வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணம்; “சமூகம்” ஊடகம் மீது பழிவாங்கல்? பொலிஸ் விசாரணை.. (வீடியோ)
வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணம்; “சமூகம்” ஊடகம் மீது பழிவாங்கல்? பொலிஸ் விசாரணை.. (படங்கள்)
யாழ். கல்வியங்காடு பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவம் தொடர்பில் செய்தி வெளியீட்ட சமூகம் மீடியா நிறுவனம் மற்றும் குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன்வைத்த பொதுமகன் ஒருவரிடமும் நேற்று (10) யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.
கல்வியங்காடு பகுதியில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த யூலைமாதம் 23 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளங்களிலும் குறித்த சிறுமிக்காக பலர் நீதி கோரி பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கருத்துக்கள் கேள்விகளை உள்ளடக்கி சமூகம் ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
குறித்த காணொளி தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி பிரணவன், அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொதுநபர் உட்பட சமூகம் ஊடக நிறுவனத்தினர் நேற்று யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கபட்டிருந்தனர் .
முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதரவில்லை. இந்த நிலையில் எதிராளிகளிடமிருந்து பொலிசார் வாக்குமூலத்தை பெற்றிருந்தனர். அத்துடன் முறைப்பாட்டாளருடன் சமரசமாகப் பேசி செல்லும்படி பொலிசார் கோரியிருந்தனர்.
வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் முன்வந்து தெரிவித்த கருத்துக்களை ஊடக வாயிலாக வெளியிண்ட எமது ஊடகத்தின் மீதே மேற்படி முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சிறுமியின் தாயார் நேற்றையதினம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கல்வியங்காடு சிறுமி விவகாரம்|| ஊடகத்தை விழுங்கும் அதிகாரிகள்..! (வீடியோ)