;
Athirady Tamil News

முஸ்லிம் கட்சிகளின் வியூகம் என்ன?

0

ஆட்சிக் காலம் நிறைவடைந்த அனைத்து உள்ளூராட்சி சபைகளும் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள புதிய ஆட்சியதிகாரத்தின் கீழ் இயங்க வேண்டும் என பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மே மாதம் இறுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சில வேளைகளில் அரசியல் கட்சிகளும் மக்களும் பெரியதாகப் பொருட்படுத்துவதில்லை என்று தோன்றுவதுண்டு. ‘நாம் பார்க்காத உள்ளூராட்சி தேர்தலா’ என்ற எண்ணத்தில் குறிப்பாக முஸ்லிம் அரசியல் அணிகள் செயற்படுவதையும் அவதானித்து இருக்கின்றோம்.
ஆனால், இந்த முறை நடைபெறவுள்ள தேர்தலானது வித்தியாசமான சவால்களைக் கொண்ட தேர்தலாக இருக்கும். ஆளும் கட்சி உட்பட பெரும்பான்மைக் கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கும் இதுவரை காலமும் இல்லாத ஒரு கள நிலைவரத்தை இந்த தேர்தல் கொண்டு
வரும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, குறிப்பாக முஸ்லிம் கட்சிகளும், அணிகளும் இந்த தேர்தலை எவ்விதம் எதிர்கொள்ளப் போகின்றன? என்ன வியூகத்தை, சூத்திரத்தை வகுத்து, இந்த களத்தை வெற்றி கொள்ளப் போகின்றன?
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவை அடுத்தடுத்து இடம்பெற்று இவ்விரண்டிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி வாகை சூடியுள்ளது. வழக்கமாகத் தேசிய ரீதியாக பலமாக உள்ள அல்லது தெற்கில் கோலோச்சும் கட்சிகள் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் நேரடியாக வேட்பாளர்களை இறக்கி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறைவாகும்.

ஆளும் தரப்பிற்கு அல்லது எதிரணிக்கு ஆதரவளிக்கின்ற ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதால், நேரடியாகக் களமாட வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கும். சுதந்திரக் கட்சிக்கும் பெரமுனவுக்கும் கூட இருந்ததில்லை எனலாம்.
ஆனால், இப்போது நிலைமைகள் மாறி விட்டிருக்கின்றன. என்.பி.பி. ஆட்சி பீடமேறியுள்ளது. மாற்றம் என்ற அலையில் பெருமளவுக்கு முஸ்லிம்கள் அள்ளுண்டு போனதால், தனித்துவ அடையாள அரசியல் கட்சிகள், அணிகளின் செல்வாக்கு குறைவடைந்து போயுள்ளது.
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதது தொடக்கம் நாட்டில் இப்போது வரை நிலவும் குழப்பங்கள் மக்களின் வாக்களிக்கும் முடிவில் செல்வாக்குச் செலுத்தலாம். முஸ்லிம்கள் தங்களது தனித்துவ அரசியல் கட்சிகளின் இருப்பு அவசியம் எனக் கருதலாம். ஆனால், கடந்த காதையைப் போல, எந்த பிரதேசத்திலும் வெற்றி நிச்சயிக்கப்பட்டதாக இல்லை என்பதை மறந்து விடக்கூடாது.
ஆளும் தரப்பாக மாறிய பிறகு,
என்.பி.பி. இந்த தேர்தலில் முதன்முதலாக உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தலாம்.

கடந்த சில மாதங்களுக்குள் இடம்பெற்ற சிறிய கூட்டுறவு சபை தேர்தல்களில்
என்.பி.பி. சந்தித்த சறுக்கல்கள் சிக்கலை ஏற்பட்டிருந்தமையால், நிச்சயமாக எப்பாடுபட்டாவது இந்த உள்ளூராட்சி
சபைத் தேர்தல்களை வெற்றிகொள்ள முயற்சிக்கும் என்பதை யாவரும் அறிவோம்.
பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் என்பன மாகாண சபைகளுக்கும் பாராளுமன்றத்திற்குமான அரசியல் வழித்தடங்கள் ஆகும். எனவே, வீழ்ச்சியடைந்துள்ள முஸ்லிம் அரசியலை அடிமட்டத்திலிருந்து மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அதற்கு இந்த தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும்.

