“கைமாறு செய்ய வேண்டாம், சிறப்பான கல்வி எழுச்சியே போதும்”.. – “M.F” அலுவகத்தில் “செ.மயூரன்” (படங்கள்)
“கைமாறு செய்ய வேண்டாம், சிறப்பான கல்வி எழுச்சியே போதும்”.. – “M.F” அலுவகத்தில் “செ.மயூரன்” (படங்கள்)
##############################
“கைமாறு செய்ய வேண்டாம், சிறப்பான கல்வி எழுச்சியே போதும்”. என இன்றையதினம் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீவரத்தினம் சுதாகரன் (சுதா) அவர்களின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக வழங்கப்பட்ட கற்றல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றிய போது மேற்கண்டவாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்கள்.
அவர் மேலும் மாணவர்களுக்கு தனதுரையில்.. “இன்று இவ்வாறான நண்பர்கள் புலம்பெயர்ந்து வசித்தாலும் அவர்கள் முன்னர் வாழ்ந்த மண்ணையும் சொந்தங்களையும் மறக்காமல் மீண்டும் மீண்டும் எங்களை நோக்கிய, மண்ணை நேசிக்கும் குணத்தையே இன்றுவரை கொண்டிருக்கின்றார்கள் என்பதையே இன்றைய நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது”..
“தனது பிறந்த நாளை சுதாகரன் அவர்கள், அவர் வாழும் சுவிஸ் நாட்டிலேயே பெரும் எடுப்பில் செலவளித்து கொண்டாடி இருக்கலாம், அவர் அப்படி செய்தால் அதை யாரும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது..ஆனால் அதை சுதாகரன் செய்யவில்லை. தன் சொந்தமான உறவுகளாக எங்களை நினைத்து, உங்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு இந்த பெறுமதியான உதவியினைச் செய்துள்ளார்”.
“இதற்காக அவர் உங்களிடம் எதையும் கேட்கப் போவதில்லை, கேட்கவும் மாட்டார். இதை ஒழுங்குபடுத்திய மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எவ்விதமான பிரதியனுகூலமோ, எதிர்பார்ப்போ கேட்கப் போவதில்லை. இது சாதி, மத, இன, மொழி, அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகசேவை நிறுவனமாகும்”.
“சரி எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சுதாகரன் போன்ற நல்லுள்ளங்கள் தருகின்ற இவ்வாறான உதவிகளுக்கு அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களாகிய நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகின்றீர்கள்?.. நன்றாக சிந்தியுங்கள்.. இந்த உதவிகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்காக தமிழர்களின் எதிர்கால சிறப்பான கல்விச் சமுகத்தின் எழுச்சிக்காகவே. இதை உணர்ந்து கொண்ட ஒவ்வொரு மாணவர்களும் நாளைய நல்ல தலைவர்களே”..
“அன்பான மாணவ செல்வங்களே நன்றாக படியுங்கள், மேலும் மேலும் படியுங்கள்.. எங்கள் புலம்பெயர் உறவுகள் குறிப்பாக சுவிஸ் சுதாகரன் எனும் சுதா போன்ற தாய் மண்ணை, தாயுறவுகளை நேசிக்கும் நல்லுள்ளங்கள் உதவி செய்வார்கள். அதை நிச்சயமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து கொண்டு செல்லும் அதை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் படியுங்கள், நன்றாக திறமையாக படியுங்கள். கல்வியே தமிழர் அடையாளமாக மீண்டும் கல்வியால் எழுவோம்.. இந்த விழாவுக்கு வைத்தியக் கலாநிதி மதிதரன் அவர்களோடு வந்த்தையிட்டு மனம் மகிழ்கிறேன், இதனை நன்கு திட்டமிட்டு இயக்கும் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அண்ணனுக்கும் இதனை நிறைவேற்றும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும்” மனதார நன்றிகள் எனக் கூறினார்.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
31.01.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1