தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ)
தாயகத்து மாணவர்களுக்கு, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ)
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக உதவினார் சுவிஸ் ஆதி.
##############################
சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் புதல்வன் ஆதி தனது பிறந்த நாளான 12.02.2021 இன்று வெள்ளிக்கிழமையன்று தாயகத்தில் வாழும் பல சொல்லொனாத் துயரங்களை வடுக்களாக, ரணங்களாக மனதில் சுமந்து கொண்டு அன்றாட சீவியத்துக்கே அல்லல்படும் குடும்பங்களில், பாடசாலை செல்லும் மாணவ மாணவிகளுக்கு “தனது நிதி பங்களிப்பில்” கற்றல் உபகரணங்களை வழங்கும்படி, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்று எமது அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பரசங்குளம், லைக்கா குடியிருப்பு, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பாடசாலை முடிந்தவுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பிற்பகல் 03.30 மணிக்கு வருகை தந்தனர்..
சுவிஸில் வதியும் ஆதியின் “மாணவர்களுக்கான கற்றல் பொதி” வழங்கி வைப்பதற்கு விசேடமாக வவுனியா நகரசபை உப தவிசாளரும், பிரபல வர்த்தகருமான தேசமான்ய த. குமாரசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது, “கல்விக்கான போராட்டமே இன விடுதலைக்கான போராட்டமாக பரிணமித்தது. அவ்வாறானதொரு போராட்ட சக்தியாக ஆரம்ப காலத்தில் போராடிய ஒப்பற்ற விடுதலை வீரனே தளபதி தோழர் மாணிக்கதாசனாவார். இன்று அவரின் பெயரில் இயங்கும் இம்மன்றமானது மீண்டும் இம்மண்ணில் கல்விக்கான புரட்சிகர மாணவ சமூகத்தை உருவாக்க இவ்வாறதொரு செயல்முறைத் திட்டத்தை முன்னெடுப்பதையிட்டு மகிழ்ந்து வணங்குகிறேன்” எனவும்,
அதேவேளை “இதனைப் பெறும் மாணவர்கள் உங்களது உச்சப் பயன்பாட்டை கல்வியில் வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், அதுவே நீங்கள் உங்களுக்கு உதவுவோருக்கு செய்யும் கைமாறாக அமையும்”, அதேநேரம் “இன்றைய பிறந்த நாள் காணும் ஆதி போன்றவர்களின் இவ்வாறான உதவிகள் எங்களை வாழ வைக்கும் உந்துசக்தியாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து வவுனியா நகரசபை உபதலைவர் தேசமான்ய குமாரசாமி அவர்களால் அப்பியாசப் பொதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
முடிவில் விருந்தினரும், பயனாளர்களும் மற்றும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” செல்வன் ஆதிக்கு “நீண்ட ஆயுளுடன், சகல செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
12.02.2021