இந்த தேர்தல் ஏன் இலங்கைக்கு முக்கியமானது?
பதில்- இதுஇலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு தேர்தல்.ஒவ்வொரு தேர்தலிலும் அதிகாரம் ஆளும் ஒரு தரப்பிலிருந்து மற்றைய தரப்பின் கரங்களிற்கு செல்லும்.
ஆரம்பத்தில் இந்த குழுக்கள் தனித்தனி அடையாளங்களை கொண்டிருந்தன.
ஆனால் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக அவை கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒன்றிணைந்துள்ளன.
இதன் காரணமாக 1994 முதல் அரசாங்கங்கள் மாறியுள்ள போதிலும்,பலதனிநபர்கள் அமைச்சு பதவிகளில் நீடிக்கின்றனர்.
சிலர் காலப்போக்கில் முரண்பட்ட அமைச்சரவை திருத்தங்களை ஆதரித்துள்ளனர்.
இதுவரை தேர்தல்கள் ஆட்சிக்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
ஆகவே எங்கள் நாட்டின் அரசியல் சமூக பொருளாதார பாதையை மீளவடிவமைப்பதற்கு புதிய பாதையில் செலுத்துவதற்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது.
இந்த தேர்தல் ஒளிமயமான எதிர்காலம் என்ற வாக்குறுதியுடன் அரசாங்கத்தை மக்களிற்கு நெருக்கமாக கொண்டுவருகின்றது.
நாங்கள் முன்னரும் இந்த இலக்குகளை முன்வைத்துள்ள போதிலும் இம்முறையே அர்த்தபூர்வமான மாற்றத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் எங்களிற்குள்ளது.
அதிகாரத்தின் பாரம்பரிய சுழற்சிகளில் இருந்து விலகி மக்கள் நலனில் வேரூன்றிய பொது இயக்கத்தினால் அதிகார பரிமாற்றம் முன்னெடுக்கப்படும்
கேள்வி- 2022 அரகலய எழுச்சி தேசிய மக்கள் சக்தியை பிரபலமாக்கியது என கருதுகின்றீர்களா?
பதில்- மக்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவே அந்த போராட்டம் வெடித்தது.
ஒரு குடும்பம் ஆளும்நாட்டில்,எண்ணெய் எரிவாயு மின்சாரம் இல்லாத நிலையை எண்ணிப்பாருங்கள்,சிறுவர்களிற்கு பால்மா போன்ற அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்கவில்லை,பொதுமக்களால் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை.
வீதியில் இறங்கி ஆளும் உயர் குழாத்தை அகற்றுவதே ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்டது.
மக்களே அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவார்கள், என்றால்,அவர்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகும் என்றால் மீண்டும் கிளர்ந்தெழுவது என்பது அவர்களின் உரிமை,
அவ்வாறான போராட்டம நியாயமானது என்பதுடன் நியாயப்படுத்தக்கூடியது.
கேள்வி-
நீங்களும் அதன் ஒரு பகுதி?
பதில் – நாங்களும் அந்த போராட்டத்தின் பகுதியானோம் தலைவர்களாக- திட்டமிடுபவர்களாக இல்லை பார்வையாளர்களாக.
ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அந்த போராட்டத்தின் அபிலாஷைகளை அடைவதில் உள்ள குறிப்பிடத்தக்க சவால்களை உணர்ந்துள்ளது.
அஜாராகம் என்பது தீர்வல்ல,ஆனால் நடைமுறையில் உள்ள அரசியல் கட்டமைப்பு பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏதோ ஒரு வகையிலான அரசமைப்பு அதிகாரத்தை பேணவேண்டும்.
எனினும் மக்கள் தேர்தல்கள் மூலம் தங்களின் நம்பிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
எழுச்சி மற்றும் மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றினால்; உருவாகியுள்ள சூழ்நிலையால் நாங்கள் நன்மையடைந்துள்ளோம்.
கேள்வி
விடுதலை இயக்கம் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது ஸ்திரமின்மையை உருவாக்குமா?
பதில்-மக்களின் கிளர்ச்சி ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றலாம் ஆனால் அதன் பின்னர் அராஜகம் காணப்படக்கூடாது.
அந்த ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் ஓழுங்கை பேணுவதற்கு புதிய அரசாங்கம் அவசியம்.
அராஜகத்திற்குள் நாடு சிக்குப்படுவதை தவிர்ப்பதற்காக ஜனநாயக அரசமைப்பை அடிப்படையாக அரசாங்கத்தை உருவாக்குவதே தீர்வாகும்.
அவ்வாறான அரசாங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஸ்திரதன்மையை ஏற்படுத்த முடியும்,ஒழுங்கின்மையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த அணுகுமுறையின் மூலம் ஆட்சியை நிர்வாகத்தை மீள ஏற்படுத்தலாம்,வழமையாக காணப்படக்கூடிய குழப்பநிலைகளை தவிர்க்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.
கேள்வி – சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன அது குறித்து?
பதில்-
ஆம் நாங்கள் தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் உள்ளோம்,அதனை நடைமுறைப்படுத்துவதால் மக்களிற்கு குறிப்பிடத்தக்க துன்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளி;ல் ஈடுபடுவதற்கான மக்கள் ஆணையை நாங்கள் கோருகின்றோம்.
அவர்கள் மக்களை மதிப்பார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
பொருளாதார இலக்குகளை முன்னெடுக்கும் போது மக்கள் மீதான சுமைகளை குறைக்கும் விதத்தில் அவற்றை முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் நம்புகின்றோம்.அதேவேளை நுண்பொருளாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.
எங்கள் பொருளாதாரம் பலவீனமானது சிறிய அதிர்ச்சி கூட பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் இதன் காரணமாக நாங்கள் நீண்ட கால ஸ்திரதன்மையை பேணுவதற்காக அவசியமான மாற்றங்களை படிப்படியாகவே முன்னெடுக்கவுள்ளோம்.
கேள்வி – இந்தியாவுடன் எவ்வாறான ஈடுபாட்டை கொண்டிருப்பீர்கள் இலங்கை குறித்து ஆர்வம் கொண்டுள்ள சீனா போன்ற நாடுகளும் உள்ளன?
பதில் இந்தியா குறித்த எங்களின் அணுகுமுறை அதன் அருகாமையையும்,புவிசார் அரசியலில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் பிரதிபலிக்கும்.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் இந்தியா ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது மேலும் இது நமது வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கு முக்கியமானது. நமது கடல் நிலம் மற்றும் வான்வெளி ஆகியவை இந்தியாவையோ அல்லது பிராந்திய ஸ்திரத்தன்மையையோ அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். கூடுதலாக நமது வளர்ச்சி முயற்சிகளில் இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்துஇ நமது பொருளாதார நடவடிக்கைகள் நம் நாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை கவனமாக பரிசீலிப்போம்.
நமது பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவுவது அனைவரும் அறிந்ததே. இந்தியாஇ இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு நாடாக இருப்பதால் நமது பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளின் மூலோபாய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறது.
இதற்கிடையில் சீனா இங்கு தனது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது இதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார வாய்ப்புகளை எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் பிராந்திய பாதுகாப்பை பாதுகாப்பதே எமது அணுகுமுறையாக இருக்கும்.
எவ்வாறாயினும் எமது இறையாண்மையைப் பேணுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் இந்த புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும் அடிபணிய மாட்டோம். உலகளாவிய நிலைமைகளுடன் ஒத்துப்போகும் மற்றும் நமது தேசிய நலன்களுக்கு திறம்பட சேவை செய்யும் வலுவான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்வதை நாங்கள் நம்புகிறோம்.