என்.பி.பி. அரசாங்கம் தன் மீதான விமர்சனங்களைச் சரிசெய்வதற்கும், அடிமட்ட அரசியல் அதிகாரத்தை உறுதி செய்வதற்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமது வேட்பாளர்களைக் களமிறக்கும். இந்தப் பின்னணியில், முஸ்லிம் அணிகள் என்ன செய்யப் போகின்றன?
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, முஸ்லிம் பிரதேசங்களில் களமிறக்கப்படுபவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் ஒரு முஸ்லிமாகவே இருப்பார். எனவே,
அது ஒரு பிரச்சினையில்லை.
இங்கிருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட சபையில் யார் ஆட்சியமைப்பது என்பதுவும், இந்தத் தேர்தல் ஊடாக முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பிரதேச மட்டத்தில் மீளக் கட்டியெழுப்பப்படுமா? என்பதுவும்
ஆகும் இலங்கைச் சூழலில் சிறியதும் பெரியதுமாகப் பல முஸ்லிம் கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் எப்போதாவது அறிக்கை விடுவதற்கும், பெயரளவில் இயங்குவதற்கும் மட்டுமே பழக்கப்பட்டுள்ளன.
இதற்கப்பால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளே பெரும்பாலும் கடந்த இருபது வருடங்களுக்குள் உள்ளூராட்சி சபை ஒன்றைத்தானும் கைப்பற்றிய அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ளன.
ஆகவே, இக் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு எவ்விதமான மூலோபாய திட்டங்களை வகுத்திருக்கின்றன? அல்லது வழக்கமான அதிமேதாவிக் கதைகளைக் கூறிக் கொண்டு, கோட்டையை இழக்கப் போகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பிரதேசங்களில் அடிமட்டம் வரை ஊடுருவிய முதலாவது தனித்துவ அடையாள முஸ்லிம் கட்சி எனலாம். இந்தக் கட்சியைப் போல, வேறு எந்தக் கட்சியும் அடிமட்ட முஸ்லிம் மக்களது மனங்களை வென்றிருக்கவில்லை.
இதனை அடிப்படையாகக் கொண்டுதான் மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவங்களைப் பெற்றது. உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்தது.
இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம்
அதன் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்
எம்.எச்.எம்.அஷ்ரப் என்பது மறுக்க முடியாதது. ஆனால், அவரின் மரணத்திற்குப் பின்னர் றவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் மு.கா. கட்சி பிரதிநிதித்துவ அரசியலிலும் மக்கள் மத்தியிலும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலில் கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி முஸ்லிம் காங்கிரஸ் எனலாம். இதற்கு ஹக்கீமும் அக்கட்சியின் முன்னாள் எம்.பிக்களும்
முக்கிய காரணியாக இருந்தனர்.
இதனை மு.கா. தலைவர் மீள் வாசிப்புச் செய்யத் தொடங்கியுள்ளதான ஒரு தோற்றப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள்வதில்
முன்னரை விடச் சற்றுச் சிறப்பாக செயற்படுவதாகத் தெரிகின்றது.

