சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய காங்கிரஸின் சுகாஷ் கருத்து! (வீடியோ, படங்கள்)
சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய காங்கிரஸின் சுகாஷ் கருத்து! (வீடியோ, படங்கள்)
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி சகிப்புத் தன்மையுடன் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை நாம் செய்தோம் என, நினைவேந்தலில் நாட்டாமைத்தனம் காட்டிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சட்டத்தரணி சுகாஷ் கருத்து தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் 35 வது ஆண்டின் இறுதி நாள் நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே சுகாஷ் இன்றையதினம் இதனை தெரிவித்தார்.
ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பியமைக்காக எம்மிடம் மன்னிப்பு கோருங்கள் என கோரிய சுகாஸ், தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என ஊடக சந்திப்புக்கு சென்று இருந்த ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் தொனியில் கருத்து தெரிவித்தார்.
மேலும் “ஈ.பி.டி.பி மணிவண்ணன், அரச புலனாய்வுப் பிரிவினரின் இயக்கத்தில் இயங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களை மேற்கொள்ளும் தரப்பினரால் நினைவேந்தலை குழப்புவதற்கு பல்வேறுபட்ட சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்றார். இதில் அதாவது நேற்றையதினம் நடைபெற்ற தியாகி.திலீபனின் நினைவேந்தலில் “தானும் தன்னை சார்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் விட்ட பிழைகள் எவரும் அறியாது போல் இவர் இன்றையதினம் ஊடகவியலாளர் மகாநாடு நடத்ததியது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்கு இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர் ஒருவர் “சட்டத்தரணி சுகாஷ் அவர்கள் தனது சட்டத்திறமையை மற்றவர்களைக் கேவலப்படுத்தவே பயன்படுத்தி வருகிறார், இவ்வளவு காலமும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களைக் கேவலப்படுத்தி வந்தவர், இப்போது ஊடகங்களையே மிரட்டும் பாணியில் செயல்படுகிறார், இவருக்கும் இவர் சார்ந்த அரசியல் கட்சியினருக்கும், “தேர்தல் என்றாலே, தேசியம் தேசியத்தலைவர் என்று கூக்குரல் இடுவார்கள்”, தாம் ஆசனத்தில் சென்று குந்தியதும் எல்லாவற்றையும், குறிப்பாக தமிழ்மக்களையே மறந்து செயல்படுபவர்கள்” என தெரிவித்தார்.
யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம் : நடந்தது என்ன? விளக்கேற்றுவது யார் என்பதில் தள்ளுமுள்ளு.. அடிபாடு, சிலர் காயம்.. அம்புலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படடவர்கள் யார்?? (அதிர்ச்சி வீடியோ பகுதி -1 )
யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம் : நடந்தது என்ன? விளக்கேற்றுவது யார் என்பதில் தள்ளுமுள்ளு.. அடிபாடு, சிலர் காயம்.. அம்புலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படடவர்கள் யார்?? (அதிர்ச்சி வீடியோ பகுதி -2 )