;
Athirady Tamil News

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு??

0

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு??
————————————
வணக்கம் உறவுகளே!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூரியுப் கடந்த சில வருடங்களாக பிரபல்யமாக உலாவருவதை யாவரும் அறிவீர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஒருசிலர் தவறான வகையில் அதனைப் பயன்படுத்தி வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை,
இதைவிட இந்திய யூரியூப் உருட்டர்களைப்போல ஆபாசங்களை வெளிப்படுத்தி பிளைப்பை நடத்தலாம்,.

ஏன் யூரியுப் உருட்டர்கள் மீது இவ்வளவு வன்மம் என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு செய்தியை அல்லது அவலத்தை, உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வாருங்கள் ஆதரவு தருகின்றோம். அதை விடுத்து உங்களின் வயிற்றுப பிழைப்புக்காக இதுபோன்ற தலைப்பை வைத்து புங்குடுதீவையும், புங்குடுதீவு மக்களையும் கேவலப்படுத்தாதீர்கள்.

புங்குடுதீவு நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு அழகிய தீவு, நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து புலம்பெயர் தேசங்களில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து இன்று ஓரளவு வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து வந்தாலும், தாம் பிறந்து வளர்ந்த ஊரையும் ஊரில் வாழும் மக்களையும் மாணவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பெருமெடுப்பிலான உதவித் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

அதையெல்லாம் வெளிக்கொண்டுவராத உருட்டர்கள் மழைவெள்ளம் வந்ததும் ஓடிவந்து வீணாப் போன சில விசரிகளிட்ட மைக்க நீட்ட அதுகளும் நல்லா அள்ளிவிடுங்கள் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் அப்பிடியே க க்கி விடுறது தான் இந்த உருட்டுக்களின்ர வேலை.

தேவையில்லா தலைப்புகள போட்டு சத்தியெடுக்க அதனை காவித்திரிய ஒருகூட்டம்.. கான்போனும் கையுமா பாய்விரித்து படுத்துக் கிடக்குதுகள் பல்இளிச்சான் குஞ்சுகள்.
ஏதோ *அதிசயம் ஆனால் உண்மை என்கின்ற ரேஞ்சில்* புங்குடுதீவுக்க மட்டும்தான் மழை பெய்த மாதிரி இந்த *அரைவேக்காட்டு யூரியூப் உருட்டர்கள்* தங்களுக்கு வயிறு நிரம்ப வேண்டுமென்று *வெள்ளத்தில் மூழ்கியது புங்குடுதீவு, உதவியை நாடும் புங்குடுதீவு, காணாமல் போகும் புங்குடுதீவு, கடலில் மூழ்கியது புங்குடுதீவு* என்று தலைப்பிட்டு அதிபயங்கரமான பீதியைக் கிளப்புறாங்கள்.

அட மரமண்டைகளா சரி ஓரு்போனும் இரண்டு மைக்கும் மோட்டுச்சயிக்கிளும் இருந்தா நீ யூரியூப் உருட்டு உருட்டிருவ நாயே! சரி..
வெள்ளத்துக்க மக்கள் அவலப்படுகினம் எண்டு ஒரு பாண் துண்டாவது கொண்டு போனயா ?
போன நீ மதுபானச்சாலைப்பக்கம் போய் அங்கு குவியும் மதுப் பிரியர்களை பேட்டி எடுத்தயா?
போன நீ களவாக மாட்டப் பிடிச்சு இறைச்சியாக்கி விக்கிறவங்களை வீடியோ எடுத்தயா?
போன நீ அதே வெள்ளத்துக்க நிண்டு பணி செய்யும் சமூக சேவையாளர்களை வீடியோ எடுத்தயா?
போன நீ பொறுப்பு வாய்ந்த கிராம அலுவலர்களை தொடர்பு கொண்டயா?
போன நீ புங்குடுதீவின் நில அமைப்பையாவது தெரிந்து கொண்டாயா?

சும்மா அடிச்சுவிடுவம் என்று அள்ளி விடுறீங்க அதப் பாத்திட்டும் சிலதுகள் காசு அனுப்புவார்கள் நாலு நுளம்பு வலையையும் 6 வெற்சீற்றையும் வாங்கிக் கொண்டுபோய் குடுங்கோ அதனையும் வீடியோவாக்கி வெளிய விடுங்கோ யூரியூப் உருட்டர்களா! நல்லா காசு கிடைக்கும். உங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு ஊரின் பெயரையும், மரியாதையையும் கெடுக்காதீர்கள்..
-வித்தகன்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.