அண்மையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் செயற்குழுக்கள், கட்டமைப்புக்கள் உள்ளன. ஆனால், கடந்த பல வருடங்களாக அது சரிவரச் செயற்படுத்தப்படவில்லை. அத்துடன், மு.கா. அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்களை உருவாக்கினர். ஆளுக்காள் குழிபறித்தனர். கட்சி தோற்றது.
இந்த நிலையிலிருந்து மீண்டெழ இந்த உள்ளூராட்சி தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். மு.கா. தனித்துப் போட்டியிடுவதற்கே சாத்தியமுள்ளது.
அது நல்லதே என்றாலும், வழக்கமான புளித்துப் போன பிரசாரங்களைச்
செய்யாமல் வேறு வியூகம் ஒன்றை
மு.கா. பின்பற்ற வேண்டியுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது கிட்டத்தட்ட அக்கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீனையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. வடக்கில் உருவான ஒரு கட்சியைக் கிழக்கு உள்ளிட்ட இடங்களுக்கும் விஸ்தரித்து, எம்.பிக்களை, சபைகளை பெற்றிருக்கின்றார் றிசாட்.
ஆனால், மக்கள் காங்கிரஸிற்கு பிரதேச மட்ட ஒழுங்கமைப்புக்கள் பெயருக்கு இருந்தாலும் கூட, அவை செயற்பாட்டில் இல்லை. உளப்பூர்வமாக செயற்படுகின்றவர்களை விடப் பணத்திற்காக, பதவிக்காகத் தலைமையைத் தேடி வந்தோர் அதிகம் என்றும் கூறலாம்.
இதனைத் தலைவர் இப்போது அறிந்து கொண்டுள்ளார். கட்சியைச் சரியாக, நம்பிக்கையான ஆட்களைக் கொண்டு முன்கொண்டு செல்ல வேண்டுமென நினைப்பதாகத் தோன்றுகின்றது.
எவ்வாறிருப்பினும், கடந்த இரண்டொரு வருடங்களாக மக்கள் காங்கிரஸின் அரசியல் இயக்கம் சற்று மந்தகதி அடைந்துள்ளது. முஷாரப் எம்.பியை கட்சி இழந்ததால் இந்த நிலைமை ஏற்படவில்லை. மாறாக, தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் விறுவிறுப்பற்ற போக்குகளால் இந்நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, நிச்சயமாக மக்கள் காங்கிரஸ் புதிய வியூகம் ஒன்றை வகுத்து இத்தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கில் தம் வசம் இருந்த ஒரு சில உள்ளூராட்சி சபைகளையாவது வெற்றி கொள்வது
பெரும் சிரமமாக இருக்கும்.
இதேவேளை, தேசிய காங்கிரஸ்
கட்சி என்பது முன்னாள் அமைச்சர்
ஏ.எல்.எம். அதாவுல்லாவை மையப்படுத்தியது. இதனது வெற்றியும் தோல்வியிலும் அவரது பங்கு
முக்கியமானது.
அவர், வெறுமனே கதைத்துக் கொண்டிருக்காமல் நிறையச் சேவைகளைச் செய்தார். ஆனால், கட்சி வளர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது. அத்துடன், தான் செய்த சேவைகளைக் கொண்டு குறிப்பிட்ட காலத்தின்
பின்னர் தனது எம்.பி. பதவியைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை தே.கா. தலைவருக்கு ஏற்பட்டது.
எனவே, தேசிய காங்கிரஸ் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது பழைய வியூகங்களைத் தூக்கி எறிந்து விட்டு புது வழியில் பயணிக்க வேண்டும். ‘மக்கள் நன்றிக் கடனுக்காக வாக்களிப்பார்கள்’ என்று
நம்பிக் கொண்டிருக்காமல், யதார்த்த நிலையைப் புரிந்து செயற்பட வேண்டும்.
தே.கா.வின் அரசியல் இருப்புக்கு இந்தத் தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாகும். எனவே, தமக்கிருந்த இரண்டு மூன்று உள்ளூராட்சி சபைகளையாவது வெற்றி கொள்ளவில்லை என்றால், அந்தக் கட்சியின் எதிர்காலம் சூனியத்திற்குள் தள்ளப்படும்.
எது எப்படியிருப்பினும், முஸ்லிம் கட்சிகள், அணிகள் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியலை நிறுத்துவதற்கான தேர்தல்கால வியூகங்களை இப்போதே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.