;
Athirady Tamil News

“அதிரடி சிந்தனை”.. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!* (வீடியோ வடிவில்)

0

“அதிரடி சிந்தனை”.. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!* (வீடியோ வடிவில்)

சமூகவலைத் தளங்கள் ஊடாக பகிரப்பட்ட “நீதி”க்கான கருத்தை, “அதிரடி இணையம்” வீடியோ வடிவில் கொண்டு வருகின்றது..

_*மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.*_

ஒருவர் _*- மதத்தலைவர்*_
மற்றவர் _*- வழக்கறிஞர்*_
மூன்றாமவர் _*- இயற்பியலாளர்*_

_*முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.

‘கடைசியாக ஏதாவது சொல்ல வருகிறீர்களா? என வினவப்பட்டது.*_

_*ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.*_

_*மேடை இழுக்கப்பட்டது, கயிறு மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்று விட்டது.

மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர்.

அவரை விட்டு விடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றி விட்டான். என்றனர்.

மதத்தலைவர் தப்பி விட்டார்.*_

_*அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்து வரப்பட்டார்.

அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. ‘கடைசியாக ஏதாவது சொல்ல வருகிறீர்களா? என வினவப்பட்டது.*_

_*’நீதி! நீதி! நீதியே வெல்லும்’ என்றார்.*_

_*மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்று விட்டது.

மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர்.

அவரை விட்டு விடுங்கள்! நீதி அவரை காப்பாற்றி விட்டது. என்றனர்.
வழக்கறிஞர் தப்பி விட்டார்.*_

_*அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்து வரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது.

‘கடைசியாக ஏதாவது சொல்ல வருகிறீர்களா? என வினவப்பட்டது.*_

_*எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால் தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்’ என்றார்.*_

_*உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர்.

பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது.*_

இதன் மூலம் தெரிய வரும் “நீதி” யாதெனில்..

“சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்!*_

_*தெரிந்த உண்மைகளையெல்லாம் உளரிக் கொட்டுவதால் உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!*_

அதாவது…
_*சிலவேளை முட்டாளாக இருப்பது தான், புத்திசாலித்தனமானது!*

எழுத்தாக்கம் உதவி.. –சமூகவலைத்தளம்..
வீடியோ வடிவாக்கம் .. –“அதிரடி” இணைய வீடியோக் குழுவினர்

“அதிரடி சிந்தனை”.. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!* (வீடியோ வடிவில்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.