மன்னார் மாவட்ட வனங்கள் மற்றும் சதுப்புநில கண்டல் வலயம் பாதுகாக்கப்படுமா?
மன்னார் மாவட்டமானது வன்னித்தேர்தல் தொகுதியிலுள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். மன்னார் மாவட்டம் வெளிநாட்டு ஏற்றுமதி வருமாணத்தினை ஈட்டுக்கொடுக்கும் வளமிகு மாவட்டம் என்பதுடன் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் வேளான்மை, கடற்தொழில், சுற்றுலாவிருந்தோம்பல் மற்றும் ஏனையவை அடங்கும்.
யுத்தகாலப்பகுதியில் பல இடங்கள் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு சரணாலயங்களாக அப்போது இருந்த அமைச்சர் தனது விசேட சிறப்புரிமைக்கு அமைய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடணப்படுத்தப்பட்டது. இதில் உள்ள குறைபாடாக நோக்குமிடத்தில் யுத்தகாரணமாக பல இடங்கள் சரியான கணிப்பிடலுக்குள் உட்பட தவறியமையும் முக்கியமானதொன்றாகும்.
2006- 2007- 2008 காலப்பகுதியில் வன்னி தேர்தல் தொகுதி ‘இலங்கை தமிழ்’ பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக வன பிரதேசங்களை அனைத்து இடங்களிலும் மன்னார் மாவட்டத்தில் போடப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பாக தூதுவராலயங்களிற்கும் பாராளுமன்றிலும் தெருவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்காரணமே பல இடங்களை வன சரணாலயங்கள் சதுப்புநிலங்கள் எடுக்கப்பட்டது.
2015 ற்கு பிற்பாடு வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் எல்லைகளை தொழில்நுட்பங்களின் உதவியுடனும் எல்லைக் கல் என்ற வகையிலும் பிரதேசங்களை நிறுவினார்கள். இதில் பல இடங்கள் மக்கள் குடியிருப்புக்கள் தேவாலயங்கள் உள்ளடக்கப்பட்டதுடன் சில முரண்பாடுகளும் நடைபெற்றமையும் முக்கியமானது.
2018 2022 காலங்களில் இருந்து சில திட்டங்கள் சரணாலயங்களுக்குள் மேற்கொள்ள வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தடையாக இருந்தமையும் உயர் அழுத்தங்கள் பிரயோகப்படுத்தப்பட்டமையும் முக்கியமானவையே. குறிப்பாக வன்னி தேர்தல்கள் தொகுதி ‘இலங்கை தமிழ்’ பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கும் உயர்வாக காணப்பட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)