கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட, “கற்றல், உலருணவுப் பொதி” வழங்கல்.. (படங்கள்)
கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், உலருணவுப் பொதி” வழங்கல்.. (படங்கள்)
##########################!#
புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான திரு.திருமதி உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் இருபத்திரெண்டாவது திருமண நாளை முன்னிட்டு, தமிழர் தாயக பிரதேசத்தில் பல்வேறு உதவிநலத் திட்டங்களை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வறிய குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் கற்றல் வசதியினை மேம்படுத்தும் வகையில், கற்றலுக்கு தேவையான பொதிகள் வழங்கப்பட்டது.
அத்துடன் குடும்பத்தை உழைத்து காப்பாற்றிய மகன் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த தாய்க்கும், கணவரால் கைவிடப்பட்டு மகளுடன் தனித்து கடைகளுக்கு உணவு சமைத்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழும் தாயார் உட்பட சிலருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
“உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் திருமண நாளை” சிறப்பிக்கும் முகமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வருகை தந்த வவுனியா நகர கிராம சேவை உத்தியோகத்தர் திரு.மூத்ததம்பி கோபால் அவர்களும், வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும், வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான லயன் திரு.ரீ.கே. இராசலிங்கம் அவர்களும், பிரபல மேடை, இணையதள அறிவிப்பாளர் திரு.ஐங்கரமுத்து யோகநாதன் (யோகா) அவர்களும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.திருக்கேஸ்வரன் சுஜீவன் அவர்களும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான கவிஞர் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்து கொண்டு “தம்பதிகளான” திரு.திருமதி. உதயராஜா ரதீஷ்வரி அவர்களது திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றல் பொதிகளையும், உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் வாழ்த்துத் தெரிவித்த கௌரவ வவுனியா நகரசபை உறுப்பினர் திரு.ரீ.கே. இராசலிங்கம் “இவ்வாறான புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் போற்றத்தக்கது, வரவேற்கத்தக்கதாகும். இதனை ஒழுங்குபடுத்துவதென்பது மிகவும் சிரமமான விடயமாகும்”.
“இருப்பினும் புலம்பெயர் உறவுகள் தரும் நிதியினை சரியாக பயன்படுத்தி, பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” பாராட்டுகிறேன். குறிப்பாக இன்றைய நாளில் உதவி பெற்றவர்களோடு உரையாடிய போது தான் தெரிகிறது, இன்னும் சமூகத்தை நாம் சீர்படுத்தி அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு ஆக்கப்பூர்வமான நிகழ்வில் பங்கு கொண்ட திருப்தியில் என்னை அழைத்தமைக்கும் நன்றி கூறுகின்றேன்” என்றார்.
முடிவாக உதவி பெற்றுக் கொண்ட மாணவர்களும், தாய்மார்களும் விருந்தினர்களுக்கும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும்” நன்றி கூறி விடை பெற்றனர்.
(§§§ மேற்படி “திரு.திருமதி ராஜா ரதீஷ் தம்பதிகளின் திருமணநாளை” முன்னிட்டு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு விசேட உணவுடன் ஆனந்தமாக கொண்டாடப்பட்ட நிகழ்வு, செஞ்சோலை குடும்ப உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வு உட்பட இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவர்கள் சார்பான அனைத்து நிகழ்வின் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவரும்)
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
31.01.2021