மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள்.
மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள்.
##############################
இன்றைய நாளில் தங்களது திருமண நன்னாளைக் கொண்டாடும் சுவிஸ் நாட்டில் வாழும் திரு. திருமதி சுதாகரன் (சுதா) கிருபாதேவி (செல்வி) தம்பதிகள் தங்களது நிதிப் பங்களிப்பில் மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு விசேட உணவுவகைகளை வழங்கி இனிதாக கொண்டாடினார்கள்.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் மணிப்புரம் ஆனந்த இல்ல வரசித்தி விநாயகர் ஆலயத்தில் “சுதா செல்வி தம்பதினரின் வாழ்வு சிறக்கவும், தம்பதிகளும் அவர்தம் பிள்ளைகளும் நோய்நொடியின்றி தேக ஆரோக்கியத்துடன் வாழ” தேவாரபாராயண கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு வரசித்தி விநாயகருக்கு விசேட பூசையும் இடம்பெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து ஆனந்த இல்லம் தற்போது பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு புதுப் பொலிவோடு காணப்படுகிறது. விசேடமாக அமைக்கப்பட்ட உணவு சாப்பிடும் அறையில் சுதா செல்வி தம்பதிகளின் நிதியனுசரணையில் விசேடமாக அன்னையர்களுக்கு திருமண விருந்தோம்பல் இடம்பெற்றது.
“எந்த நிகழ்வாக இருந்தாலும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர்” ஆனந்த இல்லத்தை மறக்காது எங்களோடு பயணிக்கும் உறவாக இருப்பது நம்பிக்கையளிக்கிறது. மேலும் இங்குள்ள ஒருசில குறைகளையும் நீக்க மாணிக்கதாசன் நற்பணி மன்றம் முன்வர வேண்டும்” என இல்லத்தின் நிர்வாகியான சமூக சேவகி திருமதி ஜெயா அக்கா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். முடிவாக ஆனந்த இல்லத்து அன்னையர்கள் திரு திருமதி சுதா செல்வி தம்பதிகள் நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தினார்கள்
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..”
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
05.02.2021