கனடா உறவின் நிதியில், துவிச்சக்கர வண்டி& வாழ்வாதார உதவிகள் வழங்கிய “M.F”.. (படங்கள் & வீடியோ)
கனடா உறவின் நிதியில், துவிச்சக்கர வண்டி& வாழ்வாதார உதவிகள் வழங்கிய “M.F”.. (படங்கள் & வீடியோ)
ஆனந்தபுரத்தில் தந்தையில்லாத பிள்ளைக்கு துவிச்சக்கர வண்டி வழங்கியது.மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
#############################
இறுதி யுத்ததில் தந்தை காணாமல் ஆக்கப்பட்ட நிலையில்.தாயின் அரவணைப்பில் தாயின் அன்றாட உழைப்பில் வாழும் பிள்ளைக்கு துவிச்சக்கர வண்டி இன்று இறுதி யுத்தம் நடந்த பிரதேசமான புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவுவைச் சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான அன்பர் ஒருவர் தனது பெயரையோ அல்லது இன்றைய நாளில் தனது 21வது பிறந்த நாளைக் கொண்டாடும் தனது மகளின் பெயரையோ சொல்லவோ, பதிவுகளில் எழுதவோ வேண்டாம் என்ற அன்புக் கட்டளைக்கிணங்க அவரது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” மூலமாக துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்துக் கூறுகையில், “பாடசாலைக்கும் எங்களது வீட்டுக்குமான தூரம் ஐந்து கிலோ மீட்டராகும். ஒரு பழைய சயிக்கிளில் அம்மா ஏத்திக் கொண்டு தார் ரோட்டில விடுவா, அங்க இருந்து பஸ்சில போய் வாறனான்.. சிலவேளை போக ஏலாம போயிரும், இப்ப அந்த பழைய சயிக்கிளும் பழுதாப் போச்சுது.. நடந்துதான் பள்ளிக்கூடம் போய் வாரது.. இப்ப பெயரே தெரியாத அக்கா எனக்கு அவான்ட பிறந்தநாள் பரிசா எனக்குத் தந்த பரிசான சைக்கிள் இருக்கிறதால இனி பயமில்லாம பள்ளிக்கூடம் போய் வரலாம்” என சந்தோசம் மேலிட தனக்கே உரிய மொழி நடையில் உதவி பெற்றுக் கொண்ட மாணவியான அனாமிகா எங்களிடம் தெரிவித்தார்.
அத்தோடு மேலும் பல உதவிகள் கனடா அன்பரால் அவரின் மகளின் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பு எழுகை வீதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் மண்ணின் விடுதலைக்கு ஆகுதியாக்கிய வீரத்தாய் கேட்டுக் கொண்டதற்கிணங்க உலருணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல.. மயில் குஞ்சன் குடியிரும்பு கிராமத்தில் யாருமற்ற நிலையில் மாதாந்தம் சிறிய அளவில் கிடைக்கும் வயோதிப கொடுப்பனவைக் கொண்டு வாழ்ந்து வரும், அதுவும் பிள்ளைகளையும் கணவரையும் கொடிய யுத்தத்திற்கு பலி கொடுத்து தனித்து வாழும் தாய்க்கு உலருணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.
பெயர் விரும்பாத பேருள்ளம் தந்த கொடையை சரியானவர்களுக்கு கொண்டு சென்ற திருப்தியில், ஆனந்தபுரத்திலிருந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பணிக் குழுவினர் விடைபெற்றோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
19.02.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1