பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)
பிள்ளைக்காக “M.F” ஊடாக, தென்னம்பிள்ளைகள் வழங்கிய பெருந்தகைகள்.. குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ)
பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகள்.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
############################
சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவு மற்றும் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்சினி தம்மதிகளின் ஏகபுத்திரி செல்வி லக்சியாவின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக பல்வேறு சமுகப் பணிகள் செய்துள்ளனர்.
திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் தமது செல்வியின் மங்கல மஞ்சள் நன்னீராட்டு விழாவின் சிறப்பான மகிழ்வுக்காக வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்திற்கு நல்லின தென்னங்கன்றுகளின் ஒரு தொகுதியினை இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டதுடன், இன்றைய நாளின் நினைவாக தென்னங்கன்று நிலத்தில் நடுகையும் செய்யப்பட்டது.
முன்னதாக புதிய சீர்படுத்தப்பட்ட ஆனந்த இல்லத்தின் பணிப்பாளர் சபையின் தூரநோக்கு அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டுக்காக தென்னந்தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேவேளை தமது பிள்ளையின் சந்தோசமான தருணத்தில் அதைக் கொண்டாடும் வகையில் பிள்ளைக்காக நல்லின தென்னம்பிள்ளைகளின் ஒரு பகுதியினை ஆனந்த இல்லத்து தென்னந்தோட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மட்டுநகரில் வவுணதீவில் உள்ள “பாரதி முன்பள்ளியினை” தத்தெடுத்து, முன்பள்ளிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எதிர்வரும் நாட்களில் வழங்கவுள்ளதுடன் எதிர்வரும் 18.02.2021 அன்று அந்த முன்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் அவர்கள்தம் பெற்றோர்களுக்கும் விசேட விருந்துணவினை வழங்க முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான பல்வேறு சமுகநலத் திட்டங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மூலமாக நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், ஏற்கனவே இவ்வாறான பல்வேறு உதவிகளை புங்குடுதீவு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா பிரதேசங்களில் திரு.திருமதி கிருஷ்ணகுமார் தர்ஷினி தம்பதிகள் செய்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இதேவேளை இன்றையதினம் நல்லின தென்னம்பிள்ளையின் நாற்றுவகையின் ஒரு பகுதியினை பெற்றுக் கொண்ட அம்மாக்களில் ஒருவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், “எங்களுக்கான உதவும் அமைப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உள்ளது. அவர்களின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வை வரவேற்பதுடன், இதனை செய்துதந்த தம்பதிகளை மனதார பாராட்டுவதுடன், மஞ்சள் நன்னீராட்டு விழாவின் பிள்ளை லக்சியா அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனை வேண்டுகிறோம்” என்றார்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
13.02.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1