சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல் தற்போதைய நிர்வாகசபை மற்றும் கட்டிடக்குழு தலைவர்கள்,. செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற உள்ளதென அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயினும் 17.08.2010 முதல் கடந்த 17.08.2020 இல் தமது “பத்துவருட பதவிக்காலம்” முடிவடைந்த கட்டிடக்குழு தலைவர் திரு.சின்னத்தம்பி சிவரட்ணராஜா (கிளாக்கர்) மற்றும் கட்டிடக்குழு செயலாளர் திரு.ஸ்ரீபாலன் பொன்னையா ஆகியோர் அக்கடிதத்தில் கையெழுத்து வைத்தது “சட்டத்தின் பிரகாரம் பிழை” என்பதையும் மீறி, அவர்களும் கையெழுத்து வைத்தது எதுக்கு? என்பது புரியாத புதிர்..
அதேபோல் “பொதுச்சபையைக் கூட்டினால் காணும், என்பதுக்காகவே தான் கையெழுத்து வைத்தேன்” எனும் தற்போதைய நிர்வாகசபை செயலாளர் திரு.இராசையா திருநாவுக்கரசு (ரவி) அவர்கள் “தான் இராஜினாமா செய்ததுக்கான நீதியான தீர்வைப் பெற்றாரா?” என்பதும் புரியாத புதிர்.
இதேவேளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய யாப்புக்கு (விதிமுறைக்கு) எதிராக “சந்தா இவ்வளவு கட்டினால் தான் வரலாம்” என்பதும், “தமக்கு வேண்டியவர்களே வரலாம்” என்பது போன்றும், “பாதுகாவலர்கள் கடமையில் இருப்பார்கள்” எனும் பயமுறுத்தல் தொனியில் கடிதங்கள் அனுப்பியது எதுக்கு? எனவும் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
தகவல்.. “அதிரடி” இணையத்துக்காக சுவிஸில் இருந்து “அச்சுவேலி” ஊரான்.
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் முறுகல், செயலாளர் மீண்டும் விலகல்.. (படங்கள்)