;
Athirady Tamil News

ஒரு வாரத்திற்குள் முழு உலகத்தையும் பகைத்துக் கொண்ட ட்ரம்ப் ; அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலகம் தாக்கு பிடிக்குமா?

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் வெள்ளை மாளிகையில் தன்னை அதிகாரத்தில் அமர்த்திய தனது சியோனிச யூத எஜமானர்களைக் குஷிப்படுத்துவதற்காக தனது அகங்கார மற்றும் ஒழுங்கற்ற நடவடிக்கைகளால் முழு உலகத்தையும் பகைத்துக் கொண்டுள்ளார்.

முதலாவதாக, பலஸ்தீன பிராந்தியமான காஸாவைக் கைப்பற்றுவது, ஏற்கனவே நெரிசலான எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு காஸா மக்களை நாடு கடத்துவது, காஸாவை சொந்தமாக்குவது, அதை மேம்படுத்தி தன்னோடு இணைக்கப்பட்ட தனது கட்டுப்பாட்டின் கீழான கரையோர பிராந்தியமாக காஸாவை மாற்றுவது என்ற அவரது அறிவிப்பு உலகளவில் மிக விரைவான பரவலான கண்டனத்துக்கு உட்பட்டது.

ட்ரம்ப், தான் முழு உலகினதும் சொந்தக்காரர் என்றும் சியோனிச பில்லியனர்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட தனது முன்னோடிகள் அனைவரையும் போலவே தான் விரும்பியதைச் செய்ய முடியும் என்றும் நினைக்கிறார். அகண்ட இஸ்ரேலை உருவாக்கி காஸாவை இஸ்ரேலுடன் இணைக்கும் இறுதி நோக்கத்துடன் தனது சியோனிச நிதியாளர்களை மகிழ்விக்கும் வகையில் ட்ரம்ப் இந்த சட்டவிரோத முன்மொழிவை செய்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட இந்த யோசனைக்கு அவநம்பிக்கையுடனும் கவலையுடனும் பதிலளித்துள்ளன. குறிப்பாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது அமுலில் உள்ள போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் என்பனவற்றில் இந்த யோசனை ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். பலஸ்தீன மக்களோ தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறித்து அதிருப்தியும் மறுப்பும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அமெரிக்காவின் நண்பர்களை ட்ரம்ப் ஒரு கடினமான தெரிவுக்கு விட்டுள்ளார். அமெரிக்காவை விமர்சிப்பது பல தலைவர்களுக்கு ஒரு கடைசி வழியாகும். ஒரு ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் இவ்வளவு சீக்கிரம் இந்த நிலைக்கு வருவதும் கேவலமானதாகும்.

ஆரம்ப கட்டத்திலேயே பலஸ்தீனர்கள் இந்த நடவடிக்கையை ஒரே குரலில் முற்றாக நிராகரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா மற்றும் பிற அரபு சர்வாதிகாரிகள், இந்த எதிர்ப்பு வரிசையில் இணைந்து கொண்டனர். இவர்கள் காசாவில் கடந்த 15 மாதங்களாக அமெரிக்க-ஐரோப்பிய இஸ்ரேல் இனப் படுகொலைகளுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முழு பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள மக்களின் விரோத மன நிலையை இவர்கள் உணர்ந்துள்ளனர். சியோனிச யூதக் குற்றங்களுடனான அவர்களின் சகவாசம் மற்றும் பலஸ்தீனர்களை துரோகத் தனமாக காட்டிக்கொடுத்தமை என்பன காரணமாக இப்பகுதி ஒரு கொதிக்கும் எரிமலையாக உள்ளதையும் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதையும் இந்த கொடுங்கோலர்கள் நன்கு அறிவார்கள்.

இது “பரிசீலிக்கவோ அல்லது விவாதிக்கவோ தகுதியற்ற ஒரு முன்மொழிவு” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவை துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

காஸாவில் இனச் சுத்திகரிப்பு குறித்து ஐ. நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸ் எச்சரித்தார். எந்தவொரு இனச் சுத்திகரிப்பையும் தவிர்ப்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்ஹேகனில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பகுதிகளுக்கான ஐ. நா. வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் ட்ரம்ப்பின் திட்டத்தை “சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது” என்று கண்டித்தார். “இது கட்டாய இடப்பெயர்ச்சிக்கு தூண்டுதலாகும். இது ஒரு சர்வதேச குற்றமாகும். கட்டுப்பாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு இறையாண்மை கொண்ட பிரதேசத்தை கைப்பற்றுவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது என்று அவர் மேலும் விளக்கினார்.

பலஸ்தீன பிரதேசங்களை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக ஐ. நா. வின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், காஸாவின் கட்டுப்பாட்டை ஒரு வெளிநாட்டு சக்தியிடம் ஒப்படைக்க இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சர்வதேச மனித உரிமைகள் நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால், “அது பிராந்திய நெருக்கடியை இன்னும் மோசமாக்கும்” என்று அல்பனீஸ் எச்சரித்துள்ளார். உலகத் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். “சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது, அமெரிக்காவுக்கு அது வேண்டிநிற்கும் தனிமைப்படுத்தலை வழங்குவதற்கான சரியான நேரம் இது என்றும் அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கா வழமையாக குறைந்தளவு சிக்கலான உறவுகளை கொண்டுள்ள ஐரோப்பாவில், தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர். அவர்கள் இதை ஆதரிக்கவில்லை.

