இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது பாராளுமன்ற சோதனையை எதிர்கொள்கிறார்
இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால் சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரதிசநாயக்க பெற்றார்.இலங்கை வர்த்தக சம்மேளனம்இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான் முன்வைத்துள்ள திட்டங்கள் ஜேவியின் சோசலிஸ நிகழ்ச்சிநிரல் போன்று காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
திசநாயக்கவின் கீழ் நாடு சீனா அல்லது வியட்நாமின் பொருளாதார மாதிரியை பின்பற்றக்கூடும் என வர்த்தக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனுரகுமாரதிசநாயக்கவின் கட்சி அதன் சின்னமாக சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் சுத்தியல் மற்றும் அரிவாளை கொண்டுள்ளது.
திசநாயக்கவின் முதல்பதவிக்காலத்தி;ல் முழுமையான ஜனநாயக அமைப்பை கொண்டிருப்பதில் அவர்கள் வியட்நாமை விடசிறந்தவர்களாகயிருப்பார்கள் என அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட புவிசார் அரசியல் இடர்பகுப்பாய்வு நிறுவனமான ட்ரென்சிக்கின் இம்ரான் புர்கான் தெரிவிக்கின்றார்.
நீண்டகாலமாக கம்யுனிஸ ஆட்சியை கொண்டிருக்கும் வியட்நாமை விட இலங்கையில் ஜனநாயகம் ஆழமாக வேருன்றியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.
வியாழக்கிழமை தேர்தலில் திசநாயக்கவின் கட்சி இலகுவாக வெற்றிபெறும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன் திட்டத்தின்படி முன்னயை வலதுசாரி தலைவர் ரணில்விக்கிரமசிங்க முன்னெடுத்த மக்கள் ஆதரவற்ற சிக்கன நடவடிக்கைகள் உட்பட சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தான் கருதுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
சுமார் 80இ000 பேர் பலியான இரண்டு கிளர்ச்சிகளை 1971-89 இல் முன்னெடுத்த ஜேவிபி தொழில்சார் குழுக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தன்னை தேசிய மக்கள் சக்தி என அழைக்கின்றது.
விக்கிரமசிங்க இணங்கிய கடன்உடன்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியதன் மூலம் திசநாயக்க அவர் சீர்திருத்தங்களை கைவிடமாட்டார் என்ற வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என தெரிவிக்கின்றார் பர்ஹான்.
அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியானது முதல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைசுட்டி 16.65 வீதம் முன்னோக்கி நகர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய அயல்நாடான இந்தியாஇ இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய சீனா ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுகளை இலங்கை ஜனாதிபதி பேணியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள இ22 மில்லியன் மக்களை கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் ஆதரவை செல்வாக்கை பெறுவதற்கு இந்தியாவும் இலங்கையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்புகள் 7 மணிக்கு ஆரம்பமாகும்.225 தேர்தல் ஆசனங்களிற்காக 8880 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.முதல் கட்ட தேர்தல்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் வாக்காளர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்டதை விட(80) வாக்களிப்பு குறைவாக காணப்படலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
சில எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்க்கும்போது முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தோன்றுகின்றது என்கின்றார் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் கட்சிக்கு கடந்த தேர்தலில் மூன்று ஆசனங்களே கிடைத்தன ஆனால் இம்முறை சிறிய சவாலை கூட அந்த கட்சி எதிர்கொள்ளவில்லை.
எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதுஇஎன தெரிவிக்கும் ரோகன ஹெட்டியாராச்சி தேர்தல் பிரச்சாரம் கடந்த காலங்களை போல இல்லாமல் மிகவும் அமைதியானதாக காணப்பட்டது என குறிப்பிடுகின்றார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவ ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதுடன் மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் என்ற கௌரவ பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகின்றார் என துமிந்த குலங்கமுவ தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின்படி நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீர்திருத்தவேண்டும்இ மானியங்களை வரிச்சலுகைகளை நிறுத்தவேண்டும்.
சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி நுண்பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் கொள்கை என தெரிவிக்கும் துமிந்த குலங்கமுவ அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கு ஜனாதிபதி விரும்புகின்றார் என தெரிவிக்கின்றார்.