;
Athirady Tamil News

கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத் தேவையை “M.F” ஊடாக பூர்த்தி செய்த, சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)

0

கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத் தேவையை “M.F” ஊடாக பூர்த்தி செய்த, சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் “சுதா செல்வி” தம்பதிகளின் திருமணநாளை முன்னிட்டு கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது..
#############################
சுவிசில் வாழும் சுதாகரன் கிருபாதேவி(செல்வி) தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு பல்வேறு சமூகப் பணிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் செய்யப்பட்டது. தமது திருமணநாள் தொடர்பாக அவர்களின் நிதிப் பங்களிப்பிலே மேற்படி நிகழ்வுகள் ஒழுங்கமைத்து நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர கிராமசேவையாளர் பிரிவில் உள்ள கற்குழி கிராமத்தின் ஞானம் பாலர் பாடசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக அதன் ஆசிரியர் திருமதி இராஜேந்திரன் கோகிலராணி அவர்கள் கூறினார். குறிப்பாக “முன்பள்ளிக் குழந்தைகள் தங்களது புத்தகப் பையினையோ, தண்ணீர்ப் போத்தலையோ கவனமாக வைத்து எடுத்துச் செல்ல பொருத்தமான றாக்கைகள் (ஸ்ராண்ட்) இல்லை என்ற தேவையை பலரிடம், பல்வேறு தடவை சொல்லியதுடன் ஒருசிலர் அதனை தாம் தருவதாக ஊர்ஜிதம் செய்த கடிதங்களையும் வாங்கிச் சென்றும், இதுவரை அவர்களால் அத்தேவை பூர்த்தி செய்து தரவில்லை என்பதே உண்மையாகும்” என்றார்.

“ஆனால் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் இந்த உதவி கேட்டு, இரண்டே நாட்களில் சுவிலில் வசிக்கும் திரு.திருமதி சுதா செல்வி அவர்களது திருமண நாள் பங்களிப்பில் செய்து தந்துள்ளார்கள். இதனை ஏற்பாடு செய்து தந்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்”, இதுக்குரிய நிதி உதவியளித்த சுவிஸ் வாழ் “சுதா,செல்வி” தம்பதிகளுக்கும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து முன்பள்ளி ஆசிரியை கேட்டுக் கொண்டபடி மாணவர்களின் புத்தகப்பை மற்றும் தண்ணீர்ப் போத்தல்களை கொழுவி பாதுகாப்பாக வைத்திருக்கும் இரும்பிலான, நிலையான கொளுக்கி வசதி கொண்ட றாக்கையை (ஸ்ராண்ட்) கற்குழி ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறங்காவல்சபையின் தலைவர் திரு முருகையா விஜிகரன் அவர்களால், கற்குழி சமுர்த்தி சங்கத்தின் செயலாளர் திருமதி வின்சன் மேரி அவர்கள் மற்றும் வருகை தந்த பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்கள் சூழ முன்பள்ளி ஆசிரியை திருமதி இராஜேந்திரன் கோகிலராணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பல வருடங்களாக இதை யார் தருவார்கள்? என நாம் எண்ணியிருந்த வேளையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர்” நாம் நினைத்ததை விட அழகான, உறுதியான றாக்கையினை செய்து தந்தமைக்கும், திருமண நாளை சிறப்பாக கொண்டாடும் திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இதனை ஒழுங்குபடுத்தித் தந்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினருக்கு பிள்ளைகள் பெற்றோர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

கல்வி அபிவிருத்தியில் முன்பள்ளிப் பருவம் மிக மிக முக்கியமானதாகும். அவ்வாறான தேவையுடைய முன்பள்ளிக்கு, சுவிஸ் வாழ் திருதிருமதி சுதா செல்வி தம்பதிகளின் திருமண நாளன்று இவ்வாறான உதவி செய்த திருப்தியோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர், சுதா செல்வி தம்பதிகள் வழங்கும் மற்றுமோர் உதவியை வழங்க மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களை நோக்கி செல்வதற்கு புறப்பட்டு சென்றனர்.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..”

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

05.02.2021

சுவிஸில் வதியும் சுதா அவர்களது பிறந்தநாளில், “M.F” ஊடாக “கற்றல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்”.. (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.