நெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)
நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)
கொரோனா நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
#############################
வவுனியா மன்னார் வீதி பாலாமைக்கல் கிராமத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்பட்டுத்தப் பட்டிருக்கும் குடும்பங்களின் நிலைமை குறித்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உறுப்பினர் திருமதி நவரட்ணம் பவளராணி அவர்கள் மன்றத்தின் ஆலோசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
உடனடியாக அக்குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கான உலருணவுப் பொதி நேற்று (17.01.2021) ஞாயிற்றுக்கிழமை குறித்த கிராமமான நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்திற்கு சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டும், சில குடும்பங்களின் வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டன..
கணவரை இழந்த குடும்பங்கள், நாளாந்த கூலித் தொழிலாளர் குடும்பங்கள்,.சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என பலதரப்பட்ட குடும்பங்களுக்கு புலம் பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் இவ்வுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§
மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கு, யாழ்.ஏழாலை, யாழ்.உடுவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த புளொட் பிரித்தானியாக் கிளையின் ஆரம்பகால உறுப்பினர்கள் இருவர் உட்பட; தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம் (கனடா); தோழர் முகுந்தன் (பிரித்தானியா); தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா); தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி)
மற்றும் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான.. தோழர்.ரமணன்; தோழர்.சித்தா, தோழர்.தேவண்ணர்; தோழர்.வரதன்; தோழர்.அசோக்; தோழர்.பிரபா; தோழர்.பாபு, தோழர்.குமார் (ஒபேர்புர்க்), தோழர்.சிவா(பேர்ண்), தோழர்.தயா (பேர்ண்), தோழர் தயா (கிர்க்பெர்க்), தோழர்.அன்ரன் (லோகன்), தோழர்.குணா, தோழர்.மோகன் (சர்கென்ஸ்), தோழர் செல்வபாலன், தோழர்.மனோ, தோழர்.ஆனந்தன்; தோழர்.குழந்தை, தோழர்.புவி; தோழர்.குமார்அண்ணர், தோழர்.ஜெகன்அண்ணர், தோழர் சுவிஸ்ரஞ்சன்; மற்றும் இவர்களுடன் தமது பெயர்களை குறிப்பிட விரும்பாத மேலும் இருவரும் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”..
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணிமன்றம்”.
தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
“மாணிக்கதாசன் பவுன்டேஷனின்” அலுவலகத் திறப்புவிழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)
வவுனியா காஞ்சுரமோட்டை கிராமத்தை தத்தெடுத்தது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. (படங்கள் & வீடியோ)