;
Athirady Tamil News

மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

கனடா ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
#############################
சோகத்தோடும் வடுக்களோடும், எஞ்சிய காலத்தை எதிர்பார்ப்போடு காலம் கடத்தும் மறவன்குளம் கிராமத்தில் வாழும் வறிய நிலையில் வாழும் குடும்பத்தில் வாழும் நோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும், ஆதரவின்றி வாழும் தாய்மார்கள், விசேட தேவை உடையோர் என எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை “சமூகசேவகரும், ஊர்ப் பெரியவருமான ராதா அண்ணன்” அவர்களால் தேர்வு செய்ய்யப்பட்ட குடும்பங்களுக்கு இன்றையதினம் கனடாவில் திருமண நாளைக் கொண்டாடும் திரு திருமதி உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வேற்பாடுகளை நாம் குறித்த மறவன்குளம் கிராமத்தை அடைந்தவுடன், அந்த கிராமத்தின் விளையாட்டுக் கழகமான “விடிவெள்ளி” விளையாட்டுக் கழகத்தின் சார்பாக எம்மையும் உலருணவுப் பொதிகளையும் பொறுப்பெடுத்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் மிகத் துள்ளியமாக எமக்கு தந்தனர். அதேவேளை அவர்களைக் கொண்டே அவ்வூர் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக வாரத்திற்கு இரண்டு தடவை குருதி மாற்றம் செய்யும் நடுத்தர வயதுடைய ஒருவர், குருதியில் ஏற்பட்ட கிருமித் தொற்றினால் தனது இரு கால்களையும் இழந்த தாய், விசேட தேவையுடைய இளம் பெண், அத்தோடு வயதான தாய், வயதுவந்தும் திருமணம் முடித்துக் கொடுக்க முடியாத நிலையில், ஏழ்மையின் நிழலில் வாழும் வயோதிபத் தாய், நடக்க முடியாத நிலையில் உள்ள வயோதிபர் என முற்றிலும் சகல வழியிலும் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கே கனடா வாழ் “ராஜா ரதீஸ்” குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் அவர்களின் திருமண நாள் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..”

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

31.01.2021

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட, “கற்றல், உலருணவுப் பொதி” வழங்கல்.. (படங்கள்)

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.