திருமண பந்த நாளில் “M.F” ஊடாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” வழங்கிய, சுவிஸ் “சுதா,செல்வி” (படங்கள் & வீடியோ)
திருமண பந்த நாளில் “M.F” ஊடாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” வழங்கிய, சுவிஸ் “சுதா,செல்வி” (படங்கள் & வீடியோ)
சுவிஸ் சுதா செல்வி திருமண பந்த நாளில் கல்விக்கு கரம் கொடுப்போம். -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
#############################
சுவிஸ் நாட்டில் வாழும் திரு திருமதி சுதாகரன் (சுதா) கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் இருபத்தேழாவது திருமணநாளை முன்னிட்டு, அவர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில் பல்வேறு வகையான உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” செய்து வருகிறது.
இன்று 05.01.2021 வெள்ளிக்கிழமை காலையில் ஞானம் பாலர் பாடசாலைக்கு பெறுமதியான இரும்பிலான றாக்கை வசதி (ஸ்ராண்ட்) கொடுக்கப்பட்டு, மதியம் மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்க்கு விசேடமான விருந்துணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து.. வீட்டு வறுமையினால் கற்றல் செயற்பாடுகளில் பல சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தந்தை இல்லாது தாயின் அன்றாட கூலித் தொழிலில் வாழும் குடும்பங்கள், தந்தையும் தாயும் பேச முடியாத விசேட தேவையுடைய குடும்பம், தந்தை தாய் பிரிந்து வாழ்வதால் இடர்களை எதிர்கொள்ளும் பிள்ளைகள், வறியநிலையில் வாழும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் என பலதரப்பட்ட, ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு “உலகப்புகழ் ஆன்மீகப் பேச்சாளரும், சைவ சமய சொற்பொழிவாளருமான” காரையின் புதல்வன் தமிழருவி என ஒற்றைச் சொல்லில் உலகப் புகழ் பெற்ற திரு த. சிவகுமாரன் ஐயா அவர்களின் திருக் கரங்களினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்பின் தமிழருவி ஐயா தனதுரையில் “சுவிசில் வாழும் இத்தகைய சிறப்பான செயலைச் செய்யும், திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கு இங்கிருந்து மனதார வாழ்த்துகிறேன். பலதடவை இவ்வாறான நிகழ்வுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் அழைத்த போது வராத சந்தர்ப்பம் “சுதா செல்வி தம்பதிகளின் திருமண நாளன்று” எனக்கு வந்திருக்கிறது. அது அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாக நினைக்கிறேன். “நீண்ட வாழ்வும், நிம்மதியான உறவும், தேக ஆரோக்கியமும், நிம்மதியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.
இதேவேளை “உண்மையில் இவ்வாறான பெரியவர்கள் எமது மன்றத்தின் அலுவலகத்திற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழருவி அவர்களின் ஆசியை வணங்குகின்றோம். வருகை தந்து மாணவர்களுக்கு கற்றல் பொதிகளை வழங்கி வைத்தமைக்காக மாணவர்கள் சார்பிலும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பிலும், சுவிஸில் வாழும் சுதா செல்வி தம்பதிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.
அத்தோடு “இன்றைய திருமணத் தம்பதிகளான சுதா செல்வி மண இணையினர் வழங்கிய நன்கொடையால் பல இதயங்கள் மகிழ்வு கொண்டனர் .உதவி பெற்றுக் கொண்ட இதயங்கள் சார்பாக எல்லாம்வல்ல இறைவன் என்றும் உங்களோடு இருப்பான் என வாழ்த்தி வணங்குகின்றோம்”.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..”
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
05.02.2021
மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள்.