சுவிஸில் பிறந்த நாளைக் கொண்டாடிய, அபநேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர் வழங்கிய “M.F” ஊடாக கற்றல் & வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
சுவிஸில் பிறந்த நாளைக் கொண்டாடிய, அபநேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர் வழங்கிய “M.F” ஊடாக கற்றல் & வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
##########################
புலம்பெயர் (Swiss) வாழ் புளொட் தோழர்களின் செல்வப் புதல்வர்களான அபநேஸ் ஆனந்தன் ஒன்பதாவது பிறந்த நாளையும், பிரவீன் வரதன் பதினெட்டாவது பிறந்த நாளையும் முன்னிட்டு தமிழர் தாயகப் பகுதியெங்கும் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்கள் இருவருடைய பிறந்த நாள் நிகழ்வு ஒரே தினத்தில் வருவதால் இரண்டையும் முன்னிட்டு இலங்கை வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் தொழில் வாய்ப்பின்றி அன்றாட சீவியத்துக்கு சவால்களை எதிர்கொள்ளும் பல குடும்ப உறவுகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது,
அதேநேரம் நீண்டகால இடைவெளிக்குப் பின் பாடசாலைகளும் திறக்கப்பட்ட நிலையில் கல்வி கற்றல் உபகரணங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா நகர கிராமசேவகர் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சோபனா அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். அத்துடன் இன்றைய நாளில் பிறந்தநாளைக் காணும் திரைப்பட இயக்குநர் நடிகர் வினோத் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இவ்வுதவிகள் அனைத்தும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களான அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள், தந்தையை இழந்த குடும்பங்கள், கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்கள் போன்ற குடும்பங்களின் விபரங்கள் நகர கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரினால் உறுதி செய்யப்பட்டு, கிராமசேவையாளரின் சிபாரிசுக்கமைய உதவிகள் வழங்கப்பட்டது.
அத்தோடு வவுனியா பட்டானிச்சூர் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வேப்பங்குளம் கிராமத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக ஒரே காணியில் வசிக்கும் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், எவ்வித உதவியும் இதுவரை கிடைக்காத நிலையை கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரியப்படுத்தியதன் அடிப்படையில், அவர்களின் இடத்துக்குச் சென்று வீட்டு வாசலில் வைத்து அங்கே வசிக்கும் பல குடும்பங்களுக்கு உலருணவுப் பொதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட இருவருடைய பிறந்தநாள் நிகழ்வையும் ஒன்றாக செய்யும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகரில் ஒருவரான சுவிஸ்ரஞ்சன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பாதிக்கப்பட்டு உதவிகள் தேவைப்படுவோர்கள் அனைவரையும் ஒருமித்தாக அணைத்து, பிறந்தநாள் காணும் இரு குடும்பங்களின் நிதிப் பங்களிப்பில் உதவிகள் வழங்கப்பட்டது.
பிறந்தநாள் காணும் இருவருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உதவிகள் பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதோடு, பிறந்தநாள் காணும் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.”
தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
25.01.2021