வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. (படங்கள் & வீடியோ)
வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. மாணிக்கப் பொங்கல் நிகழ்வு படங்கள் & வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல் மத்தியில், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் எதிர்வரும் பதின்நான்காம் திகதி வருகிறது.
இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக,
வவுனியா வடக்கு பிரதேச மீள்குடியேற்ற கிராமமான, அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட எல்லைக் கிராமம் காஞ்சுரமோட்டையை தத்தெடுத்து அங்கு வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும், இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை குறித்த கிராமத்தின் கிராமசேவையாளரின் அனுமதியுடன் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
புலம்பெயர் வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது. வவுனியா நகரசபையின் கௌரவ.உறுப்பினரும் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரவிங்கம் காண்டீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காஞ்சுரமோட்டை கிராமத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்திகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகர் கவிஞர் மாணிக்கம் ஜெகனும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உதவிகளைப் பெற்றுக் கொண்டபின் கருத்து தெரிவித்த அவ்வூர் பெண்கள், “தைத்திரு நாளன்று” குழந்தைகளோடு பொங்கிமகிழ சந்தர்ப்பத்தை வழங்கிய, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும், இதற்கென நிதி உதவியளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்” நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§
மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கு, தண்ணீரூற்று முள்ளியவளை முல்லைத்தீவைச் சேர்ந்தவரும், 1984ம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவையின் (ரெசோ) வன்னி மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவருமான, தற்போது கனடாவில் வசிப்பவருமான தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம் குடும்பத்தினரும்; யாழ்.ஏழாலை, யாழ்.உடுவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த புளொட் பிரித்தானியாக் கிளையின் ஆரம்பகால உறுப்பினர்கள் இருவர் உட்பட; வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், புளொட் பிரித்தானியாக் கிளையின் தோழருமான முகுந்தன்; யாழ்.உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் வசிக்கும் தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் அமெரிக்கக் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.கோபி;
மற்றும் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான.. வவுனியாவைச் சேர்ந்தவரும், சுவிஸ் ரப்பேர்ஸ்விலில் வசிப்பவருமான தோழர்.ரமணன் எனும் றுஷாந்த்; மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் செங்காலனில் வசிப்பவருமான தோழர்.சித்தா எனும் சதாசிவம் சித்திரவேல்; யாழ். வசாவிளானைச் சேர்ந்தவரும், சுவிஸ் கிளாரசில் வசிப்பவருமான தோழர்.தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா; யாழ்-சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்தவரும், சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.வரதன்;
யாழ்.வீமன்காமம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சென்காலனில் வசிப்பவருமான தோழர்.அசோக் எனும் அசோகராஜா; வன்னியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பிரபா எனும் கருணாகரன், யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பாபு எனும் சித்திரவேல்; யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ஒபேர்புர்க்கில் வசிப்பவருமான தோழர்.குமார் எனும் கிருஷ்ணகுமார்; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.சிவா எனும் அம்பிகாபதி கலைச்செல்வம்; வவுனியாவைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.தயா எனும் கந்தவேலு தயாபரன்;
யாழ். கல்வியங்காட்டை சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.அன்ரன் எனும் “பரிசுத்த மூப்பர் பிலிப்” ஆகிய திரு.லோகராஜா; கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.குணா எனும் குணசீலன்; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸில் வசிப்பவருமான தோழர்.மோகன் எனும் பற்பநாதன் அருட்சோதி;
யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சொலத்தூணில் வசிப்பவருமான தோழர் செல்வபாலன், யாழ்.கந்தரோடையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சுக்கில் வசிப்பவருமான தோழர்.மனோ எனும் விஜயமனோகரன்; யாழ்.நெல்லியடி கரணவாயைச் தேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பெரிசு எனும் ஆனந்தன்; யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ருபெனக்டில் வசிப்பவருமான தோழர்.குழந்தை எனும் கைலாசநாதன்; திருகோணமலை சம்பூரைச் சேர்ந்தவரும் சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.புவி;
யாழ்.தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும், ஜெர்மனியில் வசிப்பவருமான தோழர்.சூட்டி எனும் யூட்; யாழ்.உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.குமார்அண்ணர் எனும் இரத்னகுமார்; யாழ்.கெருடாவிலைச் தேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.ஜெகன்அண்ணர் எனும் ஜெகநாதன்; புங்குடுதீவை சேர்ந்த புளொட் தோழர் சுவிஸ்ரஞ்சன்; மற்றும் இவர்களுடன் தமது பெயர்களை குறிப்பிட விரும்பாத மேலும் இருவரும் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்.. -தலைமையகம், “மாணிக்கதாசன் நற்பணிமன்றம்” வவுனியா.