;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் மீண்டும் விலகல்.. (படங்கள்)

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் விலகல்.. (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் கனக்குப் பரிசோதகர்கள் மூவரையும் வெளியேற்றியமை, பொருளாளரை நீக்கியமை போன்ற பலகுளறுபடிகள் தற்போதைய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆதாரங்களுடன் “அதிரடி” இணையம் செய்தி வெளியிட்டு இருந்தது நீங்கள் அறிந்ததே.

இதன் எதிரொலியாக செயலாளர் இருதடவைகள் தனது பொறுப்பில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த போதிலும், அது தற்போதைய நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுச்சபையின் முன்னிலையிலேயே விலக வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இதேவேளை தமக்கு விரும்பிய மாதிரி, “தம்மிடம் கணக்கு கேட்பவர்களை” தாமே நீக்குவதும், நிர்வாகத்தில் இருந்து விலக விரும்புபவர்களை “முடியாது, பொதுச்சபையில் தான் விலக வேண்டுமெனக்” கூறுவதும், அதேவேளை பொதுச்சபையைக் கூட்டாமல் காலத்தை இழுத்தடிப்பதும் எந்தவகையில் நியாயமெனப்? பலரும் அங்கலாய்ப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க கடந்தவாரம் மூன்றாம் தடவையாக பேர்ண் முருகன் ஆலய செயளாளர் வெளியேறியுள்ளதாக தனது முகநூல் பதிவு மூலம் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

முதல் தடவையாக 2020 நவம்பர் மாதம் மூன்று கணக்குப் பரிசோதகர்கள் வெளியேற்றப் பட்டதற்காகவும், இரண்டாம் தடவையாக 2021 பெப்ரவரி மாதம் பொருளாளர் வெளியேற்றப் பட்டதற்காகவும் விலகல் கடிதம் கொடுத்த போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததினால், தற்போது மூன்றாம் தடவையாக 31.10.2021 “ஆலயத்தில் தலைவர் அவர்கள், பொதுச்சபைக் கூட்டத்தை நடத்தாமலும், ஆலய வரவு செலவுக் கணக்குகளை மறைத்து ஆலயத்தை சர்வாதிகாரமாக நடத்துவதாலும், ஆலயத்தின் அனைத்து விடயங்களும் செயளாளர், பொருளாளர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் மறைத்து சர்வாதிகாரமாக செயல்படுவதாலும் வெளியேற உள்ளதாக “தன்னை சார்ந்தவர்களிடம் தெரிவித்து உள்ளதுடன்”, அவ்விலகல் கடிதத்தையும் பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைத்து உள்ளதுடன், தனது முகநூல் மூலம் பகிரங்கப்படுத்தியும் உள்ளார். (ஆதாரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது)

இவ்விலகல் கடிதம் குறித்து சுமார் ஒருவாரத்துக்கு முன்னரே “அதிரடி” இணையத்துக்கு ஆதாரங்களுடன் தெரிய வந்த போதிலும், கடந்த ஒருவாரமாக நடைபெற்ற கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டும், பேர்ண் முருகன் ஆலய முருக பக்தர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டும் இன்றே இத்தகவல் பகிரங்கப்படுத்தப்படுகின்றது. “தெரிவிப்பது நாம்.. (அதிரடி), தீர்மானிப்பது நீங்கள்.. (முருகனடியார்கள்)”

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் இராஜினாமா.. பின்னணி என்ன? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.., பொருளாளரை வெளியேற்ற முடிவு(?).. நடப்பது என்ன??

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது என்ன??

தீர்க்கப்படாத சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய முறுகல், முன்னாள் தலைவர் உதயன் குமுறல்.. (நடந்தது என்ன?)

சுவிஸ் பேர்ண் முருகன் கோவிலில் நடப்பது என்ன? கணக்கறிக்கையை வெளியிட்ட கணக்காய்வாளர்கள்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.