;
Athirady Tamil News

வவுனியாவில் “M.F” ஊடாக, “புளொட்” செயலதிபரின் ஜனனதின நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

0

வவுனியாவில் “M.F” ஊடாக, “புளொட்” செயலதிபரின் ஜனனதின நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)

புளொட் செயலதிபர் ஜனனதினம் தாயகத்தில் மிக எழுச்சிபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###########################

மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபக செயலதிபருமான தோழர் முகுந்தன் அன்றில் பெரியையா என அழைக்கப்படும் தோழர்.உமா மகேஸ்வரன் அவர்களது ஜனன தினத்தை முன்னிட்டு தாயகப் பகுதியெங்கும் சமுகநலப் பணிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

“பெரியையா” எனும் புளொட் செயலதிபர் தோழர்.உமாமகேஸ்வரனின் பிறந்த நாளான இன்று 18.02.2021 காலை 10.00 மணியளவில் வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணப் பொதிகளும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கிராம மக்களுக்கும் நல்லின பழமரக் கன்றிகளுப் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக அறநெறி பாடசாலை ஆசிரியையான திருமதி. கமலதேவன் சிவரஞ்சினி அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு தொடர்பு கொண்டு, மாணவர்கள் விபரங்களும், அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களின் தொகையினையும் தெரிவித்ததின் அடிப்படையில் மேற்படி நிகழ்வுகள் ஆலய சுற்றாடலில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வுகள் சீராக நடைபெற்றது. இந்நிகழ்வுகள் அனைத்தும் கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிதிதிகளால் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய அறங்காவல்த் தலைவர் திரு. விஸ்வநாதன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப தலைவர் திரு.பொன்னையா குணசேகரம், செயலாளர் திரு.சிவரட்டினம் சிவகுமார் (பாபு), ஆலய சிவபூசகர் விஸ்வநாதன் அவர்களும், பிரதம குருக்களின் பாரியார் ஐயரம்மாவும் கலந்து கொண்டு அறநெறி மாணவர்களுக்கும் கற்கள் பொதியினையும், பழமரக் கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.

இந்திகழ்வுகள் யாவற்றையும் தொகுத்து வழங்கினார் சங்கத்து செயலாளர் பாபு என அழைக்கப்படும் சிவகுமார் அவர்கள். சிவகுமார் அவர்கள் தனது உரையில் “மண்ணின் விடுதலைக்கு வித்தாகிப் போனவர்களது ஜனன மற்றும் நினைவுநாளில் கல்வியில் அக்கறை கொண்டு எமது கிராமத்தை தெரிவு செய்தமைக்காக தனதும், கிராமத்தினதும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர் தனதுரையில் “இக்கிராமமானது வவுனியாவின் தொன்மை வரலாற்றைக் கொண்ட கிராமமாகும், யுத்தம் இடப்பெயர்வு அதனால் ஏற்பட்ட வறுமை என்பனவற்றால் இன்று பின்தங்கிய பல தேவைப்பாடுகள் நிறைந்த கிராமமாக உள்ளது, இந்த சமயத்தில் இவ்வாறான உதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் செய்வதென்பது எமக்கு மிக ஆறுதல் தரும் விடயமாகும். தொடர்ந்தும் நாம் உங்களோடு பயணித்து இந்த மாணவர்களில் நல்வாழ்வுக்கு உந்துசக்தியாக நின்று எதற்காக உரிமைப் போர் தொடங்கப்பட்டதோ அந்த கல்விப் புரட்சியை ஏற்படுத்த பாடுபடுவோம்” என்றார்.

இதேவேளை உதவி பெற்றுக் கொண்ட பயனாளிகளும், கலந்து கொண்ட விருந்தினர்களும் மறைந்த தோழர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலியுடன் கூடிய ஜனனதின வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் இவற்றுக்கான நிதி உதவி அளித்தோருக்கும், நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வு உட்பட இன்றையதின நிகழ்வுகளுக்கான நிதிப் பங்களிப்பை புலம்பெயர் புளொட் தோழர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. நிதிஉதவி அளித்தோர் விபரம்..
1) முல்லைத்தீவைச்   சேர்ந்தவரும், தற்போது கனடாவில் வசிப்பவருமான தோழர்.வினோ எனும் நிரஞ்சன் பொன்னம்பலம்
2) யாழ்.உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் வசிக்கும் தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா),
3) வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் அமெரிக்கக் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.கோபி;
4) வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் பிரித்தானியாக் கிளையின் தோழருமான தோழர்.நிரோஷன் எனும் நிரோஷன் விஜேந்திரநாதன்;
5) புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான.., தோழர்.ரமணன் எனும் றுஷாந்த்; தோழர்.சித்தா எனும் சதாசிவம் சித்திரவேல்; தோழர்.தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா; தோழர்.வரதன்; தோழர்.புவி; தோழர் சுவிஸ்ரஞ்சன்; தோழர்.அசோக் எனும் அசோகராஜா; தோழர்.பிரபா எனும் கருணாகரன், தோழர்.பாபு எனும் சித்திரவேல்; தோழர்.குமார் எனும் கிருஷ்ணகுமார்; தோழர். பேர்ண் சிவா எனும் அம்பிகாபதி கலைச்செல்வம்; தோழர். பேர்ண் தயா எனும் கந்தவேலு தயாபரன்; தோழர்.அன்ரன் எனும் “பரிசுத்த மூப்பர் பிலிப்” ஆகிய திரு.லோகராஜா; தோழர்.மோகன் எனும் பற்பநாதன் அருட்சோதி; தோழர்.குழந்தை எனும் கைலாசநாதன்; தோழர்.தயா (புங்குடுதீவு) எனும் தயாபரன்; தோழர்.குணா எனும் குணசீலன்; தோழர்.குமார்அண்ணர் எனும் இரத்னகுமார்; தோழர்.ஜெகன்அண்ணர் எனும் ஜெகநாதன்; ஆகியோருக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

18.02.2021

You might also like

Leave A Reply

Your email address will not be published.