“காஸாவின் நிலம் காஸாதான்” என்று ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஜேர்மன் ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன் மேயர் இந்த பரிந்துரை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அன்னாலிசா பேர்பாக் இது “புதிய துன்பங்களுக்கும் புதிய வெறுப்புக்கும் வழிவகுக்கும்” என்றும் கூறி உள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றான ஐ.சி.சி. யில் காஸாவில் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கை முன்னெடுத்ததற்காக தென் ஆபிரிக்காவையும் ட்ரம்ப் தண்டித்துள்ளார். இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டிய சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவின் வழக்குக்கு பதிலளிக்கும் விதமாக தென் ஆபிரிக்காவுக்கான நிதி உதவியை முடக்கும் நிறவேற்று உத்தரவில் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார வரம்பின் கீழ் உள்ள உலகின் மிக உயர்ந்த குற்றவியல் நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவை விமர்சிக்கும் அறிக்கையில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவில் போர்க்குற்றங்களுக்காக தேடப்படும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கைது செய்யும் பிடியாணையை பிறப்பித்ததற்காக ஐ. சி. சி. க்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா காஸாவை “கைப்பற்றி” பலஸ்தீன மக்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள பலஸ்தீன மற்றும் அரபு அமெரிக்கர்களிடமிருந்தும் சீற்றத்துக்கும் விமர்சனத்துக்கும் இலக்காகியுள்ளன. 2024 தேர்தலின் போது ட்ரம்பை ஆதரித்த அரபு அமெரிக்கர்கள் என்ற குழு, பலஸ்தீனர்களை இடம்பெயர வைப்பது குறித்த ட்ரம்ப்பின் கருத்துக்களைத் தொடர்ந்து, “ட்ரம்பிற்கான அரபு அமெரிக்கர்கள்” எனும் தனது பெயரை “அமைதிக்கான அரபு அமெரிக்கர்கள்” என்று மாற்றியுள்ளது.

குற்றவாளிகள் நீதிமன்றங்களுக்கு தீர்ப்பளிக்கிறார்கள். உலகம் தலைகீழாக உள்ளது என்று மற்றொரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் 21 ஆம் நூற்றாண்டின் புதிய காலனித்துவம் மிகவும் ஆபத்தானது. அது சர்வதேச சட்டங்களோடு மோதிக்கொள்வதும் உறுதி என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக கட்டமைக்கப்பட்ட கூட்டணிகளை அழித்து, அதன் நண்பர்களை அந்நியப்படுத்துவதன் மூலம் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிகாரத்தை சமரசம் செய்ய முயல்கிறார்.

யூத அரசின் 1948 சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஒருவரின் பேரனான தீவிர இஸ்ரேலிய ஆதரவாளரும் எழுத்தாளருமான மிகோ பெலெட் என்பவர் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சித்து, “அவர்களால் பலஸ்தீனர்களை தோற்கடிக்க முடியாது” என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த எழுத்தாளர் 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் போரில் தளபதியாக பணியாற்றியவர்களில் ஒருவர்.

இதற்கிடையில், அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 50.50.1 என்ற பிரசார இயக்கத்தில் பங்கேற்க உள்ளனர். இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் மற்றும் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டமாகும். “50 மாநிலங்கள். 50 ஆர்ப்பாட்டங்கள்,. ஒரு நாள்” என்றும் அழைக்கப்படும் இந்த இயக்கம், சமூக ஊடகங்கள் மற்றும் அடிமட்ட அமைப்புகள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் மாநில தலை நகரங்களில் பேரணிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஒரு சமஷ்டி நீதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தை பிறப்புரிமை குடியுரிமையில் மாற்றங்களைச் செய்வதிலிருந்து தற்காலிகமாக தடுக்கும் உத்தரவை விடுத்தார். ஆனால் வெள்ளை மாளிகை தொடர்ந்து அதை எதிர்த்திப் போராட உறுதி பூண்டுள்ளது.

எழுபது சதவீதமான மக்கள் மெக்ஸிக்கோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று மறு பெயரிடுவதை எதிர்க்கின்றனர். இது ட்ரம்ப் தான் பதவியேற்ற முதல் நாளில் இட்ட ஒரு உத்தரவாகும். 25% பேர் மட்டுமே இந்த யோசனையை ஆதரித்துள்ளனர். எஞ்சியவர்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்

ட்ரம்பின் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒருவரான கோடீஸ்வர தொழிலதிபர் இலோன் மஸ்க் மீதான பாரபட்சமான வழிகளிலும் பொதுமக்களின் கருத்துக்கள் பிளவுபட்டுள்ளன. அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற 75% குடியரசுக் கட்சியினர் மஸ்க் குறித்து தங்களுக்கு சாதகமான பார்வை இருப்பதாகக் கூறினாலும் 90% மான ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்கு சாதகமற்ற பார்வை இருப்பதாவே தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.