புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ)
இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் மிகுந்த முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருந்த காரணத்தினால் அங்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், மற்றும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையின் முடிவுக்கு இணங்க “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் நான்கு வருடத்துக்கு முன்னர் யாவும் இயந்திரங்கள் மூலம் முற்றாக அழிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன், கட்டம்கட்டமாக பல இடர்பாடுகளுக்கு மத்தியில் முற்றாகத் திருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன்,
“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்”
“பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்” போன்றவை அமைக்கப்பட்டதுடன்.. கடந்த மூன்று வருடத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக யாழ். தொல்லியல் திணைக்களம் ஊடாக மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
ஆயினும் அண்மையில் இலங்கை சென்ற நம்மவர்கள் பலரும் மேற்படி “பெருக்குமர சுற்றாடல்” மீண்டும் மிகுந்த முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருப்பதைக் கண்டுணர்ந்து, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவரான சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, புங்குடுதீவு மக்களிடம் அவர் இதுகுறித்து பகிரங்கமாக வாட்ஸாப் ஊடாக அறிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவர், சுவிஸ் ஒன்றியத் தலைவரிடம் தொடர்பு கொண்டு “உடனடியாக புங்குடுதீவின் பெருமைமிகு பெருக்குமர சுற்றாடலைப் புனரமைக்கும்படியும், இதுக்குரிய நிதியை தான் எனது மகளின் பெயரில் தருகிறேன் எனவும், எங்களின் பெயரை வெளியிடாமல் இதனை செய்யுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்த, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவரான சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் “இதனை செய்ய முன்வந்தவர் சுவிஸ் ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினர் என்பதையும் தாண்டி, ஊர் மீது மிகுந்த பற்றுக் கொண்ட மண்ணின் மைந்தனான தாமோதரம்பிள்ளை பிறேம்குமார் என்பதை நாம் பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலமே ஏனைய புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளும் சுவிஸ் ஒன்றியம் ஊடாக புங்குடுதீவுக்கு உதவ முன்வருவார்கள், ஆகவே இதனை அவரது மகளின் பெயரில் பகிரங்கப்படுத்துங்கள்” எனத் தலைவர் தெரிவித்ததுக்கு அமைய திரு.பிறேம்குமார் அவர்கள் விரும்பாத போதிலும் அவரது பங்களிப்பைப் பகிரங்கப்படுத்தி உள்ளோம்.
இதேவேளை புங்குடுதீவில் பெருங்காடு, இறுப்பிட்டி ஆகிய பிரதேசங்களைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் பிரதேசத்தில் வாழ்பவர்களுமான “பிறேம், சுஜி” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், திரு.திருமதி.பிறேம்குமார் சுஜிதா தம்பதிகளின் ஏகபுதல்வியான பிறேமி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், செல்வி.பிறேமிதா அவர்களின் ருதுசோபன எனும் பூப்புனித நீராட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூறிச்சில் சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி திரு.திருமதி. பிறேம்குமார் சுஜிதா தம்பதிகளினால் பல்வேறு வகையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகது. அந்த வகையில் தமது ஏகபுத்திரியான செல்வி பிறேமிதாவின் மங்கல மஞ்சல் நீராட்டு விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், வாழும் பிள்ளையின் சார்பாக வழங்கப்பட்ட நிதி ஊடாக புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைக்கப்பட்டது.
இவ்வாறு தமது ஒரே மகளின் மஞ்சல் நீராட்டு விழாவை முன்னிட்டு, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு பெருக்குமர புனரமைப்புக்கு உதவி புரிந்து அதனை செயல்படுத்திய திரு திருமதி பிறேம்குமார் சுஜிதா தம்பதிகளை வாழ்த்துவதோடு, செல்வி பிறேமிதாவின் எதிர்காலம் சிறக்க அவர் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென எல்லாம்வல்ல இறைவனை புங்குடுதீவு மக்கள் சார்பாக வேண்டுகிறோம்..
நன்றியுடன்..
திருமதி. செல்வி சுதாகரன்.
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய செயலாளர்.
20.05.2023
புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (வீடியோ)
கடந்த இரண்டு மூன்று வருடத்துக்கு முன்னர் “யு ரியூப்” இணையத்தை சேர்ந்தோரினால் எடுக்கப்பட்ட பதிவுகளில் சில..
புங்குடுதீவு பெருமைமிகு பெருக்குமரம்..
“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” முழுமையான நிதிப் பங்களிப்பில், இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதுடன், புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ…
புங்குடுதீவு அழகுமிகு தோற்றம் & சுவிஸ் ஒன்றிய செயற்பாடு.. -ஆகஸ்ட் 2020
புங்கையில் புதையல்! புங்குடுதீவில் இப்படியும் மாற்றமா?..
புங்குடுதீவு நோக்கிய பயணம் pungudutivu tour|பெருக்கமரம்