;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ)

0

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ)
###########################

வவுனியா அளுத்கம அலகல்ல என்னும் கிராமத்தில் வசிக்கும் சகோதர மொழி பேசும் இரண்டு தாய்மார்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை தேடி வந்து தங்கள் இயலாமையை துயரத்தை கண்ணீருடன் கூறினர்.

அலுவலகம் திறக்கப்பட்டு சில நாட்களே ஆகிய நிலையில் தாங்கள் வழமை போலவே கிராம்ம் கிராமமாக அலைந்து தர்மம் கேட்க போன கோவில்குளத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” பற்றி யாரோ சொல்லியதைக் கேட்டு, உதவி நாடி வந்துள்ளதாக தாய்மார்கள் மிகுந்த துயரத்துடன் தெரிவித்தனர்.

மிகவும் வறிய நிலையில் காணப்பட்ட இவர்களின் கைப்பையில் அதற்கான அரச சான்றாவணங்களும் காணப்பட்டது. எந்தவொரு ஆயத்தமும் இல்லாத சூழ் நிலையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தேடி வந்தவர்களை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என மன்றத்தின் ஆலோசகர்கள் கூறி உடனடியாக புலம்பெயர் புளொட் தோழர்களின் நிதியணுசரனையுடன் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

கையெடுத்துக் கும்பிட்டு உலருணவுப் பொதியினை அவர்கள் வாங்கிய பொழுது அவர்களின் பசியினை உணர முடிந்தது. உடனடி உதவி வழங்கிய, புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு மன்றத்தின் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் மன்றம் தெரிவித்துக் கொள்கிறது. நன்றி.

§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§

மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கு, யாழ்.ஏழாலை, யாழ்.உடுவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த புளொட் பிரித்தானியாக் கிளையின் ஆரம்பகால உறுப்பினர்கள் இருவர் உட்பட; தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம் (கனடா); தோழர் முகுந்தன் (பிரித்தானியா); தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா); தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி)

மற்றும் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான.. தோழர்.ரமணன்; தோழர்.சித்தா, தோழர்.தேவண்ணர்; தோழர்.வரதன்; தோழர்.அசோக்; தோழர்.பிரபா; தோழர்.பாபு, தோழர்.குமார் (ஒபேர்புர்க்), தோழர்.சிவா(பேர்ண்), தோழர்.தயா (பேர்ண்), தோழர் தயா (கிர்க்பெர்க்), தோழர்.அன்ரன் (லோகன்), தோழர்.குணா, தோழர்.மோகன் (சர்கென்ஸ்), தோழர் செல்வபாலன், தோழர்.மனோ, தோழர்.ஆனந்தன்; தோழர்.குழந்தை, தோழர்.புவி; தோழர்.குமார்அண்ணர், தோழர்.ஜெகன்அண்ணர், தோழர் சுவிஸ்ரஞ்சன்; மற்றும் இவர்களுடன் தமது பெயர்களை குறிப்பிட விரும்பாத மேலும் இருவரும் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நலிவுற்றவர்களுக்களே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

“மாணிக்கதாசன் பவுன்டேஷனின்” அலுவலகத் திறப்புவிழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

நெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)

திருமதி.ச.ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாளில் “M.F” ஊடாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.